How to set boundaries in a relationship?

சமூகம் என்ற ஒரு கட்டமைப்பிற்குள் வருவதற்கு முன் நாம் ஒரு வாழ்க்கை முறையில் வாழ்ந்து இருப்போம். அதற்குள் வந்த பிறகு நம்மளுடைய வாழ்க்கை முறை என்பது அதை சார்ந்த இருக்கும். ஆனால் அவற்றில் நம் boundaries எப்படி உருவாக்குவது என்பதை காணலாம்.

author-image
Pava S Mano
New Update
Boundaries

Image is used for representational purpose only

ஒரு உறவை சரியாக கொண்டு செல்லவும் நேர்மறையான பாலத்தை உருவாக்குவதற்கும் சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் ஒரு boundary ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இது இருவரின் மனநிலையையும் ஆரோக்கியத்தையும் பார்ப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதே உண்மை. Boundary என்பது ஒருவருக்கொருவர் மாறும். சிலர் அனைத்தையும் அனைவரிடமும் சொல்லலாம் என்று நினைப்பார்கள் ஆனால் சிலருக்கு அப்படி வெளிப்படையாக பேசுவது என்பது சரியாக இருக்காது. எதுவாக இருந்தாலும் அதை மற்றவர்களிடம் பேசி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டுவது அவசியம் ஆகும். இல்லையென்றால் அவர்களே ஒருவிதமாக புரிந்து கொண்டு அதனால் பிரச்சனைகள் உருவாவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Setting boundaries in workplace:

Advertisment

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் interview செய்யும்பொழுதே என்னால் இதை செய்ய முடியும் செய்ய முடியாது என்று தெளிவான வாதத்தை வைத்து விட வேண்டும். அது உங்களுக்கு பிற்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் உங்களுக்கான personal boundaries என்ன என்பதை ஆராய்ந்து கண்டுபிடிங்கள். பின் மற்றவர்களிடம் அதனை தாண்டக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்தி விடுங்கள். எதையும் நேரடியாக பேசி விடுங்கள். தேவையற்ற பேச்சுக்களை உங்களோடு வேலை பார்ப்பவர்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வேலை நேரத்தை தாண்டி நீங்கள் வேலை செய்ய செய்ய விரும்பவில்லை என்றாலும் அதனையும் தெரிவித்து விடுங்கள். மேலும் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள். No சொல்வதற்கு பழகிக் கொள்ளுங்கள். 

Setting boundaries in friendship:

நண்பர்கள் மத்தியில் நாம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம். குடும்பத்தில் இருப்பவர்களை விட நண்பர்களுக்கு தான் நம்மை பற்றி நன்றாக தெரியும். இருந்தாலும் சில பேரிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம் personal விஷையங்களை மற்றவர்களிடம் share செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் என்ன என்று சொல்லி தெளிவு படுத்தி விடுங்கள். அவர்களிடம் நீங்கள் நேரம் கழிக்கும் பொழுது அது தேவையா என்று யோசித்து முடிவு எடுங்கள்.

Setting boundaries with parents:

உங்களின் பெற்றோர்கள் உங்கள் சுதந்திரத்தில் மிகவும் பெரிய பங்கு வகிப்பவர்கள். அவர்களிடமும் உங்களுக்கு எது பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பதை தெளிவாக சொன்னால்தான் அது அவர்களுக்கு புரியும். இல்லையென்றால் அவர்கள் உங்கள் சுதந்திரத்தில் கண்டிப்பாக தலையிடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு உங்கள் நண்பர்களை அவர்களோடு அதிகமாக கலந்துரையாடல் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனையும் அவர்களிடம் நீங்கள் தெளிவாக சொல்லிவிடலாம் இதில் எந்த தவறும் கிடையாது.

Advertisment

Setting boundaries என்பது அனைத்து உறவுகளிலும் முக்கியம் ஆகும். அதை நீங்களே தான் தேர்வு செய்ய வேண்டும்.

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/experts-say-music-relieves-stress-is-that-true-1559211

https://tamil.shethepeople.tv/society/efforts-to-make-your-partner-happy-1520955

https://tamil.shethepeople.tv/society/life-after-marriage-1552795

Advertisment

https://tamil.shethepeople.tv/society/societies-view-on-baby-planning-1519195

boundaries