Advertisment

Do seeds help in weight loss?

ஒரு மரத்தின் ஆரோக்கியம் எப்படி விதையில் தெரிகிறதோ, அதேபோல் ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை காப்பதற்கும் விதை பயன்படுகிறது. உடல் எடையை பராமரிப்பதற்கும் குறைப்பதற்கும் ஏற்ற விதைகள் என்ன என்பதை கட்டுரையில் பார்க்கலாம்!

author-image
Pava S Mano
New Update
Seeds

Image is used for representational purpose only

நாம் தினமும் சாப்பிடும் உணவில் சில விதைகளை சேர்த்துக் கொள்ளும் பொழுது நம் உடம்பிற்கு தேவையான அனைத்து சத்துகளையும் அது கொடுக்கிறது. மேலும் உடல் எடை குறைப்பதற்கான எளிமையான வலியும் இது ஆகும். இந்த விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான கலோரியை உடம்பிற்குள் செலுத்துகிறது. எனவே உடல் எடை என்பது குறைப்பதற்கும் பராமரிப்பதற்கும் விதைகள் மிகவும் முக்கியமாகும். என்னென்ன விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை கீழே காணலாம்.

Advertisment

Pumpkin seeds:

பப்பாளி விதைகளில் பொதுவாகவே அதிக புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால் அதனை நாம் சாப்பிடும் பொழுது எடை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் அதில் மக்னீசியத்தின் சத்து நிறையவே இருக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் ஸ்னாக்ஸ் அல்லது சாலடுகளில் இந்த விதையை சேர்த்து நீங்கள் சாப்பிடலாம். நான் சற்று சுவையை கூட்டுவதற்காக பப்பாளி விதையை ஒரு கடாயில் சற்று நெய் ஊற்றி வறுத்த பின் அதில் மிளகாய் பொடி மற்றும் உப்பு கலந்து சாப்பிடுவேன். நீங்களும் அதை சுவைத்துப் பாருங்கள்.

Flax seeds:

Advertisment

பிளாக் சீட்ஸில் அதிக நார்ச்சத்து மற்றும் ஒமேகா சத்துக்கள் இருப்பதால் இருதயத்தின் நலத்தை இது பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை நன்றாக செய்து மேலும்  நமக்கு பசி அதிகமாக வராமல் தடுக்கும். இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து உடம்பிற்கு மிகவும் நல்லதாகும்.

Chia seeds:

பிளாக் சீசில் இருப்பது போல சியாசிகளும் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது. இதனை நீங்கள் தண்ணீரில் கலக்கும் பொழுது ஜெல் போன்று மாறிவிடும் எனவே இது பசியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இதில் ஒமேகா சத்து இருப்பதால் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடை குறைவதற்கு இது உறுதுணையாக இருக்கும். நீங்கள் செய்யும் ஸ்மூதியில் சியா சீட்சை போட்டு செய்வதால் உங்களுக்கு ஆரோக்கியம் கூடும்.

Advertisment

Sunflower seeds:

சூரியகாந்தி விதைகளில் புரதச்சத்து நார்ச்சத்து ஆரோக்கியமான கொழுப்பு சத்து வைட்டமின் ஈ மெக்னீசியம் போன்ற ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தும் இருக்கிறது. நீங்கள் இதனை கடாயில் போட்டு வறுத்து அப்படியே சாப்பிடலாம். உங்களுக்கு பசிக்கும் பொழுது நீங்கள் இதனை ஸ்நாகாக உட்கொள்ளலாம்.

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/health/benefits-of-walking-10000-steps-a-day-1561345

https://tamil.shethepeople.tv/health/daily-mistakes-that-disturb-weight-loss-1561246

https://tamil.shethepeople.tv/health/frustrated-by-double-chin-do-this-exercise-immediately-1559371

Advertisment

https://tamil.shethepeople.tv/society/experts-say-music-relieves-stress-is-that-true-1559211

 

pumpkin seeds chia seeds Flax seeds
Advertisment