Advertisment

Bra அணியலாமா? வேண்டாமா?

இந்த தலைப்பு படிக்கும் பொது பலருக்கு அருவருப்பாக இருக்கெல்லாம். சிலருக்கு இதில் என்ன இருக்கு என்று தோன்றும். உண்மையில் இதை வெளிப்படையாக பேசும் அளவிற்கு நாம் normalize செய்யவில்லை. Bra உள்ளாடைகள். இப்போது " BraLess" culture தான் trend என கூறி கேட்பதுண்டு.

author-image
Nandhini
New Update
bra

Image is used for representation purpose only.

ஆனால் உண்மையில் எது தான் நல்லது என்று ஆராயப்போனதில் கிடைத்து இதுதான். Bra அணியலாமா வேண்டாமா என்று விவாதம் வைக்காமல். அதில் இருக்கும் நல்லது  கூறினால் பெண்களே முடிவு எடுக்கட்டும் என்று முடிவு செய்ததே இந்த கட்டுரை.

Advertisment

பெண்கள் வெளியில் சென்று வந்த உடனே கை கால் கழுவி சுத்தமாகுவதெல்லாம் இரண்டாம் கட்டம் தான். முதல் வேலையாக இந்த bra வை கழட்டி விடுவதுதான். அதை யாரிடமும் கேட்டாலும் ஆமாம் ஆமாம் என்று சொல்லுவார். அந்த அளவிற்கு இருக்கும் இந்த bra வை ஒரேடியாக போடுவதை நிறுத்தி விட்டால் எப்படி இருக்கும்? ஆனந்தத்தின் உட்சமாக இருக்கும் என்று யோசிப்பதுண்டு. நானும் இதில் ஒருத்தி தான். வெயில் காலங்களின் கசகச வென்று இருக்கும். மழை காலத்தில் அப்படியே துணியோடு ஒட்டி அதன் அச்சு அப்படியே தெரியம். இந்த மாறி கஷ்டங்கள் இருக்கிறது. சில சமயங்களில் "எவன்டா இதை கண்டுப்பிடிச்சான் .. கண்டுபிடித்தவன் கையில் கிடைத்தால்... என்று திட்டுவதற்கு முன் அணிவதில் உள்ள postives யை பார்ப்போம்.

Benefits of wearing a bra 

Heavy மற்றும் support இல்லை 

Advertisment

உங்களது மார்பகங்கள் கனமாக இருக்க கூடும் . அவற்றுக்கு ஒரு support இல்லையென்றால் அது நமது உடலை விட்டு சற்று வெளியில் இருக்கும். அதன் விளைவு உங்களது கழுத்து மற்றும் முதுகு தசையில் வலிகள் தோன்றும் அதுமட்டுமல்லாம் உங்களது உடல் posture றையும் பாதித்து விடும்.

நமது மார்பகங்கள் வெறும் கொழுப்பு மற்றும் glandular tissue னால் ஆனது. இதற்கு தனியாக என தசை கிடையாது. அதனால் நமது உடலிருந்து வரும் எந்த ஒரு support இல்லாமல் இருப்பதினால் , இதற்கு செயற்கையான "BRA " support கொடுத்து அதை பாதுகாக்கின்றோம்.

Stretch marks

Advertisment

உங்கள் மார்பகங்களை ஆதரிக்கும் தோல் ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தத்தை எதிர்க்கும், ஆனால் தினசரி BRA இல்லாமல் இருப்பதன் மூலம் அதை மிகைப்படுத்தி அதன் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது. இது அறுவை சிகிச்சையால் மட்டுமே சரிசெய்ய முடியும். குறிப்பாக உங்கள் மார்பகங்கள் கனமாக இருந்தால், உங்கள் தோலை இழுக்கும் எடை Stretch Marks வழிவகுக்கும் (அதிக அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட வடு திசு)

stretch marks

Sagging

Advertisment

நீங்கள் சுற்றிச் செல்லும்போது மார்பகங்கள் ஆதரிக்கப்படாமல் இருந்தால், தசைநார்கள் சேதமடையலாம். மேலும் இரண்டும் தொய்வடைய (sagging) பங்களிக்கின்றன. ஆனால் நீங்கள் BRA அணியாமல் அப்படியே அமர்ந்திருந்தாலும் கூட சேதமடையலாம். கர்ப்பம் மற்றும் பாலூட்டுதல் ஆகியவற்றுடன், தொய்வு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் காலப்போக்கில் Sag யின்  விளைவு ஆகும். BRA அணிவது பெண்கள் ஈர்ப்பு விசையை எதிர்க்க உதவுகிறது. BRA இல்லாதது மேற்கண்ட விஷயங்களை வேகப்படுத்துகிறது.

Clothes fit better

நமது தோற்றத்தை அதை மாற்றுகிறது. சேலையோ, ஜீன்ஸ் tshirt , ஒல்லியோ குண்டோ , குட்டையோ நெட்டையோ இந்த bra அணிந்தால் உங்களது தோற்றம் மாறும். உங்களது உடலிற்கு ஒரு வடிவம் தரும். அதனால் உங்களுக்கு ஏற்ற சரியான ஆடைகள் அமையும்.

Advertisment

 முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியவை

உங்களது அளவிற்கு சரியான bra வை அணிய வேண்டும்.முன்னர் கூறிய படி அது உங்களுக்கு ஒரு வடிவம் தரும். உங்களது வேலைக்கேற்ற BRA 'வை அணியவும். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் அதற்கேற்ற SPORTS BRA பயன்படுத்த வேண்டும் ஏனென்றால் நீங்கள் jogging போன்று போகும் பொது உங்கள் மார்பகங்கள் குலுங்காமல் இருக்கும். உங்களுக்கும் வலி ஏற்படாது.

 உங்களுக்கு வசதியானதைச் செய்வது நல்லது. BRA அணியாமல் இருப்பது உங்களுக்கு நன்றாக இருந்தால் பரவாயில்லை. சில ஆதரவு தேவை என்று நீங்கள் நினைத்தாலோ வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் "everyday bra" அணிவது நல்லது. . இது அனைத்தும் நீங்கள் வசதியாக இருப்பதைப் பொறுத்தது."

Advertisment

 

 

Suggested Reading: 

Advertisment
Benefits of wearing a bra
Advertisment