நாம் சிறு வயதிலிருந்து பெற்றோர்களிடம் அனைத்தையும் சொல்வதில் ஒரு தயக்கத்துடன் தான் இருப்போம். ஆனால் அவர்கள் நாம் அனைத்தையும் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப்படியே எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் சொன்னால் அவர்களின் பாதுகாப்பு உணர்வால் நம் சுதந்திரத்தை இழக்க நேரிடும் என்ற பயத்திலேயே பல விஷயங்களை நாம் அவர்களிடம் discuss செய்வதில்லை. ஆனால் ஒரு வயதிற்கு மேல் சில விஷயங்களை பெற்றோர்களிடம் பேசும் பொழுது தான் அதற்கான சரியான தீர்வு கிடைக்கும் என்பதே உண்மை. இதை நான் வளர வளர தான் தெரிந்து கொண்டேன். ஆனால் நீங்கள் முன்பே அதை தெரிந்து கொண்டு எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் இருங்கள்.
தயக்கத்தை விடுங்கள்!
நாம் பள்ளிக்கூடத்தில் சேர்ந்த அந்த மழலையான காலங்களில் என்ன நடந்தாலும் அதை அப்படியே வந்து நம் பெற்றோர்களிடம் நாம் சொல்லி விடுவோம். ஆனால் வளர வளர இந்த பழக்கத்தை நாம் விட்டு விடுகிறோம். மேலும் இதைச் சொன்னால் பெற்றோர்கள் நம்மை அடித்து விடுவார்களோ, திட்டி விடுவார்களோ என்ற பயத்திலேயே நாம் சொல்வதை நிறுத்தி விடுகிறோம். சிறுவயதில் எது சரி எது தப்பு என்று அறிந்து கொள்ளாமல் இருந்த பொழுது எதையும் மறைக்காமல் பெற்றோர்களிடம் சொல்லிய நம்மால், வளர்ந்த பெண் ஏன் சொல்ல மறுக்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள். நாம் பள்ளிக்கூடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்தாலோ அல்லது பாராட்டு பெற்றாலோ அதனை பகிர நினைக்கும் நம்மால், குறைவான மதிப்பெண்ணோ இல்லை நாம் செய்த தவறால் நம்மை ஆசிரியர்கள் அதட்டினாலும் இதை நாம் பெற்றோர்களிடம் இருந்து மறைக்கிறோம். இதன் காரணம் என்ன என்று ஆழ்ந்த சிந்தித்துப் பாருங்கள். நம் தவறை ஒத்துக்கொள்ள மறுக்கிறோம் என்பதுதான் ஒரே காரணம். நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிந்த நம்மால் நம் மீது தவறு இருக்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இந்த தயக்கத்தை முதலில் விட வேண்டும்.
அதட்டினால் என்ன, நம் Parents தானே!
நாம் செய்த தவறை சுட்டிக்காட்டினால் மட்டும்தான் நாம் அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்போம். இல்லையென்றால் அது தவறு என்பதை தெரியாமல் கூட அதை செய்து கொண்டே இருப்போம். இதனால் பாதிக்கப்படுவது நம் பெற்றோர்கள் கிடையாது நாம்தான். சிறுபிள்ளை இடம் நெருப்பை தொடாதே என்று சொன்னால் அது கேட்காது, அதை தொட்ட பிறகு சுடும் என்று அறிந்தபின் அதை தொடுவதில்லை. அந்த மனநிலையில்தான் நாமும் சிறுவயதில் இருப்போம். நம் பெற்றோர்களின் அனுபவத்தை நாம் மதிக்க வேண்டும். அவர்கள் நமக்கு ஒரு விஷயம் சொல்கிறார்கள் என்றால் அது அவர்கள் அனுபவத்தால் மட்டும் இன்றி நம்மில் இருக்கும் அக்கறையால் தான் என்பதை நாம் உணர வேண்டும். இன்று பல குழந்தைகளை பெற்றோர்கள் ஆசிரியர்கள் அதட்டினார்கள் என்ற காரணத்தினால் தற்கொலை செய்து கொள்வதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் வேதனையான விஷயமாக இருக்கிறது. நமக்கு உயிர் கொடுத்து, நமக்காக வாழும் அவர்களுக்கு நம் மேல் அக்கறை காட்ட தகுதி இல்லையா என்ன?
இதை கண்டிப்பாக பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!
நீங்கள் பள்ளிக்கூடத்தில் ஏதேனும் தவறு செய்து அதற்காக ஆசிரியர்கள் உங்களை கண்டித்தார்கள் என்றால் அதனை மறைக்காமல் அந்த தப்பை ஒத்துக்கொண்டு உங்கள் பெற்றோர்களிடம் தைரியமாக கூறுங்கள். மேலும் உங்கள் நண்பர்களிடம் இருந்து ஏதேனும் தவறான சொற்களையோ அல்லது தவறான பேச்சுக்களையும் நீங்கள் கேட்டு மனம் உடைந்து போகிறீர்கள் என்றால் அதனையும் கண்டிப்பாக உங்கள் பெற்றோர்களிடம் கூறுங்கள். உங்கள் ஆசிரியர்கள் உங்களை சரியாக நடத்தவில்லை என்றாலும் அதை பெற்றோரிடம் கூறுங்கள். பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்றால் அதனையும் தயக்கமே இல்லாமல் உங்கள் பெற்றோரிடம் தெரிவியுங்கள்.மேலும் உங்களுக்கு படிப்பின் மேல் இருக்கும் நாட்டத்தை பற்றிய விஷயங்களை உங்கள் பெற்றோர்களிடம் விவாதித்துக் கொள்ளுங்கள். படிக்கும் பொழுது உங்களுக்கு எதன்மேல் ஆசை இருக்கிறது என்பதையும் அவர்களிடம் தெரிவியுங்கள். உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பது உங்களுக்கு தான் தெரியும். உங்கள் மேல் இருக்கும் அக்கறையாய் பெற்றோர்கள் அவர்களின் ஆசையை உங்களிடம் கூறுவார்கள் அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் உங்கள் ஆசையை நோக்கி பயணத்தை செலுத்துவதும் உங்கள் கையில் தான் உள்ளது. மேலும், படிக்கும் பொழுது தொழில் ரீதியான எண்ணங்கள் இருக்கிறது என்றால் அதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றியும் உங்கள் பெற்றோர்களிடம் பேசுங்கள். இந்த உலகத்தில் உங்களுக்காக மற்றும் உங்களின் மேல் உண்மையான நேர்மையான அன்பு மற்றும் அக்கறை கொண்டவர்கள் அவர்களை தவிர யாருமே கிடையாது என்பதை நான் என் 26 ஆவது வயதில்தான் புரிந்து கொண்டேன். ஆனால் நீங்கள் இந்த கட்டுரையை படித்த பின் சீக்கிரமே புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/benefits-of-marrying-after-30
https://tamil.shethepeople.tv/society/how-to-move-on-after-divorce-1425842
https://tamil.shethepeople.tv/society/choose-between-career-and-marriage-1425614
https://tamil.shethepeople.tv/society/how-to-handle-relationship-breakup-1385371