வண்டி என்னப்பா அதெல்லாம் சப்ப மேட்டர் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள். அதற்கு பயிற்சி மிகவும் அவசியம். ஏனென்றால் நன்றாக வண்டி ஓட்டத்தெரிந்தாலும் ஒரு சில விபத்துகள் நடக்கேல்லாம். பெண்களுக்கான வண்டி கற்றல், ஆண்களுக்கு சற்று வித்தியாசமானது, ஏனெனில் இருவருக்கும் வெவ்வேறு முன்னுரிமைகள் இருக்கலாம்.
எனினும் இந்த குறிப்புகளை பின் பற்றி நீங்களும் rider ஆகலாம். இந்த simple டிப்ஸ்'சை பின்பற்ற ஏதும் படித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
Beginners tips to ride a bike
நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் : Be confident
நீங்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு வண்டி ஓட்டுகிறீரோ அல்லது முதன் முறை ஓட்டுவரோ உங்களுக்கு தேவை இந்த நம்பிக்கை "உங்களால் ஓட்ட முடியும் யாரு எந்த வித இடையூறு கொடுத்தாலும் அதை கண்டுகொள்ளாமல், நான் தைரியமாக ஓட்டுவேன்" என்று நம்ப வேண்டும். ஏனென்றால் நீங்கள் வண்டி ஓட்டும் பொது நிறைய பெரு வேண்டுமென்றே வம்பிழுப்பார்கள். அதுவும் நெடுஞ்சாலையில் சென்றால் கண்டிப்பாக ஏதோ ஒரு தடைகள் வரலாம். அதனால் முதலில் நம்பிக்கை அவசியம்.
நல்ல பயிற்சி கூடம் : proper driving classes
நமது பள்ளி பருவதிலோ அல்லது கல்லூரி காலத்திலோ தேர்வுக்கு படிக்காமல் சென்று கடைசி நேரத்தில் நமது தோழி நமக்கு சொல்லி தருவது போல் கிடையாது இந்த வண்டி ஓட்டுவது. நன்கு நிதானமாக, தேர்ச்சிபெற்ற ஆசிரியரிடம் கற்றுகொள்ள வேண்டும். youtube வீடியோகளை பார்ப்பதை தவிர்க்கவும்.
Helmet is must
தலைக்கவசம், உயிர் கவசம் என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்று விபத்தில் சிக்கிவர்களிடம் கேட்டு பாருங்கள். அந்த தலைக்கவசம் இல்லையென்றால் அவர்களே இல்லை என்று கூறுவார் அதனால் தலைக்கவசம் மிகவும் முக்கியம். வண்டியும் எந்திரம் தானே அதை என்னதான் பழுதுபார்த்து வைத்தாலும், எப்போது மக்கார் பண்ணும் என்று தெரியாது. அந்த சமயத்தில் இது உதவும் .
Styling tips :
ஒவ்வொரு ஓட்டுனரும் ஒவ்வொரு வித பாணியில் தங்களை தயார் படுத்துவார்கள். அது சரி என்றாலும், ஒரு சில விஷயங்கள் கடைப்பிடிப்பது நல்லது. முதலில் லூசாக ஆடை அணிவதை தவிர்க்கவும். ஏனெனில் அது நீங்கள் வேகமாக செல்லும் பொது, அது உங்கள் முகத்தில் வந்து விழும் அது வண்டி ஓட்டும் பொது கஷ்டமாக இருக்கும். அதனால் தவிர்க்கவும். அதே போல் உங்களது முடியை சரியாக பின்னி வைக்கவும். நீங்கள், "Loose hair" விட்டாலும், தலைக்கவசம் அணிவதால், அது உங்கள் முடியை பிசுபிசுவென்ன ஆக்கும். அது முடி உதிர்வதற்கு காரணமாக இருக்கிறது. அதனால் பின்னல் போடுவது சிறப்பு.
License மற்றும் policy paper:
ஒரு வண்டியின் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை உங்கள் பைக்கை ஓட்டும் இரண்டு முக்கியமான விஷயமாகும் . வண்டி ஓட்டுவதற்கு முன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் license plate உங்கள் பதிவில் உள்ள எண்ணுடன் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்கவும். பயணிக்கும் செய்யும் போது, உங்கள் வண்டியின் பதிவு, PUC, உரிமம் மற்றும் insurance policy நகலை வைத்திருக்க வேண்டும். ஒரு போக்குவரத்து அதிகாரி எந்த நேரத்திலும் அதைப் பார்க்கும்படி கேட்கலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள simple tips உங்களது பயணத்தை easy ஆக்கும் . என்னதான் நாங்கள் கூறினாலும், ஓட்டும் உங்களது " Insticts" சொல்வதை கேளுங்கள். உங்களது பயிற்சியாளர் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Suggested Reading:
நாயகிகள் "secondary characters" தானா?
Suggested Reading:
Suggested Reading:
இந்த skills இருந்தாலே போதும் உங்களுக்கு Job confirm!
Suggested Reading:
சக்கரை நோயினால் கண்களில் பாதிப்பு!!