காரம் என்பது நம் உணவில் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டிய ஒரு சுவையாகும். சிலருக்கு உணவு காரமாக இருந்தால் மிகவும் பிடிக்கும். அதிகப்படியான மசாலாக்களை போட்டு தான் சுவையை மெருகேற்றுவார்கள். நம் நாக்கும் அதற்கு அடிமையாகி விடுவதற்கு காரணம் அந்த மசாலாவில் இருக்கும் காரம் தான். ஆனால் செரிமானத்தின் போது இதனால் நம் வயிற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. செரிமானம் தடைபடுவதால் உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். Spicy food பிரியர்களுக்கான ஒரு alert article இது!
காரமான உணவுகளில் அதிகப்படியான சூடு தரும் பொருட்கள் இருப்பதால் நம் வாய் அதனை கேட்டுக் கொண்டே இருக்கும். தென் தமிழகங்களில் காரசாரமாக இருக்கக்கூடிய உணவுகள் அனைவரின் விருப்பமாக இருந்து வருகிறது. அது கிராமிய சமையலாக இருந்தாலும் சரி மேற்கத்திய உணவாக இருந்தாலும் சரி, காரம் சற்று கூட இருந்தால் அனைவரும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் செரிமானத்தில் அது எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.
மிளகாயில் இருக்கும் capsaicin என்னும் பொருள் தான் காரத்தை கொடுக்கிறது. இது நம் வாயில் கார ருசி தெரிவதற்கான ஒரு கூண்டு கருவியாக இருக்கிறது. காரம் சாப்பிடும் பொழுது நமக்கு தீர்க்கும் மேலும் இதனால் இருதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து விடும். மேலும் இதனால் செரிமான மாறுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
சிலருக்கு காரமான உணவு சாப்பிட்டால் சீக்கிரமாக செரிமானம் நடந்து விடும் என்று சொல்லுவார்கள். ஆனால் சிலருக்கோ diarrhoea மற்றும் வயிறு வலி ஏற்படுவதாக கூறுவார்கள். ஒரு ஒருவரின் உடல் நிலையை பொறுத்து மாறும். அதிகமான கார உணவை சாப்பிடுவதால் வயிற்றில் அதிகமாக அமிலம் சுரக்கும். மிளகாயில் இருக்கும் capsaicin தான் வயிற்றினம் அமிலத்தை சுரக்க சொல்லி எச்சரிக்க சொல்லும். இது ரத்தக்குழாயில் கலக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் குடல் பிரச்சனைகள் வருவதற்கு இது ஒரு காரணமாக மாறிவிடும்.
காரமான உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளாமல் அளவாக சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்கும் வயிற்றுக்கும் எந்த தீங்கும் வராது. இவை அனைத்தையும் தாண்டி தினமும் 8 கிளாஸ் அளவு ஆவது தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் ஆகும். அது செரிமானத்தை கூட்டுவதோடு உடலுக்கு தேவையான நீர் சத்தை வழங்கும்.
காரமான உணவு தான் அல்சருக்கு காரணம் என்று பல சொல்லிக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மை கிடையாது. அல்சர் என்பது நாம் சரியாக உணவு சாப்பிடவில்லை என்றால் ஏற்படும். காரமான உணவை சாப்பிடும் பொழுது அல்சர் இருப்பவர்களுக்கு அந்த எரிச்சல் இன்னும் கூடும் என்பதால் தான் மருத்துவர்கள் அல்சர் உள்ளவர்கள் காரமான உணவை சாப்பிடக்கூடாது என்று பரிந்துரைக்கின்றனர். காரத்திலேயே நிறைய வகை இருக்கிறது. பச்சை மிளகாயில் ஒருவிதமான காரமும் குடைமிளகாயில் ஒரு விதமான காரமும் வரமிளகாயில் ஒரு விதமான காரமும் கிராம்பு பட்டையில் ஒரு விதமான காரணம் மிளகில் ஒருவிதமும் என பல வகைகள் இருக்கின்றன. மிளகு காரம் சேர்த்துக் கொள்வது நம் உடம்பிற்கு மிகவும் அவசியமாகும். பூண்டில் இருக்கும் காரம் கூட உடலுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றன.
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/do-seeds-help-in-weight-loss-1563506
https://tamil.shethepeople.tv/health/benefits-of-walking-10000-steps-a-day-1561345
https://tamil.shethepeople.tv/health/daily-mistakes-that-disturb-weight-loss-1561246
https://tamil.shethepeople.tv/society/good-vibe-movies-to-watch-in-ott-1554517