கோவிட் ஆரம்பித்ததிலிருந்து குழந்தைகளுக்கு mobile phone பார்க்கும் பழக்கம் மற்றும் நேரம் அதிகமாகிவிட்டது. கோவிட் காலத்தில் அவர்களின் படிப்பை படிப்பதற்கே மொபைல் போன்கள் மற்றும் tablet தேவைப்பட்டது. அதுவே அவர்களின் screen time உம் அதிகரிக்க காரணம் ஆகிவிட்டது. இப்பொழுது மொபைல் ஃபோன் பயன்படுத்தத் தெரியாத எந்த குழந்தையும் இல்லை. பெரியவர்களை விட சாதுரியமாக இவர்கள் gadgets ஐ பயன்படுத்துகின்றனர். இன்னும் சில பெற்றோர்கள் ஒன்றரை வயது குழந்தையிடம் சாப்பாடு ஊட்டுவதற்காகவே மொபைல் ஃபோன்களை கொடுத்து பழக்கி உள்ளனர். நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டிய காலம் போய் மொபைல் போனில் நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளிடம் மொபைல் போன் கொடுப்பதினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டுரையில் பார்க்கலாம்.
குழந்தை பருவம் மிகவும் முக்கியம்!
சில குழந்தைகளை சோசியல் மீடியாவில் வைரல் ஆக்க வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் வரும் வசனங்களையும் கார்ட்டூனில் வரும் அதிக பிரசங்கித்தனமான பேச்சுகளையும் நடிக்க வைத்து அதனால் வியூஸ் அதிகரிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் இக்காலத்து பெற்றோர். தங்களால் முடியாததை தங்கள் குழந்தைகள் செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலே அவர்களை இதுபோன்ற செயல்களை செய்ய வைக்கிறார்கள். குழந்தைகள் உடல் ரீதியாக பல இன்னல்களை என்ற சந்தித்து வருகின்றனர். இன்னும் சில குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தையே தொலைத்து விட்டு இந்த மொபைல் உலகத்தில் வந்து விடுகின்றனர். குழந்தை குழந்தையாகவே இருந்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால் இன்று இருக்கும் பல குழந்தைகளை பெற்றோர்களே இம்மாதிரி செயல்களை செய்து கெடுத்து விடுகின்றனர். அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்வது என்பது வேறு நம்மால் முடியாததை அவர்கள் மேல் திணிப்பது என்பது வேறு. இதைப் புரிந்து பெற்றோர்கள் தான் நடந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் தான் குழந்தைகளின் role model:
நீங்கள் இருவரும் மொபைல் போனை பார்ப்பதையே பழக்கமாகக் கொண்டுள்ளீர்கள் ஆனால் உங்கள் குழந்தைகளும் அவற்றை செய்யும். குழந்தைகள் வளர்வது பெற்றோர்களின் செயல்களையும் பழக்க வழக்கங்களையும் பார்த்துதான். எனவே அவர்கள் அருகே இருக்கும் பொழுது அவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். அதை விட்டு இம்மாதிரி செயல்களை நீங்கள் செய்தால் அவர்களின் வருங்காலத்தில் நிறைய இலக்க நேரிடும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கான boundaries ஐ அமைத்து அதன்படி நேரத்தை ஒதுக்கி வளர்க்க பழகுங்கள். அவர்களை மொபைல் போன் கேட்டு அடம் பிடித்தால், உடனே கொடுத்து விடாமல், புரிய வையுங்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் நிலையில் இருந்து புரிய வைக்க முயலுங்கள்.
நம் வாழ்வில் தொழில்நுட்பத்தின் பங்கு என்பது கண்டிப்பாக வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இது வரமா சாபமா என்று கேட்டால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். எனவே குழந்தை பருவத்தின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு தேவையான நேரங்களில் மட்டும் மொபைல் ஃபோன்களை கொடுத்து மற்ற நேரங்களில் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாட வையுங்கள்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/how-to-spend-quality-time-with-husband-and-wife
https://tamil.shethepeople.tv/society/8-things-you-should-have-in-your-handbag-1377354
https://tamil.shethepeople.tv/society/how-to-get-rid-of-inferiority-complex-1362923
https://tamil.shethepeople.tv/health/know-the-reason-for-your-acnepimples-1379039