திருமணமான பின்னும் சரி அதற்கு முன்னும் சரி நம் துணை வரை எப்படி சந்தோஷமாக வைத்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உறவு வலுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியம். ஒருவர் நமக்காக என்ன செய்கிறார் எப்படி செய்கிறார் எதற்காக செய்கிறார் என்பதை புரிந்து கொள்வதற்கு நம் ஒவ்வொரு செயலும் முக்கியமாகும். வெறும் காதல் இருந்து விட்டால் அந்த உறவிற்கான அர்த்தம் கிடைத்து விடுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. மற்றொருவருக்காக நாம் எடுக்கும் சின்ன சின்ன முயற்சியும் அவர்களின் மேல் இருக்கும் அக்கறையை நாம் வெளிப்படுத்துவதற்கான ஒரு பாலமாக அமையும். சிலர் அந்த முயற்சிகளை கண்டுக்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதை புரிய வைப்பதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதும் ஓர் உறவில் தேவையான ஒன்று.
Every small gesture matters!
நம் உறவை வலுப்படுத்துவதற்காக மற்றும் நம் அன்பை வெளிப்படுத்துவதற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன முயற்சியும் அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறது என்றால் எந்த தயக்கமும் இன்றி நீங்கள் அதனை செய்யலாம். உதாரணத்திற்கு நீங்கள் long distance relationship இல் இருக்கிறீர்கள் என்றால் தினமும் காலை ஒரு good morning text அனுப்புங்கள். அவர்களின் நாள் எப்படி சென்றது என்று அந்த நாளின் முடிவில் கேட்டு இருவரும் உரையாடிக் கொள்ளுங்கள். மேலும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது video call பேசிக்கொள்ளுங்கள். இதெல்லாம் நீங்கள் உங்கள் உறவை மேம்படுத்த செய்யக்கூடிய சுலபமான விஷயங்களாகும்.
Communication:
உங்கள் கணவருக்கும் மனைவிக்கும் என்ன பிடிக்கும் என்று இருவரும் பேசி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் பேசவில்லை என்றால் தான் இருவருக்கும் எதில் விருப்பம் என்ற சந்தேகம் இருக்கும். எனவே தயக்கத்தை விட்டு இருவரும் முதலில் மனம் விட்டு பேசி பழகுங்கள். உங்கள் துணைவர் எதிர்பார்ப்பது அவர்களின் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு பாசம் காதல் இவை அனைத்தையும் வெளிப்படையாக காட்ட வேண்டும் என்றுதான். நீங்கள் சொல்லாமல் வெளி காட்டாமல் இருந்தால் அவர்கள் இவர் நம்மை காதலிக்கிறாரா என்ற சந்தேகத்திலேயே தான் வாழ்க்கை முழுவதும் இருப்பார்கள். எனவே முதலில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக பேசி பழகுங்கள். எந்த ஒரு உறவிற்கும் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
Efforts to make your partner happy!
சிலருக்கு வாழ்ந்து விதத்தை பொறுத்து எப்படி கணவனிடமும் மனைவியிடமோ நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருக்கும். ஆனால் அவர்களும் உங்களிடம் அளவு கடந்த பாசத்தை எதிர்பார்க்கும் பொழுது உங்களுக்கு அது தெரியவில்லை என்றால் அதனை எப்படியாவது தெரிந்து கொண்டு அதற்கான வழியை பற்றி யோசியுங்கள். மேலும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்து கொண்டு அவர்கள் தான் உங்களின் உலகம் என்பதை எப்படி புரிய வைக்கலாம் என்று யோசித்துப் பாருங்கள். மேலும் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ளுங்கள்.
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/how-to-spend-quality-time-with-husband-and-wife
https://tamil.shethepeople.tv/society/how-to-control-your-anxiety-1520573
https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-1515246
https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-part-2-1518390