அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது உடலுக்கு தீங்கானது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இருப்பினும் கூட நீங்கள் இன்னும் அதிகமாக சர்க்கரையை எடுத்துக் கொள்கிறீர்கள். பானங்கள், மிட்டாய், பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்புகள் ஆகிய உணவுப் பொருட்கள் நிறைய சர்க்கரை உள்ள பொருட்களாகும். இருப்பினும் பிரட், சாஸ் மற்றும் புரோட்டின் பார்கள் போன்ற ருசியான பொருட்களில் உள்ள சர்க்கரையும் உங்கள் உடலில் பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்வதால் உடலில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் மூளை:
சர்க்கரை உங்கள் மூளைக்கு டோப்போமேன்(dopamine) என்ற மகிழ்ச்சி ஹார்மோனை வழங்குகிறது. அதனால் தான் பிற்பகல் 3 மணி அளவில் நீங்கள் ஆப்பிள் அல்லது கேரட்டை விட மிட்டாய் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
உங்கள் பற்கள்:
உங்களுக்கு 12 வயதாக இருக்கும் பொழுது நீங்கள் விரும்பும் ஒவ்வொரு முறையும் உங்கள் பெற்றோர் உங்களுக்கு சாக்லேட் வாங்கி தராத போது நீங்கள் வருத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் உங்கள் பெற்றோர் சரியாக ஒன்றைத் தான் செய்தார்கள். இனிப்புகள் உங்கள் பற்களை அழிக்கக்கூடும் துவாரங்களை உருவாக்கும். பாக்டீரியாக்கள் நீங்கள் இனிப்பான பொருளை சாப்பிட்ட பிறகு உங்கள் வாயில் இருக்கும் சர்க்கரையை உண்ணுகிறது.
உங்கள் மூட்டுக்கள்:
உங்களுக்கு ஏற்கனவே மூட்டு வலி இருந்தால் மிட்டாய்களைத் தவிர்ப்பதற்கான மற்றொரு காரணம் இங்கே உள்ளது: இனிப்புகள் உடலில் ஏற்படுத்தும் inflammation காரணமாக மூட்டு அசௌகரியத்தை மோசமாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
உங்கள் தோல்:
இது உங்கள் தோலை வயதாக்கும் செயல்முறையை விரைவு படுத்தலாம். அதிகப்படியான சர்க்கரை உங்கள் புழக்கத்தில் உள்ள புரதங்களுடன் பிணைக்கிறது, இதன் விளைவாக "AGEs" அல்லது advanced glycation end எனப்படும் ஆபத்தான இரசாயனங்கள் உருவாகின்றன. எந்த இரசாயனங்கள் அதன் பெயரில் குறிப்பிட்டது போலவே உங்கள் தோலை முதிர்ச்சி அடைய செய்கிறது. இதனால் தோல் சுருக்கம் மற்றும் தோய்வு(sagging) ஏற்படுகிறது.
உங்கள் கல்லீரல்:
கூடுதல் சர்க்கரை பிரக்டோஸ் ( fructose) அல்லது கார்ன் சிரப்(high corn syrups) ஆகும். பிரக்டோஸ் கல்லீரலில் செயலாக்கப்படுகிறது மற்றும் அதிக அளவுகளில் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
உங்கள் இதயம்:
நீங்கள் அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்ளும்போது, இரத்த ஓட்டத்தில் உள்ள கூடுதல் இன்சுலின் உங்கள் உடல் முழுவதும் உள்ள தமனிகளை(arteries) சேதப்படுத்தும். இது தமனிகளின் சுவர்கள் வீக்கமடையவும், இயல்பை விட தடிமனாகவும், கடினமாகவும் மாற்றும். இது காலப்போக்கில் உங்கள் இதயத்தை அழிக்கிறது. இது இருதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களை ஏற்படுத்தும்.
உங்கள் உடல் எடை:
இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்காது, ஏனென்றால் பலமுறை நீங்கள் இதைக் கேட்டு இருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்கிறீர்களோ அதற்கு ஏற்றது போல உங்கள் உடல் எடையும் அதிகரிக்க தொடங்கும். அதிகப்படியான சக்கரை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கும் பொருட்களை உடம்பில் உற்பத்தி செய்ய தூண்டுகிறது.
சர்க்கரை ஒரு ஆரோக்கியமான உணவு பொருள் அல்ல. அதே நேரத்தில் சிலர் கூறுவதைப் போல அது விஷமும் அல்ல. குறைந்த அளவில் சர்க்கரை எடுத்துக் கொள்வது நன்மையை அளிக்கும். அதனால் அவ்வப்போது எந்த ஒரு பயமும், தயக்கமும் இல்லாமல் இனிப்புகளை உண்ணுங்கள்.
Suggested Reading: மாதவிடாயின் (periods) போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
Suggested Reading: தவறான ப்ராக்களை (wrong bra size) அணிவதால் ஏற்படும் விளைவுகள்
Suggested Reading: 5 வகையான வெள்ளைப்படுதல் மற்றும் அதற்கான அர்த்தம்
Suggested Reading: முடி உதிர்வதை தடுக்க சமையலறையில் இருக்கும் ஐந்து பொருட்கள்