Arranged Marriage செய்யும் முன் இதை கவனியுங்கள்!

சமூகம் நம்மை அவர்களின் கோட்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே பழகி விடுகிறது. நான் வளர்ந்த பிறகு சரி தவறு என்பதை ஆராய தெரிந்து கொண்டிருக்கும் போது நமக்கான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கிறோம்.

author-image
Pava S Mano
New Update
Arranged marriage

Image is used for representational purpose only

நீங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை செய்ய நினைக்கிறீர்கள் என்றால் அதனால் வரும் விளைவுகள் என்ன என்பதை முன்னரே தெரிந்து கொள்ளுங்கள். காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு இருவராய் பற்றிய புரிதல் என்பது அதிகமாக இருக்கும். ஆனால் arranged marriage செய்யும்பொழுது புரிதல் ஏற்பட சற்று காலதாமதம் ஆகலாம். ஆனால் அதற்காக ஒருவர் மேல் ஒருவர் காதல் இல்லை என்று அர்த்தம் கிடையாது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயம் புரியாமல் தான் பல திருமணங்கள் விவாகரத்தில் போய் முடிகிறது. காதல் திருமணத்தில் காதல் செய்யும் பொழுது பல சண்டை சச்சரவுகள் வந்து போகும். ஆனால் பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் திருமணத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட சில நாட்கள் சண்டே கம்மியாக தான் வரும். ஆனால் திருமணம் ஆன சில நாட்களுக்குப் பிறகு சண்டே நன்றாகவே வரும். சண்டே வருவது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத்தான் என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். சின்ன விஷயம் தான் இது போன்ற பல விஷயங்கள் arranged marriage இல் நீங்கள் கவனிக்க வேண்டும்.

எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

Advertisment
  • மனைவிமார்கள் கணவனின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்

  • கணவர்களும் மனைவியின் வாழ்க்கை முறையை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்

  • இருவரும் வெவ்வேறு வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தவர்கள் என்பதை உணர்ந்து வாழப் பழகுங்கள்

  • கணவன் வீட்டார் எப்படி இருப்பார்கள் என்பதை யூகித்து சாமர்த்தியமாக அவர்களை சமாளித்து நடந்து கொள்ளுங்கள்

  • இதனால் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல்,

 உங்களின் மனநிலை சீராக இருக்கும்

  • மேலும் கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறீர்கள் என்றால் உங்களின் பிரச்சனையை உங்கள் அறையிலேயே முடித்துவிட்டு வெளியே வாருங்கள்

  • பெரியவர்கள் முன் நீங்கள் சண்டையிட்டால் அது அவர்களின் மனநிலையை பாதிப்பதோடு அவர்கள் உங்கள் சண்டையில் மூக்கை நுழைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்

  • இரு வீட்டாரின் பெற்றோர்கள் சம்மதத்தோடு உங்கள் முடிவுகளை எடுக்கிறீர்கள் என்றால் சரிதான்

  • இல்லை உங்களின் முடிவை கணவன் எப்படி அவர்களின் பெற்றோருக்கு முன் மதிப்பு கொடுத்து விவாதிக்கிறாரோ அதே உரிமையை தன் மனைவி அவர்களின் பெற்றோரிடம் விவாதிக்கவும் சுதந்திரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்.

  • அந்த சுதந்திரத்தை பறிப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது

கணவனின் பெற்றோரை எப்படி சமாளிப்பது?

உங்கள் கணவனின் பெற்றோர் கல் திருமணத்திற்கு பிறகு உங்களுடன் சேர்ந்து வாழ போகிறார்கள் என்றால், அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள். அடுத்த விஷயங்களையும் personal ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கை முறையும் நீங்கள் அவர்கள் வீட்டில் வாழப்போகும் வாழ்க்கை முறையும் வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பெற்றோர் வீட்டில் ஒரு மாதிரி இருக்கலாம் ஆனால் இங்கு அவர்கள் எப்படி உங்களிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்து நீங்கள் நடந்து கொள்ளுங்கள். அதற்காக அவர்கள் உங்களை காயப்படுத்தினால் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதை தட்டி கேட்பதற்கும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் தான் நாளை பெரிய பிரச்சினையில் வந்து முடியும். எனவே இவை அனைத்தையும் உணர்ந்து புரிந்து கொண்டு திருமண வாழ்வை, சந்தோஷமாக வாழுங்கள்!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/things-you-need-to-discuss-with-your-parents-1511012

https://tamil.shethepeople.tv/society/how-to-move-on-after-divorce-1425842

https://tamil.shethepeople.tv/society/choose-between-career-and-marriage-1425614

Advertisment

https://tamil.shethepeople.tv/society/how-to-handle-long-distance-relationship-1418095

arranged marriage