தமிழ் சினிமாவை பொருத்தவரை பெண் இயக்குனர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. பெண்கள் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பெண்களின் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பது இந்த படங்கள் ஒரு எடுத்துக்காட்டாகும். இதுவரை ஆண் இயக்குனர்களின் பார்வையில் இருந்து படங்களை பார்த்துக் கொண்டிருந்த நாம் ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் அனைத்து உணர்ச்சிகளையும் தெளிவாக சொல்லும் பெண் இயக்குனர்கள் இயக்கிய படங்களை பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் இயக்கிய எனக்கு மிகவும் பிடித்த ஒரு சில படங்களை இன்று நான் உங்களுக்கு பரிந்துரைக்க உள்ளேன்.
Haleetha Shameem இன் Sillu Karupatti:
"சில்லு கருப்பட்டி" என்ற இந்த தமிழ் திரைப்படமானது anthology வகையை சார்ந்த படமாகும். இதில் மொத்தம் நான்கு விதமான காதல் கதைகள் இருக்கிறது. சிறுவயதில் ஏற்படும் முதல் காதலில் தொடங்கி முதுமையில் மலர்கின்ற அழகான காதலையும் இந்த படம் வெளிப்படுத்துகிறது. ஒரு குப்பை பொறுக்கும் சிறுவனின் பணக்கார காதலியை அவன் சந்திக்க மற்றும் பார்க்க நினைக்கும் காட்சிகளை அழகாக வடிவமைத்துள்ளார். மேலும் திருமணத்தின் மீது மோகம் கொள்ளாத ஒரு 50 வயதுக்கு மேல் இருக்கும் பெண்ணின் பார்வையையும் தன் மனைவியை இழந்த ஒரு 50 வயதை கடந்த ஆணின் காதல் பார்வையையும் எப்படி அழகாக சேர்க்கிறார் என்பதே இன்னொரு காதல் கதை ஆகும். Taboo topic என்று அனைவராலும் பேச தயங்கும் testicular cancer ஆல் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு ஆணை இப்படியும் ஒரு பெண்ணால் காதலிக்க முடியும் என்ற புது விதமான ஒரு பார்வையை அழகாக இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் வீட்டு வேலைகளை செய்யும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஒரு மனைவியின் மனதில் என்ன இருக்கும் என்பதை ஆணித்தரமாக ஒரு கணவனுக்கு எப்படி புரிய வைக்க முடியும் என்பதை மிகவும் தைரியமாக காட்சி வடிவத்தில் திரையிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் மூலம் காதலின் மேல் உங்களுக்கு ஒரு புது விதமான பார்வை உண்டாகும் என்பது உண்மை.
Sudha Kongara வின் Paava Kadhaigal:
ஒரு பெண் பிறந்ததிலிருந்து வளரும் வரை சமூகத்தால் அவள் சந்திக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள படம் "Paava Kadhaigal". ஒரு திருநங்கையின் மனதில் எப்படி காதல் வெளிப்படும் என்பதை "சர்தார்" என்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துள்ளார். Inter religious திருமணம் செய்யும் தன் தங்கை மற்றும் நண்பனுக்காக உயிரையே விடும் ஓர் பாசத்திற்குரிய திருநங்கையின் கதை தான் "தங்கம்" என்ற பாகத்தில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜாதியின் பெயரால் தன் மகளை சமூகத்திற்காக கொலை செய்யும் ஒரு ஜாதி வெறி கொண்ட தகப்பனை, தன் இன்னொரு மகள் எப்படி வந்து புரிய வைக்கிறார் என்பதை சாட்டையடி காட்சிகளாக அமைத்துள்ளார். சிறுவயதிலேயே பாலியல் வன்கொடுமையை அனுபவித்த ஒரு சிறுமியின் குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருக்கும் மேலும் அந்த சிறுமியை மன ரீதியாக எப்படி அதில் இருந்து வெளி கொண்டு வர வேண்டும் என்பதை உணர்ச்சிவயமான காட்சிகளாக திரைப்படத்தை செதுக்கியுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட கர்ப்பமாக இருக்கும் தன் மகளை ஏற்றுக் கொள்வதாக கூறி வீட்டுக்கு அழைத்து தன் மகளின் கணவனையும், கர்ப்பமாக இருக்கும் தன் மகளையும் கௌரவத்திற்காக கொலை செய்யும் ஒரு கொடூர மனம் கொண்ட அப்பாவை தைரியமான காட்சிகளாக சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் உண்மை கதைகளை "பாவ கதைகளாக" காட்சிப்படுத்தியுள்ளார் சுதா கோங்குரா.
இரு வேறுபட்ட திரைப்படங்களை நான் உங்களுக்கு பரிந்துரை செய்துள்ளேன். ஒரு பெண்ணின் மனதில் இருக்கும் அழகான காதலையும் மற்றொரு பெண்ணின் மனதில் இருக்கும் சமூகத்தின் மேலான கோபங்களையும் விவரிக்கிறது இந்த இரண்டு படமும். உங்கள் வார இறுதியில் பூரிப்பை இந்த இரண்டு படங்கள் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/good-vibe-movies-to-watch-in-ott-1554517
https://tamil.shethepeople.tv/society/life-after-marriage-1552795
https://tamil.shethepeople.tv/society/efforts-to-make-your-partner-happy-1520955
https://tamil.shethepeople.tv/society/questions-to-ask-your-partner-before-marriage-part-2-1518390