நம் உடம்பில் செரிமானம், வைட்டமின்களை பாதுகாத்து வைத்துக் கொள்வது, metabolism சீராக வைத்துக் கொள்வது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது போன்ற பல செயல்களை கல்லீரல் தான் செய்து வருகிறது. ஒரு மனித உடம்பின் இரண்டு சதவீத இடையை கொண்டது கல்லீரல் ஆகும். உடம்பில் பித்தம் ஏற்படுகிறது என்று சொல்லுவார்கள் அந்தப் பித்தத்திற்கு காரணமும் கல்லீரலில் ஏற்படும் ஏதாவது பிரச்சனையாக தான் இருக்கும். நம் உடம்பில் இருக்கும் நச்சுக்களை இரத்தத்திற்கு செல்லாமல் தவிர்த்து உடம்பின் சர்க்கரை அளவை பராமரிப்பது கல்லீரலின் செயலாகும். நிறைய பேருக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. கல்லீரலில் சிறு தொந்தரவு இருந்தால்தான் இந்த மாதிரி குறட்டை விடும் பிரச்சனை வரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே எப்படி liver இன் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்!
Diet maintenance:
நாம் தினமும் சாப்பிடும் உணவில் தான் கல்லீரலின் ஆரோக்கியம் இருக்கிறது. எனவே சத்தான உணவை மற்றும் அளவான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது என்பது மிகவும் அவசியமாகும். மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நம் உணவில் எந்த அளவிற்கு கொழுப்பு சத்து இருக்கிறதோ அந்த அளவிற்கு கல்லீரலின் மேல் கொழுப்பு தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே பழங்கள் காய்கறிகள் மட்டும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவதால் கல்லீரல் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதிகமாக கீரை வகைகள் மற்றும் ஆரஞ்சு களில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் வைட்டமின்ஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது கல்லீரலுக்கு மிகவும் உகந்த உணவாகும். மேலும் கீரைகளில் இருக்கும் குளோரோஃபில், உடம்பின் நச்சுகள் ரத்தத்தில் கலக்காமல் இருப்பதற்கு உதவுகிறது.
தண்ணீரின் முக்கியத்துவம்:
மனித உடல் என்பது 60% தண்ணீரால் ஆனதாகும். எனவே நம் உடலுக்கு ஏற்ற தண்ணீர் அளவை தினமும் பருகுவது மிகவும் முக்கியமானதாகும். நம் கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு தண்ணீர் அவசியமாகும். சரியான அளவில் நாம் தண்ணீரை தினமும் குடித்து வந்தாலே கல்லீரல் அதனின் வேலையை சரியாக செய்து விடும். மேலும் நாம் தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால் நம் உடம்பில் நச்சுகள் அதிகம் சேகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் கல்லீரலின் செயல்பாடு சீரழிவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தேவையான தண்ணீரை குடிப்பது அவசியம். தண்ணீர் குடிப்பதால் நம் உடம்பில் இருக்கும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் சரியாக செயல்படும். ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் அளவிலான தண்ணீர் ஆவது குடிப்பது அவசியம். எனவே நீங்கள் எங்கு சென்றாலும் தண்ணீர் குடிப்பதை சரியாக பராமரித்துக் கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி மேற்கொள்வதால் கல்லீரலில் தங்கும் கொழுப்புகள் கரைந்து அதனை சரியாக வேலை செய்வதற்கு வழி விடுகிறது. யோக செய்வதால் கூட கல்லீரலுக்கு மிகவும் நல்லதாகும். தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பிழிந்த எலுமிச்சை ஜூசை குடிப்பது கல்லீரலுக்கு மிகவும் நல்லதாகும். Liver health மேம்பட இதுவே சிறந்த வழியாகும். உடற்பயிற்சியோடு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் மேற்கொண்டால் உடம்பில் எந்த பிரச்சனையும் வராமல் ஆரோக்கியமாக வாழ்லாம்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/how-to-control-your-anxiety-1520573
https://tamil.shethepeople.tv/health/back-pain-relief-tips-1518462
https://tamil.shethepeople.tv/health/how-to-get-rid-of-dark-circles-1516351
https://tamil.shethepeople.tv/health/foods-that-reduce-your-stress-1511455