இருக்கு.. ஆனால் வேற மாறி இருந்தால் Better!

அழகான ஒரு குடும்பம், நல்ல வேலை, கிடைக்கும் நேரத்தில் "எங்களுக்கான" நேரம், வெளியூர் பயணம் இப்படி ஒரு வாழ்க்கை என்பது சிறப்புதான். ஆனால் சிறு வயதிலிருந்தே ஒரு ஏக்கம் இருக்கும், ஒரு வேளை இதற்கு பதிலாக இந்த விஷயம் இருந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று.

author-image
Nandhini
New Update
feature image

Image is used for representation purposes only.

ஒரு ஐந்து முதல் ஆறு பெண்களிடம் அவர்களது வாழ்க்கையில் "இதற்கு பதிலாக, இது இருந்தால் எப்படி இருக்கும்" என்ற கேள்வி முன் வைத்தோம். அவர்களது பதில்கள் எங்களை வியக்க வைத்தது.

Advertisment

Things that women wished for an alternative! 

படிப்பு:

சிறு வயதிலிருந்தே படிப்பு, படிப்பு என்று இருந்ததால், இந்த பொழுதுபோக்கு சார்த்த விஷயங்கள் உதாரணம்: விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்தது. அதிலும் கவனம் செலுத்தி இருந்திருந்தால் எங்களுடைய தொழில் பாதையில் இன்னும் வகைகள் இருந்திருக்கும். மேலும் இப்போது நாங்கள் எடுத்த வேலையை நினைத்து ஏன்டா இதை எடுத்தோம் வேறு ஏதாவது எடுத்து இருக்கெல்லாம் என்று தோன்றும். அப்படியே இந்த தொழில் தான் என்றால் அதில் வேற பிரிவு படித்திருக்கெல்லாம் என்றும் தோன்றும். 

உதாரணம்: மருத்துவர்க்கு படித்திருந்தாலும் அதில் ஏன்  இந்த காது, தோல் சமந்தம்ப்பட்டவை படிக்காமல் இருந்திருக்கெல்லாம்.  துறையில் வெளிப்பாடு என்பது குறைவு என்று உணர்கிறோம். யாருக்கு தெரியும் ," இக்கரைக்கு அக்கறை பச்சை".

கல்யாணம் :

முதலில் அனைவர்க்கும் "வேண்டாம்" என்று தான் தோன்றும். காரணம், குடும்பம் நன்றாக பார்த்துக்கொள்ளுமா? கணவர் எங்களை புரிந்து கொள்வாரா? கொடுமை செய்வாரா? இந்த மாறி எண்ணங்கள் மனதில் தோன்றும். இந்த மாறி எண்ணங்களை எங்கு சென்றாலும் இருக்கும் என்பதினால், கல்யாணம் செய்வோம். குடும்பத்தை இயல்பாக நடத்த ஏதோ ஒரு விதத்தில் "adjust " செய்கின்றோம் .

Advertisment

theri kalyanam

 ஒரு வேளை, என் கணவன் ஆரோக்கியத்திற்கு முக்கிய துவம் கொடுப்பராக இருந்தால், அவரு "adventerous" ஆக இருந்தால் நன்றாக இருக்கும். இந்த படங்கள் பார்த்து நாங்க கெட்டுவிட்டோம். அதில் "so called Perfect material" என்று ஒருத்தர் காட்டுவர், ஆனால் உண்மையில் அது இல்லை என்று அவர்கள் கூறி சிரித்தனர்.  

சேமிப்பு:

இதை நாங்கள் சிறுவயதிலிருந்து செய்வதை தவறவிட்டோம். ஒரு இருபத்தி ஐந்து வயதில் சம்பாதித்ததை அப்படியே சரளமாக ஆடைகள், ஊரு சுற்றுவது என்று செலவு செய்வதில் கவனம் இருந்ததே தவிர பிற்காலத்தில் நமக்கென்ன ஒரு குடும்பம் வந்தால் தான் தெரியும் விலைவாசியின் அருமை என்று புரியவில்லை. நாம் வேலைக்கு சேர்ந்த முதல் இரண்டு மாதங்கள் சம்பளம் வந்த குஷியில் கண்டத்திற்கு செலவு செய்வோம். தந்தை கூறுவர், "அனாவசிய செலவுகள் செய்யாதீர்கள்" என்று. அப்போதெல்லாம் புரியாமல் இப்பொது வருத்தப்படுகிறோம். 

 Biggest NO:

எல்லாவற்றையும் தாண்டி இந்த ஒரு விஷயம் கண்டிப்பாக வேண்டாம் என்று தான் முடிவு. கல்யாணத்திற்கு கிட்டத்தட்ட இருவதுலட்ச ரூபாய் செலவு செய்வர். அது ஏன் என்று கேட்டால், கௌரவம் என்று கூறுவார். எப்படியும் குற்றம் சொல்லும் உறவினருக்கு இவ்வளவு முக்கியதுவம் செய்வதற்கு பதில் அந்த காசை எங்களிடம் கொடுத்திருந்தால் சேமிப்பை பற்றி சிறிது குறைவாக வருத்தப்பட்டு இருக்கெல்லாம் என்று கூறினார்.

Advertisment

நேர்காணனில் இருக்கும் பெண்கள் போல் நீங்களும் இருந்தால், இதை கூற விரும்புகிறோம், "அனைவரும் Perfect ஆக இருக்க மாட்டார்கள், ஒரு சில adjustments இருவரும் செய்தால் மட்டுமே வாழ்க்கை ஓடும்".

Suggested Reading: 

Suggested Reading: 

Things that women wished for an alternative