திருமணம் என்பது இரு வேறுபட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குறிக்கோளை நோக்கி நகர்வது தான். நம் வாழ்வின் இறுதிவரை அவர்தான் நம்முடன் வரப் போகிறார். எனவே இருவரும் அவரவர்களின் வாழ்க்கையை மற்றும் வாழ்க்கையின் குறிக்கோளை பேசிக்கொள்வது மிகவும் அவசியமாகும். நீங்கள் உங்களுக்கான வரை கண்டுபிடித்து விட்டீர்கள் அவர்களை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று உறுதியான பின்னர் இந்த சில கேள்விகளை அவர்களிடம் கேட்பது, உங்கள் இருவரின் ஆழ்மனதில் இருக்கும் சில விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கு ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். என்னதான் நாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றாலும் திருமணத்திற்கு முன் நம்மால் அனைத்தையும் பேசிக்கொள்ள முடியாது. எனவே இந்தக் கேள்விகளின் மூலம் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம். Questions to ask your Partner before marriage என்ன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது
-
உங்களின் financial goal என்ன?
எடுத்த உடனேயே பணத்தைப் பற்றி பேசுவது சற்று தயக்கமாகத்தான் இருக்கும். ஆனால் கணவன் மனைவி உறவில் இது மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். ஏனென்றால் இருவரின் வாழ்வாதாரமும் பணத்தை தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் இருவரும் சேர்ந்து எப்படி உங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள போகிறீர்கள் என்பதை பேசிக் கொள்ளுங்கள். எப்படி இருவரும் செலவுகளை பார்த்துக் கொள்ளப் போகிறீர்கள், எப்படி சேமிப்பு கணக்குகளை செய்யப் போகிறீர்கள், மேலும் பாலினம் சார்ந்த நிதி இலக்குகள் ஏதேனும் இருக்கிறதா, இருவரும் சேர்ந்தே செலவுகளை எப்படி பிரித்துக் கொள்ள போகிறோம் என்பதை எல்லாம் கண்டிப்பாக பேசிக் கொள்ளலாம்.
-
என் மன அழுத்தத்தில் நீங்கள் பங்கு கொள்வீர்களா?
உங்கள் உறவின் bond ஐ பிணைக்க இந்த கேள்வி மிகவும் முக்கியமானதாகும். யாரோ ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது மற்றொருவர் எப்படி அவர்களை கையாள போகிறீர்கள் என்பது ஒரு உறவிற்குள் செல்லும் பொழுது கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இந்தக் கேள்வியின் மூலம் ஒருவரை பற்றிய நல்ல புரிதல் ஏற்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த சமயத்தில் உங்களுக்கு என்ன தேவைப்படும் என்று நீங்களே சிந்திக்க இந்தக் கேள்வி உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு நான் மன அழுத்தத்துடன் இருந்தால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்வேன். ஆனால் என் கணவர் அதை புரிந்து கொண்டு அவரே வந்து என்னுடைய தேவை இந்த சமயத்தில் என்ன என்பதை கேட்டு அறிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்வார்.
-
திருமணமான உடனே குழந்தை தேவையா?
நம் சமூகத்தில் அனைவரும் திருமணமான உடனேயே குழந்தை பெற்றுக் கொள்வது தான் சரி என்ற மனநிலையை வைத்துக் கொண்டு நம்மளையும் அதே செய்ய சொல்வார்கள். ஆனால் நம் சூழல் என்ன என்பது நமக்குத்தான் தெரியும். எனவே இதைப் பற்றி இருவரும் பேசிக் கொள்ளுங்கள். சிலருக்கு financial stability இருக்கும், அவர்கள் குழந்தை வந்தாலும் சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் சிலருக்கு financial stability கிடைக்க சற்று கால தாமதம் ஆகலாம். அதை எப்படி சரி செய்வது என்பதை நீங்கள் தான் பேசி முடிவு செய்ய வேண்டும்.
-
எப்படி communicate செய்யப் போகிறோம்?
ஒவ்வொருவருக்கும் ஆன communication முறை என்பது வித்தியாசமான முறையில் இருக்கும். ஒருவர் சில விஷயத்தை வெளிப்படையாக பேசி விடுவார்கள். ஆனால் சிலர் வெளிப்படையாக பேசாமல், அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு தேவையானதை மட்டும் பேசுவார்கள். இத்தகைய சூழலில் எப்படி இருவரும் கம்யூனிகேட் செய்யப் போகிறீர்கள் என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். நாளை இதனால் உறவிற்குள் எந்த சங்கடமும் வராமல் இது பார்த்துக் கொள்ளும்.
எந்த உறவாக இருந்தாலும் வெளிப்படையாக எதையும் பேசி விட்டீர்கள் என்றால் எந்த பிரச்சனையும் கிடையாது. அதற்கான ஒரு சிறு விதைதான் இந்த கேள்விகள். நாளை இன்னும் சிறந்த நான்கு கேள்விகளுடன் உங்களை கட்டுரையில் சந்திக்கிறேன்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/things-to-know-about-arranged-marriage-1513025
https://tamil.shethepeople.tv/society/choose-between-career-and-marriage-1425614
https://tamil.shethepeople.tv/society/how-to-handle-relationship-breakup-1385371
https://tamil.shethepeople.tv/society/how-to-handle-long-distance-relationship-1418095