PMS என்றால் என்ன? | What is PMS
பெண்களின் மாதவிடாய் நேரத்தில் அந்த நாட்களுக்கு சுமார் ஒரு வாரம் முன்னரே இந்த PMS வந்துவிடும். இது ஒரு மாதிரியான உடல் அறிகுறி மற்றும் emotional அறிகுறி. இந்த நேரத்தில் அவர்கள் ஒரு மாதிரி Moodier (அவர்களுக்கே தெரியாது ,அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்று) இருப்பார். ஒரு சிலருக்கு வலிகள் ஏற்படும். இது பெண்களுக்கு பெண்கள் மாறும்.
இதன் அறிகுறிகள்?
சோகமாக இருத்தல், எரிச்சலாக இருத்தல், திடீர் கவலையாக இருத்தல், கோவமாக இருத்தல், மோசமான தூக்கம் அல்லது அதிக தூக்கம் , அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வமின்மை , கவனம் செலுத்துவதில் சிக்கல் இதெல்லாம் பொதுவான அறிகுறிகளாக இருக்கிறது.
மருத்துவர்களுக்கே இது எதனால் வருகிறது என்று தெரியவில்லை ஆனால் இது மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாதியில் harmones ஏற்றத்தாழ்வு மற்றும் குறைவவே மனநிலை மாற்றங்கள் மற்றும் பிற மாதவிடாய் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று கருதப்படுகிறது. இது பொதுவாக மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் ஒரு ஐந்து முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை இருக்கும். மாதவிடாய் தொடங்கியவுடன் சென்றுவிடும்.
/stp-tamil/media/media_files/ryuRYSEKDRcizN9I784w.jpg)
இதை எப்படி கையாளுவது? | How to control PMS
அது பெரிய கடினமே கிடையாது. ஒரு சில விஷயங்கள் நம்மிடம் மாற்றி கொண்டாலே பொதுமானது.நமக்கு ஏற்படும் Symptomsயை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அது மூலம் அதே ஒரே மாறி வருகிறதா அல்லது ஒவ்வொரு முறை மாறி வருகிறதா என்று பார்த்துக்கொள்ளலாம். இதனால் அடுத்த முறை வருமுன் நாம் அதற்கு ஏற்ற மாதிரி நாம் நடந்துக்கொள்ளலாம்.
உணவு ரீதியான மாற்றங்கள்:
சோகம், எரிச்சல் மற்றும் பதட்டம் போன்ற PMS தொடர்பான உணர்வுகளுக்கு calcium supllement உதவுகிறது. உதாரணம்: பால்,தயிர்,பாலாடைக்கட்டி மற்றும் இலைகாய்கறிகள் இவையெல்லாம் உட்கொண்டால் அதை கட்டுப்படுத்த முடியும். vitamin B-6 உதாரணம் : மீன்,கோழி மற்றும் வான்கோழி,பழம், வலுவூட்டப்பட்ட தானியங்கள் இவையெல்லாம் உட்கொள்ளலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்:
இந்த ஒரு மாற்றம் செய்தால் முக்கியமாக மருத்துவ ரீதியான பிரச்சனைகளை தவிர்க்கெல்லாம்.
நாம் தினமும் முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்தாலோ அல்லது தினமும் நடை சென்றால் நமக்குள் இருக்கும் சோகம், எரிச்சல், பதட்டம் அனைத்தையும் மறக்க வைக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவை அதிக அளவில் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும் முக்கியமாக சக்கரையோ அல்லது கொழுப்புசத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதினால் உங்கள் மனநிலையை கெடுக்கும். அதற்கு பதிலாக பழங்கள் எடுத்துக்கொண்டால் சிறப்பு.
/stp-tamil/media/post_attachments/QVlVn0n7yqiStRNNbN53.jpg)
தூக்கம் முக்கியான ஒன்று. எந்த மனநிலை மாற்றங்களையும் தவிர்க்க குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.
அதிகம் stress எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்த deep breathe பயிற்சிகள், meditation மற்றும் யோகாவைப் பயன்படுத்துங்கள். இது உங்களை நிதானம் படுத்தும்.
உங்களுக்கு வலிகள் அல்லது ரொம்ப கடினமாக இருந்தால், மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் எழுதி கொடுக்கும் மருந்துகளை உட்கொள்ளுங்கள்.
இதெல்லாம் பொதுவாக செய்யகூடிய விஷயங்கள். என்னதான் அனைவரும் இதை செய் அதை செய் என்று கூறினாலும், நாம் நம் மனதளவில் மாற வேண்டும் என்றால் தான் முடியும். உங்களுக்கு பிடித்த வேலையை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு கவனச்சிதறல் வராது.
Suggested Reading:
Overthinkingயை control செய்வது எப்படி?
Suggested Reading:
நம் வாழ்வை மேன்படுத்த உதவும் useful skills
Suggested Reading:
Coffee, Tea பிரியர்களே .. இதை கவனமாக படியுங்கள்!!
Suggested Reading:
நான்கு Women Centric படங்கள் - Admin Picks!