சினிமா படங்களை தியேட்டரில் பார்த்த காலம் மாறி வீட்டில் சிடி பிளேயரில் மற்றும் டிவிடி பிளேயரில் பார்த்த தலைமுறை எல்லாம் தாண்டி இன்று OTT இல் பார்த்து வருகிறோம். அடித்து பிடித்து டிக்கெட்டுகள் வாங்கி அந்த படத்தை பார்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தியேட்டருக்கு செல்லும் நம் பெற்றோர்களின் காலத்தை விட எங்கேயும் போகாமல் வீட்டிலேயே எந்த படம் வெளி வந்தாலும் அதனை பார்த்து மகிழ்வது நம் தலைமுறை தான் சிறந்ததா என்று குழப்பம் இருந்து தான் வருகிறது. ஓ டி டீ யின் முக்கியத்துவமே எந்த மொழி படத்தையும் நாம் நம் வீட்டிலேயே இருந்து குடும்பத்தினருடன் காணலாம் என்பதுதான். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நமக்கு பிடித்த படத்தை திரும்பத் திரும்ப நாம் பார்த்துக் கொள்ளலாம் நாம் அந்த சேனல் இருக்கு சப்ஸ்கிரைப் செய்திருந்தோம் என்றால். நான் பார்த்த, என் மனதிற்கு இனிமையான சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
KD என்கிற கருப்பு துரை:
தலைக்கூத்தல் என்ற முறையில் தன் தகப்பனாரை கொன்று விட வேண்டும் என்று துடிக்கும் பிள்ளைகளின் மத்தியில் பல சின்ன சின்ன ஆசைகளை மனதில் கொண்டு கோமாவில் இருக்கும் ஒரு தாத்தாவின் கதை தான் இது. தன் பிள்ளைகளின் எண்ணத்தை புரிந்து கொண்ட இவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பின் பல தூரம் சென்று ஒரு கோவிலில் தங்கி அங்கு வேலை புரிந்து வருகிறார். அங்கு துடிதுடிப்பான ஒரு சிறுவனை சந்திக்கிறார். எப்படி அந்த தாத்தாவும் சிறுவனும் அடுத்து தங்கள் வாழ்வை எடுத்துச் செல்கிறார்கள் என்பதை அழகாக படமாக்கி இருக்கிறார்கள். ஒரு தாத்தாவால் அந்த வயதில் அவரின் கனவை மற்றும் ஆசையை நோக்கி ஓட முடிகிறது என்றால் நம்மால் ஏன் அந்த சிறு சிறு சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்ற கேள்வி என் மனதில் தோன்றியது. நீங்களும் அந்த படத்தை பார்த்தால் இப்படித்தான் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன். Netflix இல் இந்த படம் இருக்கிறது. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
HOME:
இளம் இயக்குனராக இருக்கும் ஒரு மகனின் தந்தை எப்படி சிறு வயதிலிருந்து தன் குடும்பத்தை மட்டும் பிள்ளைகளை உருவாக்கி இருக்கிறார் மேலும் ஒரு ரிட்டையர்ட் தந்தையின் ஏக்கங்கள் மற்றும் பயன்கள் என்னவாக இருக்கும் என்பதை மிகவும் தெளிவாக வர்ணனை செய்திருக்கிறார் இந்த இயக்குனர். ஒரு ஆண்மகனின் வாழ்வில் ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கு என்னென்ன செய்திருப்பார் மற்றும் தன் மகன்கள் முன்னேறி வரும் பொழுது அவர்கள் தன் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை தெளிவாக கூறுகிறது. ஒரு மிடில் கிளாஸ் தகப்பனாக இருக்கும் இவரின் நடிப்பு வியக்கத்தக்கது. கண்டிப்பாக நீங்கள் Amazon prime இல் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.
Queen:
தன் காதலனுடன் திருமணமாகப் போகிறது என்ற ஆசையோடு இருக்கும் ஒரு பெண்ணின் திருமணம் ஆரம்பமாவதற்கு முன்பே தான் ஒரு அப்பாவி என்ற காரணத்தால் தன் காதலனால் நிறுத்தப்படுகிறது. அதை எப்படி அந்த பெண் எதிர்த்து மீண்டும் தன் வாழ்க்கையை செதுக்குகிறாள் என்பதுதான் கதை. இதற்கு நடுவில் அவர்கள் இருவரும் செல்லவிருக்கும் தேனிலவை தான் தனியாக சென்று ஒரு அப்பாவியாக இருக்கும் அவள் எப்படி தைரியமான பெண்ணாக மாறுகிறாள் என்பதும் இக்கதையின் சுருக்கமாகும். என்னதான் காதலன் தன் தவறை உணர்ந்து பின் அவளிடம் வந்து மன்னிப்பு கேட்டாலும் தனக்கான சுயமரியாதை காண முக்கியத்துவத்தை அவனிடம் வெளிப்படுத்தும் காட்சி பார்ப்பவரை கைதட்ட வைக்கிறது. சுதந்திரமான பெண்ணாக நினைக்கும் நீங்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்.
Suggested reading:
https://tamil.shethepeople.tv/women-of-cinema/4-important-things-to-learn-from-actress-samantha
https://tamil.shethepeople.tv/society/life-after-marriage-1552795
https://tamil.shethepeople.tv/society/efforts-to-make-your-partner-happy-1520955
https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-part-2-1518390