Good gut health, Good emotional well-being!

Plant protein இல் இருக்கும் நன்மைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம்.Gut health என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த கட்டுரை மிகவும் உறுதுணையாக இருக்கும்.

author-image
Pava S Mano
New Update
Gut health

Image is used for representational purpose only

ஒரு நல்ல குடலின் ஆரோக்கியம் தான் மனநலத்தை சரியாக வைத்திருக்கும் neurotransmitter ஆன serotonin ஐ உற்பத்தி செய்யும். ஒரு மனிதனின் தூக்கம் சந்தோஷம் மற்றும் பசியின் மேல் ஆர்வத்தை தூண்டுவதற்கு இந்த ஹார்மோன் உறுதுணையாக இருக்கிறது. இது நம் குடலில் தான் அதிகம் உற்பத்தி ஆகிறது. எனவே நம் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டோம் என்றால் இந்த ஹார்மோனின் அளவு தேவையான அளவு கிடைக்கும் இதனால் நம் மனநலத்தின் மீது நேர்மறை விளைவு இருக்கும். 

Advertisment

நம் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதாலும் சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். நம் மனநலத்தில் ஏற்படும் depression மற்றும் anxiety கூட இதற்கு காரணமாக இருக்கலாம். ஆரோக்கியமான மற்றும் சமமான வாழ்க்கை முறையை பின்பற்றும் பொழுது இதுபோன்ற மனநல அறிகுறிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் மற்றும் குடலின் ஆரோக்கியத்தையும் உயர்த்திக் கொள்ளலாம் .

Gut health என்பது குடல் இருக்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பை குறிக்கும். நம் குடலின் ஆரோக்கியம் சரியாக இல்லை என்றால் central nervous system பாதிக்கப்படும். எனவே இந்த இரண்டிற்கும் ஆன தொடர்பு என்பது தான் நம்மளுடைய மன அழுத்தம் மற்றும் மற்ற cognitive function ஐ தொடர்புப்படுத்துகிறது.

குடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் என்பது பிரவுன் அரிசி மற்றும் golden peas இல் இருந்து கிடைக்கும் புரத ச்சத்தை சார்ந்து இருக்கிறது. செடி கொடிகளில் இருந்து வரும் புரதச்சத்தை உட்கொள்ளும் பொழுது நம் உடலின் ஆரோக்கியம் சீராக வைக்கப்படுகிறது.

Low in saturated fat:

Advertisment

Plant protein ஆல் கிடைக்கும் நன்மை குடல்களுக்கு மட்டுமில்லாமல் நம் மனநலத்தின் ஆரோக்கியத்தையும் காக்கிறது. மிருகங்களில் இருந்து எடுக்கப்படும் புரதச்சத்தை காட்டிலும் இந்த plant protein இல் கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவே இருக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான இதயம் தான் மனநலத்தையும் சிறந்த ரத்த ஓட்டத்தையும் மற்றும் சரியான ஆக்சிஜன் ஐ மூளைக்கு செலுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் plant protein ஐ தேர்வு செய்வதன் மூலம் உங்களின் உடல் மற்றும் மனநலம் பாதுகாக்கப்படுகிறது 

High in antioxidants:

Plant protein இல் அதிகப்படியான antioxidants மற்றும் anti-inflammatory கலவைகள் இருக்கிறது. இது depression மற்றும் anxiety வருவதற்கான வாய்ப்பை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தினசரி உணவில் நீங்கள் plant protein ஐ எடுத்துக்கொள்ளும் பொழுது உடம்பில் ஏற்படும் வீக்கம் மற்றும் ஆரோக்கியமான மூளைக்கு இது உறுதுணையாக இருக்கும். 

Plant protein உங்களின் சிறந்த மனநலத்தை ஆதரிக்கும், மேலும் இதோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் தினசரி உணர்வையும் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். நீங்கள் எந்த ஒரு உணவை எடுத்துக் கொள்வதற்கு முன்பும் ஒரு மருத்துவ ஆலோசகரை ஆலோசித்த பின்பு செய்யுங்கள். தினசரி உடற்பயிற்சி மற்றும் தேவையான அளவு தூக்கம் என்பது நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/back-pain-in-20s-1613044

Advertisment

https://tamil.shethepeople.tv/health/how-to-control-hair-frizziness-during-monsoon-1569379

https://tamil.shethepeople.tv/society/how-to-set-boundaries-in-a-relationship-1564049

https://tamil.shethepeople.tv/society/traveling-kit-you-should-never-forget-1563970

Gut health