இன்று பல காரணங்களால் காதலர்களும் சரி திருமணமான தம்பதியர்களும் சரி long distance relationship இல் இருந்து வருகின்றனர். ஆனால் அதனை எப்படி கொண்டு செல்வது இன்னும் குழப்பம் அனைவரின் மனதிலும் இருந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் உங்கள் காதலை தேர்ந்தெடுத்து விட்டீர்கள் மற்றும் அதனை தவற விடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால் நீங்கள் இந்த உறவை எவ்வளவு தொலைவில் இருந்தாலும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் இதனை தேர்வு செய்யலாம். பல நாட்கள் நேரில் பார்க்க முடியாமல் பேச முடியாமல் இருந்தாலும் கூட அந்த காதலின் உணர்வு அப்படியே இருக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த உறவை தொடரலாம். ஆனால் எப்படி தொடர போகிறோம் என்ற குழப்பம் உங்களிடம் கண்டிப்பாக இருக்கும். அதற்கான தீர்வு இதோ!
தினமும் பேசுங்கள்!
தொலைதூர உறவில் இருக்கும் பொழுது இருவருக்கும் ஆன புரிதல் என்பது மிகவும் அவசியம். எவ்வளவு busy ஆக இருந்தாலும் உங்கள் துணைவியோ துணைவரோ அழைக்கும் பொழுது தொலைபேசியை எடுத்து பேசுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக உங்களை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த மாதிரி தொலைபேசி அழைப்புகளை எடுக்காமல் இருப்பதால் கூட பல தொலைதூர உறவுகளில் பிரச்சனைகள் வருகிறது. நீங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தாலும் உங்களின் குரல்களை கேட்டாவது உங்கள் மனதை நீங்கள் திருப்தி படுத்திக் கொள்ளலாம். எனவே எந்த காரணத்திற்காகவும் தொலைபேசியை எடுக்காமல் இருந்து விடாதீர்கள். வேலை நிமித்தமாக நீங்கள் வெளியே செல்கிறீர்கள் அழைப்பை ஏற்க முடியாது என்றால் அதனை முன்னரே அவர்களிடம் தெரிவித்து விடுங்கள். எந்தெந்த நேரம் நீங்கள் அவர்களுக்கு நேரம் செலவிடப் போகிறீர்கள் என்பதை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
நம்பிக்கைதானே எல்லாம்!
Long distance relationship இல் இருப்பவர்களுக்கு முதலில் தேவை ஒருவரின் மேல் இருக்கும் நம்பிக்கைதான். அதேபோல் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் இருப்பது மிகவும் அவசியமாகும். உங்களுக்கென்று ஒரு மனசாட்சி இருக்கிறது அதன்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள். சந்தேகம் வரக்கூடிய சந்தர்ப்பம் கண்டிப்பாக நிகழும். அந்த சமயத்தில் உங்களின் கேள்விகளை கேட்டு அதற்கான விடையை தெரிந்து கொண்டு அத்தோடு அதை விட்டு விடுங்கள். ஏனென்றால் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை விடை கிடைத்த பின்பும் நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் உறவு பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் நான் சொல்வது இருவரும் ஏமாற்றாமல் ஒருவரின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.
உணர்ச்சிக்கு மதிப்பு கொடுங்கள்!
இருவரும் தொலைதூரத்தில் இருப்பதால் நீரில் பார்த்து அவர்களைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு தொலைபேசியின் மூலம் புரிந்து கொள்ள முடியாது. எனவே அடிக்கடி சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த சண்டைகளுக்கெல்லாம் மூல காரணம் இருவரின் பால் இருக்கும் காதல் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக சந்தித்துக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் surprise செய்து கொள்ளுங்கள். சின்ன சின்ன விஷயம்தான் எந்த உறவிலும் பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். உங்கள் இருவரின் சந்தோஷமும் உங்கள் இருவரின் காதல் வெளிப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தொலைதூரத்தில் இருக்கும் பொழுது கண்டிப்பாக தனிமையில் இருப்பதாக உணர்வீர்கள். எனவே அந்த சமயத்தில் நீங்கள் இருவரும் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் அந்த தனிமையிலும் கூட காதல் உங்களை நிம்மதியாக வைத்திருக்கும்.
எந்த உறவாக இருந்தாலும் சரி காதலோடு நம்பிக்கையும் இருந்தால் அது சொர்க்கமே!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/how-to-handle-relationship-breakup-1385371
https://tamil.shethepeople.tv/society/healthy-relationship-green-flags-1381170
https://tamil.shethepeople.tv/society/how-to-get-rid-of-inferiority-complex-1362923
https://tamil.shethepeople.tv/society/say-no-to-breakup-1344727