Advertisment

21 days challenge - அப்படி என்றால் என்ன?

கொஞ்சம் நாள் போக போக பழகி விடும். கொஞ்சம் நாள் பொறுத்துக்கொள் சரியாகிவிடும் என்று கூறுவதுண்டு. ஆனால் யாரும் அது "எத்தனை நாட்கள்" என்று கூறியதில்லை. நம் மனதிற்கு ஒரு விஷயம் பழக சுமார் 21 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

author-image
Nandhini
New Update
21 day challenge.jpg

21 days challenge

What is 21 days challenge??

Advertisment

ஒவ்வொரு நாளும் 21 நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை நீங்கள் கடைபிடிப்பதற்கு உதவுவது. புதிய பழக்கங்களை வளர்த்துக் கொள்ள இதைப் பயன்படுத்தலாம் உதாரணம் : சீக்கிரம் எழுந்திருத்தல், soda வை விட்டுவிடுதல், புதிய உணவைக் கடைப்பிடித்தல், புதிய நண்பர்களை உருவாக்குதல், தியானம் செய்தல், சீக்கிரம் வேலைக்குச் செல்வது போன்ற எந்தவொரு புதிய செயலையும் சோதிக்க இதைப் பயன்படுத்தலாம்.

இது நல்ல விஷயங்களுக்கு மட்டும்மில்லை கெட்ட விஷயங்களை கைவிடுவதற்கும் உதவும். உதாரணம்: பதப்படுத்த பட்ட உணவை தவிர்ப்பது, புகை மது போன்ற விஷயங்களை கை விடுவது. நிறைய நேரம் இந்த social media வில் நேரத்தை செலவழிப்பது போன்ற விஷயங்களை கைவிடவும் உதவும்.

அது சரி ஏன் இந்த 21 day challenge எடுத்துக்கொள்ள வேண்டும்?

Advertisment

ஒரு புதிய பழக்கத்தை உருவாக்க மற்றும் பராமரிக்க ஒரு வசதியான காலம். 3 வாரங்களில், இந்தப் பழக்கத்தை வளர்ப்பதற்கு என்ன தேவை என்பதையும், இது வாழ்நாள் முழுவதும் நீங்கள் கடைப்பிடிக்க விரும்பும் பழக்கமா என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்.

ஏன் இதை நாங்கள் பின்பற்ற வேண்டும்?

நிறைய பேருக்கு இருக்கிற முக்கியமான பிரச்சனை என்னவென்றால் commitment இல்லாதது தான். நாம் ஒரு வேலையை தொடங்க நினைப்போம் ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை தொடர தயங்குவோம் அல்லது பின்தங்குவோம். இதற்கு அந்த வேலை மீது நமக்கு ஈர்ப்பு குறைவது தான். அதற்கு இந்த 21 நாள் challenge பின் தொடர்ந்தால்  நல்லது. 21 நாள் trail period என்று தான் கூறுவார். ஒரு வேலை உங்களுக்கு இது set ஆகவில்லை என்றால் நாம் அதை பின்பற்றவேண்டாம். அது உங்கள் விருப்பம்.

Advertisment

மேலும் ஒரு நல்ல பழக்கத்தை பின்பற்றவும் மேலும் அந்த பழக்கத்தை தொடரவும் உதவுகிறது. உதாரணம் முன்னர் கூறிய படி ஒரு புது உடற்பயிற்சி அல்லது புது உணவுப்பழக்கம் போன்று.

இவைகள் மீது வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொது , ​​வெவ்வேறு காரணங்களுக்காக அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். பலருக்கு ஏற்படும் "செய்ய விரும்புவது" கட்டத்தில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, இந்த நல்ல பழக்கங்களை விரைவாக முயற்சித்து உருவாக்க 21 நாள் சோதனை ஒரு சிறந்த வழியாகும்.

கேட்க நன்றாக இருக்கிறது. இதை பின்தொடர என்ன rules ??

Advertisment

நீங்கள் ஒவ்வொரு நாளும், தவறாமல், 21 நாட்களுக்கு செயல்பாட்டைச் செய்ய வேண்டும். சோதனை முடிவதற்குள் நீங்கள் நழுவினால், முதல் நாளிலிருந்து தொடங்க வேண்டும்.தொடர்ந்து 21 நாட்கள் செயலில் ஈடுபடுங்கள், அதாவது அதற்குள் நீங்கள் அதை ஒரு பழக்கமாக வளர்த்திருப்பீர்கள். இந்தப் பழக்கத்தைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்த உங்கள் முடிவுகள், இந்தப் பழக்கம் இருந்தால் அல்லது இல்லாமல் நீங்கள் சிறப்பாக இருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்பதைப் பொறுத்தது.

எந்த பழக்கங்களை மற்ற வேண்டும் என்பது தனிநபரை பொறுத்து மாறும் ஆனால் நாட்கள் அதே தான். அதனால் இதை பின்பற்றி வாழ்வில் ஒரு நல்ல பழக்கத்தி வளர்த்துக்கொள்ளுங்கள்.

 

Advertisment

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/news/self-care-tips-1515240 

Suggested Reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/interview/how-a-teacher-should-be-1515425 

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/news/basic-bras-in-our-wardrobe-1511147 

Advertisment

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/news/how-to-maintain-hair-during-rainy-season-1512138 

 

What is 21 days challenge??
Advertisment