ஓர் உறவில் break-up ஏற்படுவதற்கு காரணம் நிறைய இருக்கலாம். அதற்காக நீங்கள் யாரையும் குறை சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு அதனால் இந்த உறவு சரியாக அமையவில்லை என்ற நினைத்து மனதை திடப்படுத்திக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. அதற்காக அது சுலபமான விஷயம் என்று சொல்லவில்லை. மிகவும் சிரமமான விஷயம் தான். நினைத்து வருத்தப்படுவது சரிதான். ஆனால் வருத்தப்பட்டு கொண்டே வாழ்க்கையை கெடுத்த விடக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். இன்று காதல் தோல்வியால் பல பேர் தங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எப்படி எடுத்து செல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டுள்ளனர். அப்படி கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த கட்டுரை சில ஆலோசனைகளை கூறவிருக்கிறது!
உங்கள் lover break-up செய்தால்?
மிகவும் வருத்தமாக இருக்கும் தான். ஆனால் இதுவும் கடந்து போகும் என்று எண்ணி நீங்கள் அதனை விட்டு கண்டிப்பாக வெளிவர வேண்டும். நீங்கள் உங்கள் மனதை எப்படி தயார் படுத்த வேண்டும் என்றால் இந்த ஒரு சின்ன விஷயத்தை பெரிதாக எண்ணி நம் வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது என்றுதான். ஒரு பத்து வருடம் கழித்து நீங்கள் திரும்பிப் பார்க்கும் பொழுது உங்களுக்கே நீங்கள் செய்த தவறு புரியும். வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். இன்று நம்முடன் இருப்பவர்கள் நாளை நம்முடன் இருப்பார்களா என்று நம்மால் சொல்லவே முடியாது. சூழ்நிலைகளின் பிடியில் தான் நம் வாழ்க்கை அமைந்துள்ளது. எது எப்படி மாறும் என்று நம்மால் சொல்லவே முடியாது. அதனால் எதையும் எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. எனவே அவர்கள் உங்களை விட்டு சென்று விட்டார்கள். அவரின் வாழ்க்கை சென்று கொண்டு தான் இருக்கும். உங்களின் வாழ்க்கையை அவர்களை நினைத்து வருந்தியே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
உங்களுக்கென ஒரு சுயமரியாதை இருக்கிறது:
உங்களை விட்டு அவர்கள் சென்று விட்டார்கள் என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் சுயமரியாதை இவை அனைத்திற்கும் மேல். உங்கள் மேல் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று எண்ணி வருத்தப்படாதீர்கள். உங்களின் மனதை புரிந்து கொள்ள வேறொருவர் கண்டிப்பாக வருவார் என்பதை முழுமையாக நம்புங்கள். அவர்கள் விட்டு சென்று விட்டார்களே என்பதற்காக உங்களை நினைத்து நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் உறவில் இருக்கும் பொழுது உங்களால் முடிந்த நல்லதை நீங்கள் செய்திருப்பீர்கள். அதை மட்டும் எண்ணி அந்த செயலை உங்களை விட்டு செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். அதை விட்டு உங்களிடம் இல்லாத தகுதியை எண்ணி நீங்கள் என்றும் வருத்தப்படாதீர்கள் ஏனென்றால் உங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட சுயமரியாதை இருக்கிறது.
புதிய இடங்களுக்கு செல்லுங்கள்:
நீங்கள் இருவரும் சேர்ந்து சென்ற இடங்களை விட்டு புதிதான இடங்களுக்கு சென்று அங்கே உங்கள் நண்பர்களுடன் நேரத்தை கணியுங்கள். பல மனநல மருத்துவர்கள் breakup என்று வருபவர்களுக்கு முதலில் இதைதான் செய்ய ஆலோசனை கூறுகின்றனர். மேலும் இப்படி செல்வதால் நம் மனநிலை மற்றும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் மாறும் என்பது அவர்களின் நம்பிக்கை. எந்த நிலைக்காகவும் உங்கள் நண்பர்களிடம் இருந்தும் உங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் விலகாதீர்கள். ஏனென்றால் நீங்கள் breakup இல் இருந்து வெளிவருவதற்கு அவர்கள் மட்டுமே உறுதுணையாக இருக்கப் போகிறார்கள்.
Social Media வில் block செய்யுங்கள்:
Breakup ஆன உடனே அவர்கள் ஞாபகமாக உங்களிடம் இருக்கும் அனைத்து பொருட்களையும் கலைத்து விடுங்கள். மேலும் அவர்களின் social media கணக்குகளை block செய்யுங்கள், மேலும் அவர்களின் number யையும் சேர்த்து block செய்யுங்கள். Mutual friends ஐ unfollow செய்யுங்கள். இதனால், சில வருடங்கள் கழித்து உங்களுக்கே திருமணமான பிறகு அவர்கள் மீண்டும் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் பொழுது, அது சரியாக அமையாது. அதற்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் இது. உங்களுக்கு கணவனும் அல்லது மனைவியோ வந்த பிறகு அவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்கும். மேலும் உங்களின் காதல் தோல்வியை பற்றி உங்கள் கணவனிடமும் மனைவியிடமோ சொல்வது உங்களின் இஷ்டம். ஆனால் அவர்களின் மனதை காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது உங்களின் கடமை. எனவே breakup ஆன பிறகு இப்பொழுது இருப்பதை விட சந்தோஷமான வாழ்க்கை கண்டிப்பாக அமையும். அதை எப்பொழுதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/how-to-spend-quality-time-with-husband-and-wife
https://tamil.shethepeople.tv/news/say-no-to-toxic-relationship-with-out-any-guilt
https://tamil.shethepeople.tv/society/say-no-to-breakup-1344727
https://tamil.shethepeople.tv/society/things-about-love-marriage