நம் உடம்பில் மிகவும் தேவைப்படுவது வைட்டமின் டி ஊட்டச்சத்து தான். நம் உடலின் அன்றாட செயலுக்கு தேவையாக இருப்பது இந்த vitamin D. மேலும் எலும்புகள் வலுவாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த ஊட்டச்சத்து மிகவும் அவசியம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படுவது இந்த வைட்டமின் டி ஆகும். ஆனால் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. நம் உடம்பில் ஏற்படும் சோர்வு, எலும்புகளில் வலி மற்றும் தசை வலுவில்லாமல் இருத்தல், போன்ற அறிகுறிகள் வைட்டமின் டி யின் குறைபாட்டால் ஏற்படுகிறது. இதை எப்படி சரி செய்யலாம்?
-
காலை 6 மணி முதல் 8 மணி வரை சூரிய ஒளியில் நம் சருமத்தை காட்டுவது மிகவும் அவசியமாகும்.
-
சூரிய ஒளியில் தான் அதிக வைட்டமின் டி இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
-
வடநாட்டில் எல்லாம் sun bath என்று வெயில் காலங்களில் தங்கள் சருமத்தை வெயிலில் காட்டியபடி இருப்பார்கள்.
-
ஆனால் நாம் அப்படி காட்டினால் வெயிலின் தாக்கத்திற்கு மிகவும் சோர்ந்து விடவும்
-
எனவே காலை சூரியன் உதித்த பிறகு வரும் சூரிய ஒளியில் சற்று நேரம் நாம் நிற்க வேண்டும்
-
கடல் சார்ந்த உணவுகளை நாம் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
-
காளான் சாப்பிடுவது மிகவும் அவசியம்
-
முட்டையின் மஞ்சள் கருவில் அதிக வைட்டமின் டி இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே தினமும் ஒரு முட்டையாவது சாப்பிடலாம்
-
நாம் தினமும் காலை உணவில் ஆரஞ்சு பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம்.
-
ஓட்ஸ்னு கூட விட்டமின் டி இருப்பதாக கூறுகின்றனர்
-
பசும்பாலை தினமும் எடுத்துக் கொள்வதின் மூலம் வைட்டமின் டி பற்றாக்குறையிலிருந்து விடுபடலாம்
வைட்டமின் டி பற்றாக்குறையை தெரிந்து கொள்வது?
-
நம் எலும்பில் வலி ஏற்படும்.
-
மேலும் தசைகள் வலுவிழந்து காணப்படுவது போல் உணர்வீர்கள்
-
தேவையான அளவு வைட்டமின் டி எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட இதை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது
-
நீங்கள் சூரிய ஒளியில் அதிகம் உடம்பை காட்டாதவர்களாக இருந்தாலும் வாய்ப்பு அதிகம்
-
வைட்டமின் டி குறைபாடு இருந்தால் அஜீரணக் கோளாறு ஏற்படும்
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/foods-that-reduce-your-stress-1511455
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/nail-maintenance-tips-1510479
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/how-to-handle-digestion-problem-1508413
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/foods-to-control-cholesterol-1386529