Advertisment

Hostel வாழ்க்கையே Best!

"life தொலைச்சிட்டியே குமாரு" அப்படிதான் இருக்கும் ஒவ்வொரு hosteler, Day scholar ரை பார்த்து கூறும் பொது. நாங்கள் ஏதோ ஒரு குத்தம் செய்ததது போல் பேசுவார்கள். அப்படி என்னடா இந்த வாழ்க்கையில் இருக்கு என்று என் சக hostel தோழிகளிடம் கேட்டேன்.

author-image
Nandhini
New Update
super sharanya

Image is used for Representation purposes only.

கேட்ட பிறகு தான் என் வாழ்க்கையில் ஒரு முறையாவது அந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்க கூடாதா என்று தான் தோன்றியது 

Advertisment

Day scholar  வாழ்க்கையும் சரி hostel வாழ்க்கையும் சரி இரண்டும் enjoyment தான். ஆனால் hostel வாழ்க்கை என்பது ஒரு வரம். அந்த வாழ்க்கையில் நாங்கள் என்னவெல்லாம் செய்வோம் தெரியுமா? என்று அவள் கூறும் பொது உண்மையாவே ஒரு படத்தின் காட்சி போலவே தோன்றியது.

Life of Hostelers

என்னதான் காலையில் அம்மாவின் mixie சத்ததில் கண் விழித்து, அண்ணனின் laptop சத்தத்தில் பல் விலக்கி , கல்லூரிக்கு பொறுமையாக கிளம்பிக் கொண்டிருக்கும் பொது கடிகாரத்தை பார்த்தால், மணி ஏழு ஆகியிருக்கும். பேருந்தை விட்டுவிடுவோம் என்ற பயத்தில் அரக்கப்பறக்க கிளம்பி கடைசி நேரத்தில் பேருந்தை பிடித்து கல்லூரிக்கு வருவது ஒரு சுகம் என்றால், hostel'ல இருக்கின்ற Bathroomல் யார் முதல் குளிக்கப்போறோம் என்று தூங்காமல் இருந்து அடிச்சி பிடிச்சி குளிக்க செல்வோம். பிடிக்காத சாப்பாட்டை வாயில் கொஞ்சம் போட்டு அப்படியே தோழியோட அரட்டை அடிச்சி முதல் bell அடித்தவுடன் Day scholarரை விட தாமதமாக வந்து நிற்கும் hostel வாழ்க்கை அதை விட சுகமானது .

Advertisment

ஆரம்பத்தில் கஷ்டமாக தான் இருக்கும். பதினாறு பதினேழு வருடம் அப்பா, அம்மாவோடு இருந்து இப்போது எப்படி தனியாக இருப்பது, Homesick எல்லாம் இருக்குமே என்று ஒரு பயம் இருக்கும். ஆனால் அது போக போக பழகிடும். "homesick"ஆ இருக்கு என்று தோழியிடம் கூறினால், அவள் அதை மறக்க வைக்க எல்லாம் செய்வாள்.

hostel

இங்கே நாங்கள் என்ன செய்தாலும் அதை ஏன் எதற்கு என கேட்க யாரும் கிடையாது. சுற்றி எங்கு பார்த்தாலும் தோழிகள் மட்டுமே இருப்பார்கள். ஒரு மூணு வருட கல்லூரி வாழ்க்கை அவர்களோடு தான். அவர்கள் நம் அனைத்து நல்லது கெட்டதில் பங்கேற்பர். நம்முடன் இருப்பர். ஏனென்றால் முக்காவாசி நேரம் இவர்களுடன் தான் நாம் அதிக நேரம் செலவழிப்பதினால் இவர்களே நமக்கு " go to person" ஆக இருப்பர்.

Advertisment

யாருக்காவது பிறந்தநாள் என்றால் போதும் இரவு முழுவதும் ஆட்டம் பாட்டமுமாய் இருக்கும். விடிய விடிய முழித்து இருந்து அரட்டைகள், ஏதாவது ரூமில் maggi செய்து சாப்பிடுவது என ஒரே கூத்தாக இருக்கும். இரவு தாமதமாக உறங்கி, காலையில் தாமகமாக எழுந்து, முப்பது நிமிடங்களில் கிளம்பி classக்கு செல்வோம்.

ஆட்டம் பாட்டம் மட்டும் கிடையாது, எந்த நேரத்தில் பொறுப்பாக இருக்க வேண்டுமோ அந்த நேரத்தில் பொறுப்பாக இருப்போம். பரீட்சை நேரங்களில் படித்து விடுவோம். ஒருத்தி ஒரு தலைப்பு புரிய வில்லை என்றால் மற்றுஒருத்தி அதை சொல்லிக்கொடுப்பது போன்று இருக்கும்.

அடிக்கடி ஒரே ரூமில் அனைவரும் வந்து அமர்ந்து, laptop'ல் படம் பார்த்து, கதை அடித்து, விளையாடுவது மற்றும் அப்போ அப்போ"sexual talk" பேசுவோம். அதில் ஏதும் சந்தேகம் இருந்தால் அதை பற்றி தெரிந்தவர் தீர்த்து வைப்பது என்று ஒரே ரகலையாக இருக்கும்.  ஊருக்கு யாராச்சும் சென்று வந்திருந்தால் அம்மாக்கள் கொடுக்கும் snacks ஐ காலி செய்வது, கால போக்கில் நாம் அவரது வீட்டில் ஒருவராக மாறி நமக்கென ஒரு தனி டப்பா வந்துவிடும்.

Advertisment

jollyக்கு மட்டுமில்ல ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவளுக்காக அந்த பிரச்சனையை தீர்த்து வைக்க எந்த எல்லைக்கும் போவோம். 

இவ்வளவு  சந்தோஷம் இருந்தால் கண்டிப்பாக குறைபாடு என்று இருக்கும் அல்லவா?

குறைபாடுகள்:  

Advertisment

நினைத்த நேரங்களில் வெளியில் செல்ல முடியாது. in & out time இருக்கும். அது ஒரு மாதிரி கடுப்பாகும். hostel உள்ளே நல்ல enjoy பண்ணலாம். ஆனால் வெளியில் சென்று பண்ண இயலாது.

மேலும் இங்கே எங்களுக்கு routine என்று ஒன்று இல்லை. Day scholar என்றால் இதை செய் அதை செய் என்று guide பண்ண பெற்றோர்கள் இருப்பார்கள். இங்கு அப்படி கிடைக்காது. நாமே முயற்சி செய்தாலும் ஏதோ ஒரு கவனச்சிதறல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

hostel

Advertisment

சாப்பாடு , அம்மா சாப்பாட்டை மிகவும் miss செய்வோம். hostel சாப்பாட்டில் உப்பு காரம் ஏதும் நம் வீட்டில் இருப்பதில் போல் இருக்காது.

அந்த விடுமுறை நேரத்தில் வீட்டிற்கு சென்று அம்மா கையில் சாப்பாடு சாப்புடுவதற்காகவே  வீட்டிற்கு சென்று, அங்கிருந்து திரும்பி வர மனம் இல்லாமல் வருவோம்.

பேசி முடித்த பிறகு தான் தோன்றியது உண்மையிலே அது ஒரு அழகான வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் தோல் கொடுக்க தோழிகள் நிறைய என்பது தோன்றியது.  Day scholarம் இருப்பார்கள். ஆனால் இந்த பந்தம் என்பது வேற என புரிந்தது.

Advertisment

 

Suggested Reading:  

Life of Hostelers
Advertisment