Advertisment

Food சாப்பிட்டா stress போய்டுமா?

மன ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்றாகும். ஆனால் பல காரணங்களால் இன்று நாம் அதை இழந்து வருகிறோம். மன அழுத்தத்தால் என்ன செய்வது என்று புரியாமல் பின்னாடி கொண்டிருந்தோம். ஆனால் நமக்குப் பிடித்த ஒன்றை செய்து அதைப் போக்கலாம் என்றால்?

author-image
Pava S Mano
New Update
Foods that reduce stress

Image is used for representational purpose only

நம் மனதிற்கும் வயிற்றுக்கும் நிறைய சம்மதம் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நம் வயிற்றின் ஆரோக்கியம் நரம்பு மண்டலத்தின் மூலம் மூளையோடு இணைந்துள்ளது. இதனால்தான் நாம் சந்தோஷமாக இருந்தால் இனிப்பை பரிமாறிக் கொள்கிறோம். நம் உடம்பில் ஏற்படும் stress ஐ போக்க உணவுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நாம் மன அழுத்தத்துடன் இருக்கும் பொழுது நம் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்படும். எனவே மனதிற்கும் வயிற்றுக்கும் ஆழ்ந்த சம்மதம் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். மன அழுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது வயிறுதான். எனவே மன அழுத்தம் ஏற்படும் பொழுது எந்த மாதிரி உணவை சாப்பிட்டு போக்கிக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்!

Advertisment

நார்ச்சத்து உள்ள பழங்கள்:

நார்ச்சத்து உடம்புக்கு மிகவும் நல்லதாகும். மேலும் இத்தகைய பழங்கள் மற்றும் காய்கறிகளோ அல்லது நார்ச்சத்து நிறைந்த எந்த உணவை சாப்பிட்டாலும் நாம் மன அழுத்தத்துடன் இருக்கும் பொழுது, stress hormone ஐ குறைத்து நல்ல நேர்மறை எண்ணங்களை இது கொடுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆரஞ்சு பழத்தில் அதிக வைட்டமின் சத்து இருப்பதால் மூளைக்கு மற்றும் ஹார்மோன் சுரப்பிகளுக்கு இது மிகவும் நல்லது என்று கூறுகின்றனர். தினமும் காலையில் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

Chickpeas:

Advertisment

சுண்டலில் அதிகம் புரதச்சத்து இருப்பதால் அதில் இருக்கும் அமினோ அமிலம் வயிறு மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. எனவே இதனால் மன அழுத்தம் குறைந்து அமைதியை தருகிறது. இதில் இருக்கும் அதிகப்படியான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நம் ரத்த சர்க்கரை அளவை சமமாக்கி mood ஐ சரி செய்கிறது.

இது தவிர முட்டை மற்றும் நட்ஸ் வகைகளில் அதிக புரதச்சத்து இருப்பதால் அதையும் மன அழுத்தமாக இருக்கும் பொழுது உட்கொள்ளலாம். மேலும் ஓட்ஸ் சூடாக சாப்பிடும் பொழுது நம் மன அழுத்தத்தை சமமாக்குகிறது. இதில் இரண்டு விதமாக செய்து சாப்பிடலாம். உன் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை நமக்கு ஏற்றவாறு சமைத்துக் கொள்வது ஒருமுறை மற்றும் காலையில் சூடான வெந்நீரில் பாலும் போற்றும் கலந்து நமக்கு ஏற்றவாறு சமைத்துக் கொள்வது இன்னொரு முறை. உங்களின் வசதிக்கேற்ப சமைத்து சாப்பிடுங்கள்.

Dark chocolate:

Advertisment

Foods that reduce stress

சாக்லேட் சாப்பிடுவது நம் மூளைக்கு மிகவும் நல்லதாகும். நான் எப்பொழுதெல்லாம் மன அழுத்தமாக உணர்கிறேனோ உடனேயே boomerang சென்று sizzling brownie சாப்பிட்டு வருவேன். இதனால் என் மன அழுத்தம் குறைந்து சற்று புத்துணர்ச்சியாக உணர்வேன். மேலும் எப்பொழுதெல்லாம் நான் சோகமாக உணர்கிறேனோ அப்பொழுதெல்லாம் சாக்லேட் சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளேன். உண்மையாகவே உங்களின் மன அழுத்தத்தை இது சரி செய்யும்.

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/health/reason-behind-mood-swing-1381141

https://tamil.shethepeople.tv/health/know-the-reason-for-your-acnepimples-1379039

https://tamil.shethepeople.tv/health/how-to-fall-asleep-fast-1377601

Advertisment

https://tamil.shethepeople.tv/health/no-more-loneliness-1378785




stress
Advertisment