திருமணம் என்றாலே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பல கனவுகளை வைத்திருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் நிஜ வாழ்வில் நடக்குமா என்று கேட்டால், அதற்கான பதில் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதற்கு ஏற்ப தான் அனைத்துமே இருக்கும் என்பது தான் உண்மை. சிறு வயதிலிருந்து பெண்கள் ஒரு முறையான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள், ஆண்கள் ஒரு மாதிரியான சூழலில் வாழ்ந்திருப்பார்கள். இருவரும் சேர்ந்து வாழும் பொழுது அதை எப்படி இருக்கும் என்பதே கேள்வியாகும். திருமணம் நிச்சயத்த பிறகு பெண்களின் மனதில் ஆயிரம் கனவுகள் தோன்றிவிடும் ஆனால் ஆண்களின் மனதில் ஆயிரம் பொறுப்புகள் தான் முதலில் வரும். பெண்களுக்கு இருக்கும் ஆசைகளும் கனவுகளும் ஆண்களுக்கு இருக்கிறதா என்று கேட்டால் அவர்களுக்கு அது இருந்தாலும் முதலில் கண்களுக்கு தெரிவது பொறுப்பு தான்.
திருமணமான பெண்களின் கனவுகள்:
திருமணம் முடிந்த பிறகு ஒரு பெண் தான் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு போவது தான் வழக்கம் என இந்திய கலாச்சாரத்தில் பல வருடங்களாக இருந்து வருகிறது. இதை வட நாடுகளில் இத்தகைய கலாச்சாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. திருமணத்திற்கு பிறகு ஒரு ஆணும் பெண்ணும் அவர்களுக்கான வாழ்க்கையை தனியாக ஆரம்பித்து விட்டால் அவர்களுக்குள் இருக்கும் புரிதல் என்பது ஒரு விதமாக இருக்கும். ஆனால் ஒரு பெண் ஆணின் குடும்பத்திற்கு வந்து தன் வாழ்க்கையை தொடங்கினால் அதனால் ஏற்படும் நல்ல காரியங்களும் இருக்கிறது பிரச்சனைகளும் இருக்கிறது. திருமணம் நிச்சயத்துடனே தன் கணவனோடு எப்படி வாழ போகிறோம் என்ற கனவோடு பெண் தன் திருமண வாழ்க்கையை தொடங்குவதற்கு ஆயத்தம் ஆகிறது. ஆனால் அந்த கனவு நிஜமாவது நான் திருமணம் செய்ய போகும் ஆண் மகனின் கையில் தான் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கணவனின் பொறுப்பு:
ஒவ்வொரு மனைவியும் புரிந்து கொள்ள வேண்டியவை திருமணத்திற்கு பின்னால் ஆண்களின் பொறுப்பு என்பது வேறு விதமாக இருக்கும். இதற்கு முன் ஆண் தன் வாழ்க்கையை தனியாக நண்பர்களோடும் மற்றும் குடும்பத்தோடும் கழித்து வந்திருப்பார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு தன் மனைவி மற்றும் பிள்ளைகளை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற பயம் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். ஆண்களின் குணாதிசயம் அவர்களின் குடும்ப சூழலை ஒற்றதால் இருக்கும் என்பதுதான் உண்மை. ஒரு பெண்ணை ஆண் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சமூக நியதி உலகில் இருந்து கொண்டிருக்கும் வரையில் ஆண் மகனின் போராட்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். இதை பெண்களாகிய நாம் தான் மாற்ற வேண்டும். குடும்ப பொறுப்பில் ஒரு பங்கை நாம் எடுத்துக் கொண்டால் அது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
Life after marriage!
கணவன் மனைவியாக மாறிய பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டாலே போதும். தன் கணவனின் கோபத்திற்கு பின்னால் இருக்கும் ஆறுதலையும் தன் மனைவியின் அழுகையில் இருக்கும் காதலையும் இருவரும் புரிந்து கொண்டாலே பிரச்சனை என்ற ஒன்று உங்கள் வாழ்வில் வரவே வராது. மனைவியானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு கணவனுக்காக இங்கே வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை ஒவ்வொரு ஆண்மகனும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். புரிதல் தான் சந்தோஷத்திற்கான காலமாக இருக்கிறது.
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/efforts-to-make-your-partner-happy-1520955
https://tamil.shethepeople.tv/society/how-to-control-your-anxiety-1520573
https://tamil.shethepeople.tv/society/societies-view-on-baby-planning-1519195
https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-1515246