cold மற்றும் Fever ?? Please read this

என்னடா இது மழை காலம் வந்தாலே இதை பற்றியே எழுதுகிறீர்கள் என்று யோசிக்க வேண்டாம். இதுவும் முக்கியம் தான். என்னை போல் ஆட்கள் எல்லாம் ஏதாவது வந்தால் தான் இதை பற்றி யோசிப்போம். அதை பற்றி detail ஆக தேடுவோம்.

author-image
Nandhini
New Update
samandha disease.jpg

Image is used for representation purposes only.

அதான் ஒரே மழைக்காலத்தில் செய்யவேண்டியதை பற்றி எழுதிக்கொண்டிக்கிறோம்.  இந்தகட்டுரையில் சளி காய்ச்சல் போன்றவை வந்தால் எப்படி வீட்டிலே செய்ய கூடிய remedies ஐ பார்ப்போம்.

Advertisment

ஆய்வின் படி நமது நாட்டில் 30% மக்களுக்கு cold body இருக்கிறது என்று கூறுகிறது. அதாவது இந்த body type உடையவருக்கு எளிதில் நோய்கள் வந்துவிடும். இவருக்கு immune system சிறிது weak ஆக இருக்கும். அதனால் இவர்கள் regular ஆக இருக்கும் temperature சிறிது மாறினால் கூட அவர்களுக்கு ஏதோ ஒன்று வந்து விடும். அந்த சமயத்தில் சட்டென்று வீட்டிலே தயாரிக்கும் remedies என்ன என்றும் மேலும் ஒரு வேலை உங்களுக்கு மருத்துவரை அணுக வேண்டும் என்றால் மழை நின்ற பின் செல்லலாம். இது அனைவரும் பொருந்தும் homemade remedies.

Homemade remedies during Monsoon

இந்த மழை காலத்தில் கண்டிப்பாக முக்காவாசி பேருக்கு தொண்டை கரகர வென்று இருக்கும். இந்த climate கண்டிப்பாக செய்யும் அப்போது நமக்கு instant help கு வருவது இந்த salt water gargling அதாவது உப்பு தண்ணீரில் கொப்புளிப்பது. நல்ல வெதுவெதுப்பான தண்ணீரியில் உப்பு சேர்த்து வாயை கொப்புளிப்பது, தொடையில் உள்ள bacteriaவை கொள்ளும்.

இஞ்சி , மஞ்சள் இவை இரண்டும் சளி காய்ச்சல் போன்றதை எளிதில் குணப்படுத்த கூடிய பொருட்கள் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிகிச்சை குணங்களைக் கொண்டுள்ளன. நோய்த்தொற்றுகளைத் தடுக்க இஞ்சி, கிராம்பு மற்றும் புதினா கலந்த தேநீரை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். கிராம்பு மற்றும் புதினா இரண்டிலும் bacteria எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்.

Advertisment

மஞ்சள் பால். பாலில் மஞ்சள் போடு குடித்தோம் என்றால் cold, cough மற்றும் fever குணப்படுத்த உதவும்.பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் மழைக்கால நோய்களைத் தடுக்கிறது. இந்த பாலை இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால் தலைவலி, தொண்டை வலி போன்றவை நீங்கும்.

நெஞ்சு சளி இருந்தால் கண்டிப்பாக இதை பயன்படுத்தி பாருங்கள். Eucalyptus oil. இதை உங்கள் நெஞ்சில் தேய்த்து உறங்கினால் காலையில் உங்களுக்கு ஒரு relief கிடைக்கும். மேலும் ஆவி பிடித்தல் அதாவது steam . கொதிக்கும் வெந்நீரில் vicks அல்லது இதையே Eucalyptus oil போட்டு நன்கு முகர்ந்தோம் என்றால் கண்டிப்பாக சளி மற்றும் காய்ச்சல் relief ஆகும்.

சூடான சாப்பாடு சாப்பிட்டால் அதுவும் கார சாரமாக சாப்பிட்டால் மிகவும் நல்லது. காரமாகவும் சூடாகவும் சாப்பிட்டால் நம்மை மீறி சளி தானாகவே கரைந்து சரி ஆகி விடும். அதனால் தான் நம் அம்மாக்கள் நமக்கு சளி அல்லது காய்ச்சல் வந்தால் உடனே soup வைத்துக்கொடுப்பார்.

Advertisment

பூண்டு பல நோய்களுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாகும். பல நன்மைகளைப் பெற, பச்சை பூண்டு கிராம்புகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை காளான்  பண்புகள் உங்கள் உடலை மழைக்கால நோய்களுக்கு எதிராக பாதுகாக்க உதவும்.

இதெல்லாம் நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து instant ஆக செய்ய கூடியவை .

Suggested Reading: 

Suggested Reading: 

Homemade remedies during Monsoon