Advertisment

Interview இல் எப்படி confident ஆக இருப்பது?

Interview இல் நீங்கள் நம்பிக்கையாக பேசினால் கண்டிப்பாக உங்கள் திறனுக்கு ஏற்ற வேலை உங்களுக்கு கிடைக்கும். ஆனால் எப்படி அதனை சந்திக்கப் போகிறோம் என்ற பயத்திலேயே பலருக்கு அந்த சமயத்தில் பதட்டம் வந்து விடுகிறது. அதைப் போக்க என்ன வழி?

author-image
Pava S Mano
New Update
Interview-confident

Image is used for representational purpose only

உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால், அந்த துறையில் உங்களுக்கு அனுபவம் இல்லை என்றாலும், உங்களுக்கு தெரிந்ததை மற்றும் உங்களால் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கப் போகும் நன்மையை confident ஆக சொல்லும் பொழுது எந்த நிறுவனமும் உங்களை கண்டிப்பாக interview இல் தேர்வு செய்வர். 

Advertisment

ஏன் confident அவசியம்?

Interview-confident

உதாரணத்திற்கு நீங்கள் ஒருவரை வேலைக்காக தேர்வு செய்யப் போகிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அந்த நிறுவனத்தின் தேவைகள் என்ன என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதற்கு நீங்கள் சரியானவரா என்பதை அனைத்து கண்ணோட்டங்களில் இருந்தும் நீங்கள் யோசிக்க வேண்டி இருக்கும். நீங்கள் அந்த interview இல் இரண்டு நபரை தேர்வு செய்கிறீர்கள். அதில் ஒருவர் நம்பிக்கையாக மற்றும் உறுதியாக பேசுகிறார். ஆனால் மற்றொருவர் அனுபவமே இருந்தாலும் பதட்டத்துடனும் சந்தேகத்துடனும் அவர்களின் திறன்களை வெளிப்படுத்துகிறார். இப்பொழுது நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள்? இது குழப்பத்தில் தான் அனைவரும் இருப்பர். ஆனால் அந்த இடத்தில் நீங்கள் தேர்வு செய்ய தகுதியானவர்களாக இருக்கிறீர்களா என்பதை நீங்கள் நம்பிக்கையாக பேசுவதில் மட்டும்தான் இருக்கிறது. இதனால்தான் உங்கள் திறனை நீங்கள் நம்பினால் தான் அது அந்த நிறுவனத்திற்கு உபயோகமாக இருக்கும். திறனை கற்றால் மற்றும் போதாது, அதனை எப்படி வாழ்வில் உபயோகிக்க போகிறோம் என்பதை உணர வேண்டும்.

Advertisment

எப்படி confident ஆக உணர்வது?

Interview-confident

Interview என்றாலே அனைவருக்கும் ஒரு பதட்டம் வந்துவிடும். அது பொதுவாக இருப்பது தான். ஆனால் அதையும் தாண்டி நமது குறிக்கோள் அந்த வேலையை தக்க வைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய யோசனை மட்டும் தான். அதற்கு நாம் எப்படி தயாராக போகிறோம் என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். மற்றவர்கள் எப்படி தயார் ஆவார்கள்,  அவர்களில் இருந்து ஒரு படி மேல் நாம் எப்படி அதற்கு தயாராக வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். எந்த வேலையையும் நீண்ட நாள் தக்க வைத்துக் கொள்வதற்கு அந்த வேலையில் மற்றவர்களிடம் இருந்து நாம் தனித்துவமாக என்ன செய்கிறோம் என்பதை மட்டுமே நிறுவனங்கள் பார்க்கும். நம் தனித்துவத்தை சரியாக வெளிப்படுத்தினால் எந்த வேலையையும் நம் வசம் ஆக்கலாம்.

Advertisment
  • Interview செல்வதற்கு முன் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக இருங்கள்.

  • படபடப்பாக இருப்பதை வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள்

  • Eye contact செய்யுங்கள். இதனால் நீங்கள் எந்த அளவிற்கு confident ஆக இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியும்

  • சிலர் self introduction இல் படபடப்புடன் பேசி என்ன சொல்ல வருகிறோம் என்பதை தெளிவாக கூறாமல் உளறி விடுவார்கள். எனவே நிறுத்தி நிதானமாக பேசுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

  • Interview நடக்கும் பொழுது உங்களை மனதால் உத்வேகப்படுத்திக் கொண்டே இருங்கள்.

  • உங்களின் வலிமையான திறன் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதனை ஒட்டிய பேச்சை மட்டுமே பேசுங்கள்

  • Interview செல்லும் முன் நீங்கள் ஒரு முறை கண்ணாடி முன் நின்று பேசிப் பாருங்கள். இப்படி செய்வதால் உங்களுக்கே சில திருத்தங்களை திருத்திக் கொள்ள முடியும்.

  • அதேபோல் அவர்கள் கேள்வி கேட்கும் பொழுது எந்த பதட்டமும் இல்லாமல் தெளிவாக கேள்வியை புரிந்து smart ஆக பதில் சொல்லுங்கள்.

இதைப் பின்பற்றினால் கண்டிப்பாக வெற்றி உங்கள் வசம் தான். வாழ்த்துக்கள்!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/how-to-spend-quality-time-with-husband-and-wife

https://tamil.shethepeople.tv/health/know-the-reason-for-your-acnepimples-1379039

https://tamil.shethepeople.tv/society/what-is-the-right-gadget-age-for-children-1380026

https://tamil.shethepeople.tv/society/8-things-you-should-have-in-your-handbag-1377354

 

interview confident
Advertisment