Advertisment

How to control hair frizziness during Monsoon?

மழைக்காலம் என்று வந்து விட்டாலே நம் முடியின் Frizziness மற்ற நாட்களில் இருப்பதை விட அதிகமாக இருக்கும். இதனால் நமக்கு தனி மன உளைச்சலை வந்துவிடும். ஆனால் இது சுலபமாக சரி செய்யக்கூடிய ஒன்றுதான் என்பதை நீங்கள் நம்ப வேண்டும்.

author-image
Pava S Mano
25 Oct 2023 புதுப்பிக்கப்பட்டது Oct 26, 2023 16:00 IST
New Update
Hair frizziness

Image is used for representational purpose only

மழைக்காலம் என்று வந்துவிட்டாலே நம் முடியை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடுகிறது. பொடுகில் தொடங்கி முடியின் மென்மை போல் பல சிக்கல்கள் இந்த காலங்களில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவும் இருக்கிறது. நாம் ஏதாவது வெளியே செல்கிறோம் என்றால் அந்த சமயத்தில் நம் முடியை நாம் பாதுகாப்பது மிகவும் கடினமாக இருக்கும். சரியான hair care routine கடைப்பிடித்தாலே இந்த hair frizziness ஐ கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். Frizz என்பது காற்றில் இருக்கும் ஈரப்பதம் நம் முடியின் மேல் படுவதால் ஏற்படுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த நீங்கள் ஒவ்வொரு முறை ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்த பின் conditioner போடுவது மிகவும் அவசியமாகும்.

Advertisment

ஈரப்பதம் உங்கள் முடிக்கு தேவை:

Frizzy ஆக இருக்கும் கூந்தல் என்பது மிகவும் உலர்ந்து தான் இருக்கும். எனவே உங்கள் முடியை ஈரப்பதத்துடன் வைப்பது உங்கள் கடுமையாகும். Moisturizing shampoo மற்றும் conditioner உங்கள் முடியின் ஈரப்பதத்தை தக்க வைத்து முடி dry ஆகாமல் இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.

எண்ணெய் தேய்ப்பது அவசியம்:

Advertisment

வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை மற்றும் ஈரப்பதம் கிடைப்பதற்காக நீங்கள் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது மிகவும் அவசியமாகும். தலைக்கு எண்ணெய் வைப்பது என்பது முடியின் ஆரோக்கியத்தை காப்பது மட்டும் அல்லாமல் உடலின் ஆரோக்கியத்தை காப்பதற்கும் உறுதுணையாக இருக்கிறது. மேலும் தேங்காய் எண்ணெய் உங்கள் முடிக்கு சிறந்த கண்டிஷனராக அமையும்.

Say no to heat styling:

நாம் விதவிதமான hairstyle செய்வதற்காக நம் முடியை பல equipments பயன்படுத்தி அழகு படுத்திக் கொள்கிறோம். ஆனால் அவை அனைத்தும் நம் முடியும் ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள மறுக்கிறோம். எனவே முக்கியமாக மழைக்காலங்களில் நீங்கள் இதுபோன்ற கருவிகளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். அப்படி அதை பயன்படுத்த வேண்டும் என்ற சூழல் வந்தால் அதற்கு முன் heat protectant spray பயன்படுத்திய பின்னர் கருவியை உங்கள் கூந்தலில் பயன்படுத்துங்கள்.

Advertisment

Anti-frizz serum அவசியம்:

நீங்கள் தலைக்கு குளித்த பின்னர் உங்கள் முடியை கண்டிஷன் செய்வதற்காக இந்த சீரத்தை பயன்படுத்துவது மிகவும் அவசியம். இதனால் உங்கள் முடி frizzy ஆக தெரியாமல் மென்மையாக மற்றும் பளபளப்பாக தெரியும். நீங்கள் தினமுமே இந்த சீரத்தை பயன்படுத்தினால் வெளியில் சென்று வரும் பொழுது உங்கள் முடியில் ஏற்படும் புழுதிகள் குறையும்.

ஈரத்தை உலர்த்த towel வேண்டாம்:

Advertisment

நாம் அனைவரையும் பார்த்திருப்போம் தலைப்பு குளித்து முடிந்த பின் துண்டில் பயங்கரமாக தலையை துவட்டுவார்கள். ஆனால் அதனால் முடிக்க ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை அவர்களுக்கு புரிந்து கொள்ள தெரிவதில்லை. முடியை தமிழில் வைத்து உலர்த்தாமல் உங்களின் பழைய t shirt இருந்தால் அதனை வைத்து உலர்த்திக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் முடியில் ஏற்படும் frizziness குறையும்.

சரியான hairstyle ஐ தேர்வு செய்யுங்கள்:

முக்கியமாக மழைக்காலங்களில் உங்கள் முடிகளை ஜடையாக பின்னிக்கொள்வது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். அப்படி நீங்கள் free hair விட வேண்டும் என்ற கட்டாயம் வந்தால் அதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து கொள்ளுங்கள்.

Advertisment

ஆரோக்கியமான உணவு முறை:

நம் உடம்பிற்கு எப்படி அனைத்து வகையான ஊட்டச்சத்தும் தேவையோ அப்படித்தான் நம் தலைமுடிக்கும். தலைமுடிக்கு தேவையான ஒமேகா சத்துக்கள் நிறைந்த மீன் மற்றும் nuts சாப்பிடுவது மிகவும் அவசியம்.

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/health/do-seeds-help-in-weight-loss-1563506

https://tamil.shethepeople.tv/health/benefits-of-walking-10000-steps-a-day-1561345

https://tamil.shethepeople.tv/health/daily-mistakes-that-disturb-weight-loss-1561246

https://tamil.shethepeople.tv/health/frustrated-by-double-chin-do-this-exercise-immediately-1559371

 

#hair frizziness
Advertisment