அம்மா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் குரு Bangaru Adigalar மாரடைப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். இவர் வாழ்ந்த நாட்களில் அமைத்த ஒரு பெரிய சக்தி பீடம் தான் ஆதிபராசக்தி திருக்கோயில் என்று மேல்மருவத்தூரில் அமைந்துள்ளது. ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கிய இவர், ஆன்மீகத்தின் மேல் கொண்ட பற்றின் காரணமாக காரணமாக ஆன்மீக குருவாக வருங்காலத்தில் உரு மாறினார்.
அவரின் மேன்மையான பண்பு அனைவரையும் அவரின் பால் மற்றும் அவரின் கொள்கையின் பால் ஈர்க்க வைத்தது. பெண்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது பெண்கள் பூஜை புனஸ்காரங்கள் செய்யக்கூடாது என்ற அவநம்பிக்கையை வேரோடு அறுக்கும் வகையில் பெண்களை மட்டுமே மையமாகக் கொண்டு அவரின் வழிபாடுகள் இருந்தது.
ஆதிபராசக்தி திருக்கோயிலுக்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். அவரின் கொள்கையின் மேல் கொண்ட பற்றால் அனைவரும் பங்காரு அடிகளாரை உரிமையோடு "அம்மா" என்று அழைத்தனர்.
Periods is a God's gift:
பெண்கள் மாதவிடாய் காலங்களில் இவற்றை செய்யக்கூடாது என்று ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆனால் அவற்றை அனைத்தையும் முறியடிக்கும் வகையில், மாதவிடாய் காலங்களில் கூட பெண்கள் கோயிலுக்கு வரலாம் என்று வற்புறுத்தியவர் பங்காரு அடிகளார். நீங்கள் அந்த கோவிலுக்கு சென்றுள்ளீர்கள் என்றால் உங்களுக்கே தெரியும். அங்கு அனைத்து கோயில்களிலும் இருப்பது போல் பூஜை வழிபாடுகள் இருக்காது. முற்றிலும் வேறுபட்ட ஒரு பரிணாமத்தை உருவாக்கியுள்ளார் இவர். ஆன்மீகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறைக்குள் இருந்த காலம் போய், இப்படி உள்ள ஒரு வழிபாட்டிலும் மக்களுக்கும் நம்பிக்கை வர ஆரம்பித்தது இவரின் ஆசிர்வாதத்தால் தான். ராஜீவ் காந்தி தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை ஸ்டாலின் அனைவரும் இவரின் ஆசை பெற்றவர்கள் தான். மக்களுக்கு இவர் செய்த சேவைகள் எண்ணில் அடங்காதவை. பெண்களின் மீதான ஆன்மீக தடைகளை முற்றிலும் தகுத்தவர் இவர்.
நம் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களும் அவர்களும் இவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். வட இந்தியாவில் தொடங்கி வரை இவரின் ஆன்மீக சக்தி மன்றம் நிறையவே மக்களை ஈர்த்துள்ளது. பெண்களை அதிக இடத்தில் ஒதுக்கினாலும் அவர்கள் மனது மிகவும் வருத்தப்படுவது அவர்களை கோயில்களுக்குள் வருவதை தவிர்ப்பது தான். இவரின் புதுமையான இந்த ஆன்மீக வழிபாடு என்பது பெண்களை சார்ந்து இருப்பதால் இவருக்கு பெண் பக்தர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவரின் மேல் இருக்கும் நம்பிக்கையாலும் இவரின் கோட்பாடுகளுக்கு இணங்க பெண்களும் மாலை அணிந்து கோயில்களுக்கு சென்று இருமுடி கட்டி அனைத்து சேவைகளையும் செய்வதற்கு ஏற்ப அனைத்தையும் உருவாக்கியுள்ளார்.
பெண்களை தெய்வமாக கருதும் இந்த நாட்டில் கோயிலுக்குள் அவர்கள் வருவதை இன்றும் தவிர்க்கும் சில கிராமங்களும் இருக்கும் நிலையில் பெண்களுக்காகவே ஒரு வழிபாட்டு முறையை கண்டறிந்த இவர் பெண்ணியத்தின் புதுமை நாயகன் தானே!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/7-yoga-poses-for-pcospcod-1345175
https://tamil.shethepeople.tv/society/traveling-kit-you-should-never-forget-1563970
https://tamil.shethepeople.tv/society/how-to-set-boundaries-in-a-relationship-1564049
https://tamil.shethepeople.tv/society/experts-say-music-relieves-stress-is-that-true-1559211