Advertisment

Baby Planning மீதான சமூகப் பார்வை!

Baby planning என்பது கணவன் மனைவி இடையேயான விஷயமாகும். இதில் சமூகத்தின் குறுக்கீடுகளை எப்படி சமாளித்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வது என்பதை இக்கட்டுரை உள்ளடக்கியுள்ளது!

author-image
Pava S Mano
New Update
Baby planning

Image is used for representational purpose only

சமூகத்தை பொறுத்தவரை தம்பதியினருக்கு திருமணம் ஆன உடனேயே குழந்தையை பெற்று கையில் கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால் அந்தப் பெண்ணையும் ஆணையோ எங்கு சந்தித்தாலும் அவர்களை கேட்கும் கேள்வி என்பது இவ்வளவு தான் என்று இல்லை. முன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். அப்பொழுது அவர்களுக்கான வாழ்க்கை முறை என்பது அவர்களின் குடும்பத்தார் மற்றும் சமையலறை சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் இன்று பெண்கள் சமையல் அறையை தாண்டி குடும்பத்தையும் தாண்டி வெளியில் வந்து பல உன்னதமான வேலைகளை செய்து அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். இது பெண்களுக்கு கிடைத்த வரம் தான் என்று சொல்லலாம். இப்படி பல துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். 

Advertisment

திருமணம் ஆன உடனே குழந்தை தேவையா?

திருமணம் என்பது கணவன் மனைவி சேர்ந்து அவர்களின் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்திற்கு செல்வதுதான். ஆனால் இப்பொழுது திருமணத்தின் மீதான பார்வை என்பது வெகுவே மாறி உள்ளது. பல பெண்கள் தங்களின் வாழ்க்கை குறிக்கோளை எட்டிய பின் தான் குழந்தையை பற்றிய யோசனையை முன்வைக்கின்றனர். இது சமூகத்தின் ஒரு சாராரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாகும். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மற்றொருவர் பெண்களை படிக்க வைப்பதால் மட்டுமே இத்தகைய எண்ணங்கள் அவர்களுக்கு வர நேருகிறது என்று அவர்களின் கருத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் என்னை பொருத்தவரை கணவன் மனைவி இருவரும் நிதி ரீதியான சுதந்திரத்தை அடைந்த பின்னர் குழந்தையை பற்றி யோசிப்பது தான் சரி. ஒருவரை ஒருவர் அவர்களாலே பார்த்துக் கொள்ளாமல் இருக்கும் நிலையில் எப்படி குழந்தை வந்த பின்பு அவர்களை பார்த்துக் கொள்ள முடியும் என்பது தான் என் கேள்வி. கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் தாய் தந்தை இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே எந்த குறையும் இன்றி ஓரளவுக்காவது குழந்தையின் தேவையை நிவர்த்தி செய்ய முடியும். எனவே திருமணத்திற்கு பின் நிதி நிலைமையை பார்த்தபின் குழந்தை பெற்றுக் கொள்வதே சரி என்பது என்னுடைய கருத்தாகும்.

சமூகத்தின் gossip ஐ சமாளிப்பது எப்படி?

Advertisment

Baby planning

Baby planning என்பது கணவன் மனைவி இருவருக்கும் உள்ள தனிப்பட்ட விஷயமாகும். அதில் மூன்றாம் நபர் அவர்களின் கருத்தை சொல்வது எந்த விதத்திலும் சரி அல்ல. மேலும் அவர்களின் சூழலுக்கு ஏற்ப ப்ளான் செய்வது தான் சரி என்பது என்னுடைய பார்வை. மேலும் நீங்கள் உடனே குழந்தையை பெற்றெடுத்தீர்கள் என்றாலும் எதற்கு இவ்வளவு அவசரம் என்றுதான் இந்த சமூகம் உங்களை கேள்வி கேட்கும். நீங்கள் தாமதமாக குழந்தை பெற்றெடுத்தீர்கள் என்றால் ஏன் இவ்வளவு தாமதம் என்றுதான் இந்த சமூகம் உங்களை கேட்கும். எனவே சமூகத்திற்காக மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ன பேசுவார்களோ என்று உங்களை குழப்பிக் கொண்டு அதற்காக எந்த ஒரு பிளானும் இல்லாமல் செயல்படாதீர்கள். இன்றைய காலகட்டத்தில் விலைவாசியை சமாளிக்க இதுவே சிறந்த தீர்வாகும். மேலும் நம் பெற்றோர்கள் எப்படி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து வாழ்ந்தார்களோ அதே வாழ்க்கையை நாமும் வாழ வேண்டுமா என்று யோசியுங்கள். 

Plan பண்ணி பண்ணுங்க!

Advertisment

Baby planning என்பது உங்கள் காதலின் அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் கேட்கிறார்களே என்று நிர்பந்தத்தால் ஏற்படக்கூடிய விஷயமாக இருக்கக் கூடாது. குழந்தையைப் பெற்ற பின் அவர்களுக்கு சிறந்த கல்வி முதல் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கு முதலில் நிதி தேவை. எனவே முதலில் உங்கள் வாழ்வில் ஒரு financial stability ஐ அடைந்த பின்னர் குழந்தையை பற்றிய யோசனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். சமூகத்தின் பிடியில் சிக்காமல் உங்களுக்கு எப்படி சரி என்று தோன்றுகிறதோ அப்பொழுது நீங்கள் முடிவெடுத்தால் போதும்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-part-2-1518390

Advertisment

https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-1515246

https://tamil.shethepeople.tv/society/things-to-know-about-arranged-marriage-1513025

https://tamil.shethepeople.tv/society/things-you-need-to-discuss-with-your-parents-1511012

Advertisment



baby planning
Advertisment