முதலில் உனக்கு என்ன பிரச்சனை ? பாட்டி, அம்மா என்று அழகிய பெண்கள் வளர்க்கும் குடும்பமாகதான இருக்கிறது. இருந்து என்ன புண்ணியம், எனக்கு இந்த வீட்டில் சுதந்திரம் இல்லை, ஒரு பெண்ணே என்னை புரிந்துகொள்ள வில்லை என்று புலம்ப ஆரம்பித்தால். அவளை மட்டுமல்ல அவள் அம்மா பாட்டி என்று மூவரையும் அழைத்து நடத்திய நேர்காணலில் என் தோழியின் சந்தேகமும் தீர்ந்தது, எனக்கு ஒரு புதிய சிந்தனை பாதை திறக்கப்பட்டது.
மூவரிடம் ஒரு சில அடிப்படை - வீட்டில் இருக்கும் பழக்க வழக்கங்களை பற்றி கேட்டேன்.
The changes through generations
பாட்டி ரொம்ப கண்டிப்பாக இருப்பார். வீட்டில் தான் இருக்க வேண்டும், பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறார்கள் என்றால், ஒரு வேலை அவரது அம்மா இவரிடம் கடினமாக இருந்ததுனாலே என்னமோ இருக்கெல்லாம்.
இந்த மாறி ஒரு சில விஷயங்கள் எவ்வளவு கடினமாக பாட்டிகள் பின் தொடர்ந்ததை அம்மாக்கள் ஓரளவுக்கு பின் தொடந்திருப்பர் ,அப்படியே படி படியாக அக்காக்கள் மற்றும் பிள்ளைகள் கடைபிடிக்க மறுத்திருப்பார்கள். இதன் காரணம் "generation gap" என்பதினால்.
முன்னர் எல்லாம் பாட்டி அவர் முக்காவாசி நேரம் வெளியில் செல்ல மாட்டார்கள். அப்படியே சென்றாலும், அவர்கள் மாறியே இருக்கும் பெண்களை பார்க்க தான் செல்வார்கள் அதனால் இவர்கள் சிந்தனை செயல்முறையில் ஒரே போல் தான் இருப்பதினால், சரியோ தவறோ அதை பின்பற்றுவதே அவரது கடமையாக வைத்திருப்பர். வாழ்க்கை மீதான வெளிப்பாடு மிகவும் குறைவாக இருக்கும்.
பெண்கள் (அம்மாக்களின் பெண்) நிறைய இடங்கள் சென்று நிறைய பேரோடு பழகுவதினால் அவர்களது சிந்தனை செயல்முறைகள் விரிவடைந்திருக்கும். அதனால் இந்த காலத்தில் அதெல்லாம் தேவையில்லை என்பதை அறிந்துக் கொண்டு அவர்களது வேலைகளை செய்து கொண்டிருப்பார்.
periods : மாதவிடாய்
இந்த நாட்களில் நமது பாட்டிகள், அவர்களது கணவர்களை பார்க்க கூடாது, தனியாக இருக்க வேண்டும், தனியாக சமைத்து சாப்பிட வேண்டும், எதையும் தொட கூடாது. தனி பாத்திரங்கள், தனி ரூம் இப்படி இருக்கும். இது போன்ற முறைகள் பின்பற்ற வேண்டும். இதுவே அம்மாக்கள் காலத்தில், கணவர்களிடம் பேசலாம், ஆனால் வேலைகள் ஏதும் செய்யக்கூடாது. இதுவே இந்த காலகட்டத்தில் இதெல்லாம் ஒரு விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. இது ஒரு சாதாரண நாளாக தான் கருதப்படுகிறது. இது orthodox குடும்பத்திழும் மாறிவிட்டது.
மாதவிடாய் என்பது வெறும் நமது உடலில் இருந்து வெளிவரும் கெட்ட இரத்தம். பெண்கள் சோர்வாக இருப்பார்கள் என்பதினால் தான் ஓய்வு எடுப்பதற்காக தனியாக இருக்க சொல்வார்கள் தவிர வேற எந்த ஒரு எண்ணமும் இல்லை. அதை புரிந்து கொள்ளாமல் அந்த காலத்தில் ஏதோ ஒரு தீண்டத்தகாதவர் போல் நடத்துவர்.
Clothes : ஆடைகள்
பாட்டி காலத்தில் வேறும் சேலை மட்டும் தான். அதுவும் அவர்களது blouse கைகளின் முழங்கை அளவிற்கு வரை தான் இருக்கும். இதுவே அம்மாக்கள் நேரத்தில் சுடிதார் பயன்படுத்துவதை வழக்கமாக மாறியது. அதே சமயத்தில் சேலையும் இருந்தாலும் நவநாகரீக blouseகள் இருந்தது. அதுக்கு எல்லோரும் ஏற்க ஆரம்பித்தார்கள். காலங்கள் கடக்க இப்பொது ஜீன்ஸ் , tshirt தான் trend எல்லாமே இருக்கிறது.
அந்த காலத்தில் யாராவது வீட்டிற்கு வந்தால், "மரியாதை" என்ற பெயரில் உள்ளே செல்ல வேண்டும் இல்லையென்றால் "துப்பட்டா" போடா வேண்டும். இது அம்மா காலத்திலும் நடந்தது. இந்த காலத்தில் அதெல்லாம் கிடையாது. மனதில் மரியாதை இருந்தால் போதும் என்ற மனநிலை இப்போது.
Festive time : பண்டிகை நேரம்
அந்த காலத்தில் பாட்டிகளே காலை எழுந்து, அனைத்து பலகாரங்கள் அவரே செய்து, பல வகை சாப்பாடு செய்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் பரிமாறுவர். அதுவே அம்மாக்கள் காலத்தில் ஒரு சில பலகாரங்கள் செய்வர் மற்றவையை கடையில் வாங்குவர். இதுவே இந்த காலத்தில் அனைத்தையும் வெளியில் வாங்குவது தான் வழக்கம். இதன் காரணம் முக்காவாசி பெண்களுக்கு அன்று தான் வேலை விடுமுறை அன்று ஒரு நாள் தான் அன்று நன்று தூங்கினால் போதும் என்றே தோன்றும்.
என் தோழிக்கு விடை கிடைப்பது அவள் புரிய வைக்கும் முறையில் உள்ளது. ஆனால் இவர்களிடம் நான் பேசி தெரிந்துக் கொண்டத்தில்,பெண்கள் மாறவே இல்லை, எங்களுக்கு வீட்டில் சுதந்திரம் இல்லை என்று கூறும் முன், நாம், பெண்களே அறியாமல் வீட்டில் ஒரு மாற்றங்களை உருவாக்கியுள்ளோம் என்பதை உணர்தேன்.
Suggested Reading :
Suggested Reading :
நாயகிகள் "secondary characters" தானா?
Suggested Reading :
இந்த skills இருந்தாலே போதும் உங்களுக்கு Job confirm!
Suggested Reading :
சக்கரை நோயினால் கண்களில் பாதிப்பு!!