இரவில் travel செய்பவரா நீங்கள் ? இதை கண்டிப்பாக படியுங்கள்!

சில நேரங்களில் நாம் இரவு நேர வேலைக்குத்தான் செல்வோம். நமது வேலை முடிந்த பிறகு அலுவக காரிலோ அல்லது தனிப்பட்ட வாகனத்தில் வருவது என இருக்கும். நாம் தைரியமிக்கவர் என்றாலும் அந்த இரவு நேரங்களில் தனியாக வருவது என்பது அடிமனதில் ஒரு பீதியை கிளப்பதான் செய்யும்.

author-image
Nandhini
Sep 06, 2023 13:30 IST
alone

Image is used for representation purposes only.

இரவு நேரங்களில் தனியாக வரும் போது எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Advertisment

குற்றம் நடக்க வேண்டும் என்றால் அது எப்போது வேண்டுமானாலும் நடக்கும், ஆனால் இரவு நேரங்களில் தான் அதிக தாக்கங்கள் ஏற்படும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. காரணம் அப்போது அனைவரும் உறங்கிக்கொண்டிருப்பார்கள். சத்தம் செய்தாலும்  அவர்கள் வருவதற்கு தாமதகம் ஆகும். அதனால் தான் இரவு நேரம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.

Tips to travel safely at night

Tell to someone about your plan.

Advertisment

ஒரு வேளை நீங்கள் இரவு நேரத்தில் travel செய்பவராக இருந்தால், நீங்கள் இந்த இடத்திலிருந்து இதனை மணிக்கு புறப்படுகிறேன் என்று உங்களுக்கு நம்பக தன்மையாக இருக்கும் ஒருவரிடம் கூறுங்கள். ஒரு வேளை ஏதேனும் ஆபத்து என்று அவர் அறிந்தால், உங்களை தொடர்பு கொள்வர். இப்போது தான் இந்த whatsapp -ல் Live Location என்ற அம்சம் இருக்கிறதே அதை அவருக்கு அனுப்பினால், உங்களை அவர்  கண்காணித்து கொண்டே இருப்பார்.

cellphoneல் charge 100%

எனது செல்போன் இரண்டு நாட்கள் charge வைத்துக்கொள்ளும் அதனால் எதற்கு என்ற எண்ணம் வைக்காதீர்கள். நம் நேரம் அது கண்டிப்பாக தேவையுள்ள நேரங்களில் சொதப்பும் அதனால் 100% charge வைத்துக்கொள்ளவும். பாட்டு கேட்பது, internet உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளவும். அது chargeயை குறைக்கும். இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது எப்படி பார்த்தாலும் உங்கள் வீட்டிற்கு பாதி நேரத்தில் சென்றுவிடுவீர்கள். அதனால் பாட்டு கேட்பது, internet உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளவும்.

Advertisment

Pepper spray, Torch light & whistle -  Three musketeers!

கையில் பணம் எவ்வளவு முக்கியமோ அதே போல் இந்த Three Musketeersயும் முக்கியம். Pepper spray, Torch Light மற்றும் whistle. உங்கள் கைப்பையில் இவை அனைத்தும் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருட்கள். உங்களை யாரேனும் பின் தொடர்ந்து வம்பிழுத்தால், இந்த pepper Sprayவை முகத்தில் அடித்து தப்பி செல்லலாம். இந்த Whistle "நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள், உதவிக்கு வாருங்கள்" என்று சொல்லலாம் சொல்லும். இரவு நேரங்களில் விடாமல் அடித்துக் கொண்டே இருக்கும் பொது கண்டிப்பாக ஏதோ பிரச்சனை என்று தான் எண்ணுவர். அதனால் கண்டிப்பாக காப்பாற்ற வருவார். Torch light , சில சமயங்கள் நாம் செல்லும் பாதையில் தெருவிளக்குகள் மக்கார் பண்ணலாம், அதை சாக்காக வைத்து பலர் உங்களை தாக்க நேரலாம், அதனால் உங்கள் கையிலொரு torch light வைத்திருந்தால் நல்லது. பின்குறிப்பு: அதை வைத்தும் நீங்கள் தாக்குபவர்களை அடிக்கேலாம்.

3

Advertisment

Hide or change!

இப்போது நீங்கள் செல்லும் வானகத்தில் ஏதும் உங்களுக்கு அசௌகரியம் இருந்தால், அல்ல ஓட்டுனரோ கூட இருபர்ரோ ஏதேனும் செய்ய நேரிடும் என்று உங்களுக்கு தோன்றினால் உடனடியாக இறங்கி வேற ஒரு வாகனத்தில் மாறி செல்லுங்கள். இரவு நேரங்களில் வாகனம் கிடைக்காது என்றால் நீங்கள் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது போல்  "pretend " செய்யலாம். இது அந்த நபர்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கும்.

இதுவே நீங்கள் நடந்து செல்கிறீர்கள் என்றால் பக்கத்தில் எதனும் ஒரு வீட்டில் உள்ளே  சென்று விடுங்கள். உங்களை பின் தொடரும் நபருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இடத்தில் இருந்து தப்பித்து விடுவார். சிறிது நேரம் பிறகு நீங்கள் அந்த இடத்திலிருந்து கிளம்பலாம்.

Advertisment

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்.

முடிந்த வரை தனியாக செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள், நண்பர்களுடன் செல்லுங்கள், இருளான இடத்தை தவிர்கள். உங்களது சுற்றத்தை நன்கு கவனியுங்கள். ஏதாவது சிறு சத்தம் கேட்டாலும் அந்த இடத்திலிருந்து உடனே புறப்படுங்கள். உங்களுக்கு தெரிந்த பாதையை பயன்படுத்துங்கள் தெரியாத இடத்தை ஆராய வேண்டாம். முடிந்தவரை நன்கு வெளிச்சம் இருக்கும் இடங்களில் செல்லுங்கள். தெரியாத நபர்கள் வந்து பேசினால், உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பிவிடுங்கள். அவர்கள் பாவமாக இருந்தாலும் பரவாவில்லை, அது உங்களுக்கு விரிக்கும் வலை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

நீங்கள் தைரியமாக இருந்தாலே போதும் எந்த ஒரு இடையூறு வந்தாலும் அதை சாதாரணமாக கையாளலாம்.

Advertisment

 

 

Suggested Reading: 

Advertisment
#Tips to travel safely at night