இன்று இளைஞர்கள் பல பேருக்கு music தான் சிறந்த துணையாக விளங்குகிறது. காலை எழுந்த உடனேயே ஏதாவது ஒரு பாடலைக் கேட்டு தான் அந்த நாளை துவங்குகிறது. இரவு தூங்கும் முன்பும் நமக்கு பிடித்த பாடலை கேட்ட பின் தான் உறக்கமும் வருகிறது. நாம் நாளை ஆரம்பித்தது முதல் முடியும் வரை பாட்டு என்பது நம் வாழ்வில் நம் மனதோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. ஆனால் நம் மன அழுத்தத்தை குறைப்பதற்கு கூட பாட்டு உதவுகிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் பல அறிஞர்கள் கூறுவது ஒரு மனிதனுக்கு இசை என்பது மிகவும் மென்மையான மனசூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதுதான். நாம் எவ்வளவு பயத்துடன் மற்றும் எதிர்மறை எண்ணங்களோடு இருந்தாலும் அதனை சரி செய்வதற்கு இசையிடம் மருந்து இருக்கிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். உங்கள் வாழ்க்கையை இனிமையாக கண்டிப்பாக இசை ஒரு சிறந்த கருவியாக இருக்கும்.
உங்கள் காலையை இசையோடு தொடங்குங்கள்:
காலை எழும்பொழுது உங்களுக்குப் பிடித்த பாடலை alarm tone ஆக வைக்காதீர்கள். காலை யாராவது நம்மை எழுப்பினாலே நமக்கு கோபம் வரும் அல்லது எரிச்சலாக இருக்கும். இது மனிதனின் மனநிலையாகும். எனவே உங்களுக்கு பிடித்த பாடலை alarm tone ஆக வைக்கும் பொழுது தினமும் அந்த பாடலைக் கேட்டு உங்களுக்கு போர் அடித்து விடும். எனவே காலையில் sunrise music போன்று மென்மையான பாடலை alarm tone ஆக வையுங்கள். நீங்கள் எழுந்த பின்னர் உங்களுக்கு எனர்ஜி கொடுக்கும் வகையில், மற்றும் நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் பாடல்களை கேளுங்கள். இதனால் உங்கள் மனதில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யக்கூடிய பாடல்களாக அது மாறிவிடும்.
பாட்டோடு பாடுங்கள்:
பாடல்களை கேட்பதன் மூலமாக உண்மையான நேர்மறை எண்ணங்களை நீங்கள் பெற வேண்டும் என்றால், நீங்கள் கேட்கும் பாடலோடு சேர்ந்து நீங்களும் பாடுங்கள். உங்கள் எண்ணங்களின் வைப்ரேஷன்சை மாற்றக் கூடிய ஆற்றல் நீங்கள் பாடும் பொழுது ஏற்படும் வைப்ரேஷன் இருக்கு உண்டு. இதனால் உங்கள் உடம்பில் உள்ள செல்கள் அனைத்தும் மெதுவாக ரிலாக்ஸ் ஆக ஆரம்பிக்கும். நீங்கள் குளிக்கும் போது பாடுங்கள் காரில் செல்லும்போது பாடுங்கள் தூங்குவதற்கு முன்பு கூட ராகம் பாடுங்கள். நீங்கள் நன்றாக பாடுகிறீர்களா என்பது முக்கியமில்லை நீங்கள் எங்கேயோ ஒரு மேடையில் நின்று பாடப் போவதில்லை உங்களுக்கான பிரைவேட் ஸ்பேஸில் தான் நீங்கள் பாடுகிறீர்கள் என்பதை உணர்ந்து பாடுங்கள். நீங்கள் பாடும் பொழுது எப்படி உணர்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.
எப்பொழுதெல்லாம் பாடலை கேட்கலாம்?
பாடலை எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம். அதை இங்கு தான் கேட்க வேண்டும் இங்கு கேட்கக் கூடாது என்று எந்த வரைமுறையும் கிடையாது. நான் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஏதோ ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டே தான் இருப்பேன். எனக்கு குளிக்கும் பொழுது பாடல் கேட்பது மற்றும் பாடல் பாடுவது மிகவும் பிடிக்கும். எனவே குளியலறை கொள்ளும் நான் என் மொபைல் போனை எடுத்துக்கொண்டு சென்று எனக்கு பிடித்த பாடலை கேட்டுக்கொண்டே தான் குளிப்பேன். எந்த வேலை செய்தாலும் எனக்கு பாடல் பாடிக் கொண்டே இருக்க வேண்டும். நான் ஒரே குழந்தை தான். எனக்கு உடன் பிறந்தவர் யாரும் கிடையாது. எப்போதெல்லாம் நான் தனியாக உணர்கிறேனோ அப்பொழுதெல்லாம் எனக்கு துணையாக இருந்தது பாடல்கள் மட்டும் தான். எங்கள் வீட்டு மாடியில் அமர்ந்து வானத்தைப் பார்த்து எனக்கு பிடித்த பாடலை நான் பாடிக் கொண்டிருப்பேன். இதனால் எவ்வளவு எதிர்மறை எண்ணங்கள் என் மனதில் இருந்தாலும் அது சிறிது நேரத்திலேயே நேர்மறை எண்ணங்களாக மாறி உற்சாகமாகி விடுவேன். பாடல் என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை நான் பகிர்ந்து உள்ளேன். உங்களுக்கும் இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் DM செய்யுங்கள்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/good-vibe-movies-to-watch-in-ott-1554517
https://tamil.shethepeople.tv/society/life-after-marriage-1552795
https://tamil.shethepeople.tv/women-of-cinema/female-directed-movies-of-tamil-cinema-1557366
https://tamil.shethepeople.tv/health/hidden-facts-you-should-know-about-atta-kneading-1557533