எடையை குறைக்க கடினமாக உழைப்பை போட்டுக் கொண்டிருக்கும் உங்களால் ஏன் அந்த எடையை குறைக்க முடியவில்லை என்று யோசித்து உள்ளீர்களா? நாம் எடையை குறைக்கும் பொழுது சரியான உடற்பயிற்சி மற்றும் தேவையில்லா உணவுகளை சாப்பிடுதலை கண்டிப்பாக நிறுத்தி இருப்போம். இருந்தும் எடை குறையவில்லை என்று கவலைப்படுவோர் நிறைய பேரை காண முடிகிறது. இவ என்ன பிரச்சனை என்று உற்று நோக்கும் பொழுது நீங்கள் செய்யும் ஏதோ ஒரு தவறு தான் இது நடக்கிறது என்ற புரிதலுக்கு வருகிறது. Weight loss சுலபம் தான். அந்தத் தவறு என்னவாக இருக்கும் என்பதை கீழே காணலாம்:
காலை உணவை தவிர்ப்பது:
நீங்கள் காலையில் எழுந்த உடனேயே உங்கள் வயிற்றில் எதுவும் இருக்காது. நீங்கள் வெறும் பழச்சாறை உட்கொண்டு பின் சிறிது நேரம் கழித்து டீ டைம் ஸ்நாக்ஸ் அல்லது உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து விடுகிறீர்கள். இப்படி காலை உணவை தவிர்ப்பதால் உடம்பின் கலோரியின் அளவு அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது:
டயட் என்று வந்தாலே அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடச் சொல்லித்தான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் அதற்கென்று ஒரு அளவு இருக்கிறது அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் அதுவே கொழுப்பாக மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள்..
உங்களுக்குப் பிடித்த அனைத்தையும் விட்டுவிடுவது:
நீங்கள் டயட் என்று ஆரம்பித்த உடனேயே எந்த உணவெல்லாம் உங்களுக்கு பிடிக்கிறதோ அந்த உணவை எல்லாம் தவிர்த்து விடுவீர்கள். டயட் இருப்பவர்கள் செய்யும் பொதுவான தவறு இதுதான். உங்களுக்கு பிடித்தமான உணவை நீங்கள் தவிர்க்கும் பொழுது இதுவரை அதற்கு பழக்கப்பட்ட உங்கள் உடம்பு நீங்கள் இன்னும் விதவிதமாக சாப்பிட வேண்டும் என்று தூண்டுதலை ஏற்படுத்துகிறது. எனவே இந்த தவறை நீங்கள் செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக டயட் இருக்க முயற்சி செய்யுங்கள்.
அவசரமாக சாப்பிடுவது:
காலையில் நேர குறைபாடு காரணமாக நீங்கள் மிகவும் அவசரத்தில் சாப்பிட்டு வேலைக்கு செல்பவராக இருந்தீர்கள் என்றால் அதனால் கூட உங்கள் உணவை சரியாக மென்று உண்பதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும். எனவே அமைதியாக உட்கார்ந்து சாப்பிடுங்கள். மேலும் நீங்கள் சாலட் களை எடுத்துக் கொள்ளும் பொழுது மேலே ஊற்றப்படும் சாஸ்களால் கூட கலோரி ஏறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
அதிகமான Cheat days:
சிலர் வாரம் முழுவதும் டயட் இருந்த பிறகு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் சீட்டு என்று நினைத்து அவர்களுக்கு பிடித்த உணவு அனைத்தையும் அந்த ஒரே நாளில் சாப்பிட்டு கலோரியை ஏற்றி விடுவார்கள். இதுவும் தவறான விஷயமாகும்.
இதுபோன்ற சிறு சிறு தவறுகளை செய்யாமல் உங்கள் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு ஆரோக்கியமான உணவையும் உற்சாகமான உடற்பயிற்சியையும் செய்து இருந்தாலே உங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/how-to-maintain-liver-health-1557088
https://tamil.shethepeople.tv/society/how-to-control-your-anxiety-1520573
https://tamil.shethepeople.tv/women-of-cinema/female-directed-movies-of-tamil-cinema-1557366
https://tamil.shethepeople.tv/society/experts-say-music-relieves-stress-is-that-true-1559211