அனைவருக்கும் ஊக்க படுத்த அல்லது இப்படியும் வாழலாம் என்று தோல் தட்ட ஒருத்தர் வேண்டும். அது நிஜ வாழ்க்கையில் இருக்கும் நபராக இருக்கெல்லாம் அல்லது படத்தில் வரும் ஒரு கதாபாத்திரமாக இருக்கெல்லாம். சோர்ந்து வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்தில் ஒரு Spark தந்தால் போதும் நம் வாழ்க்கையில் அது நகர்ந்து செல்லலாம்.
அப்படி எனக்கு spark கொடுத்த நான்கு படங்கள் மற்றும் கதா பாத்திரங்கள்.
Top 3 women centric movies | ShePicks
மனதில் உறுதி வேண்டும்
நந்தினி என்ற கதாபாத்திரம் மிகவும் அற்புதமாக கையாளப்பட்டுள்ளது . குடும்பத்திற்காக ஓடி உழைக்கும் ஒரு கதாபாத்திரம். தான் செய்யும் வேலையே கடவுளாக மதித்து, அதை யாரேனும் தவறாக பார்த்தால் கோபம் கொள்வாள். கல்யாண வாழ்க்கை மோசமாக மாறினாலும் அவள் வேலை அவளை கைவிடவில்லை. பின்னர் காதல் வாழ்க்கையும் அவளை காயப்படுத்தினாலும் அவள் மனந்தளராமல் தன் வேலையில் பரம்பரமாய் சுற்றி கொண்டிருப்பாள்.
36 வயதினிலே
நம் அம்மாவை போலவே அழகாக சித்திரிக்கப்பட்டுள்ளார் ஜோதிகா.. நடுத்தர அம்மாக்களின் அன்றாட வாழ்க்கை, குடும்பத்தை அனுசரித்து கண்வர் மற்றும் பிள்ளை அவர்களை மதிக்காவிட்டாலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதைக் காட்டியுள்ளார் . அவமானம் ஒன்று நேர்ந்தால் அது தன் பிள்ளையை அசிங்கப்படுத்துது என்று அறிந்தவுடன்,அவள் தைரியமாக உடைத்து அவளது comfort zone ல் இருந்து வெளியே வருவாள். நீங்கள், உங்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம். உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டுகள்.
காற்றின் மொழி
மீண்டும் நடுதர அம்மாவின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது இந்த "விஜயலக்ஷ்மி " கதாபாத்திரம். அம்மாகளின் சின்ன சின்ன ஆசைகள், எதிர்ப்பார்ப்புகள் படத்தை பார்க்கும் போதெல்லாம் இது என் அம்மா செய்வாங்க என்று கூறும் கும்பல். கணவர் அலுவகம் மட்டும் பிள்ளை பள்ளிக்கூடம் போன பிறகு அவளது வாழ்க்கை அந்த நான்கு செவுருக்குள் அடங்கி விடுகின்றது. இவருக்கு வேலை கிடைத்த பின் வீட்டில் பெரிய பிரச்சனை வந்து, அதற்கு எல்லாம் காரணம் நீ தான் என்று சொல்லும் பொது அவள் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து அவள் வேலையை விடுவாள். பின்னர் அவளது கணவன் வீடு வேலையில் பங்குகொண்டு நீ போ நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியவுடன் அவள் சுயதொழில் தொடங்குவாள். "கணவனின் பங்கு இருந்தால் கண்டிப்பாக கல்யாணம் குழந்தை பின்னரும் உங்களது வேலையை பார்க்கலாம்" என்பதை இதில் தெரிய படுத்துவார்கள்.
நேர்கொண்ட பார்வை
இது இந்த காலகட்டத்தில் பெண்களின் வாழ்வில் மற்றும் அதனால் ஏதாவது துன்பம் நேரலாம் என்பதை கூறியுள்ளது. இந்த கதையின் முக்கிய அடித்தளம் " No means No ". ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லையென்றால் அது அவள் கணவன் என்றாலும் தொடக்கூடாது என்பது தான். இது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை. அதை ஒரு கதையாக எழுதியுள்ளார் இயக்குனர்.
இது வெறும் மூன்று தான் இது போல் நம்மை ஊக்கவிக்கும் படங்கள் நிறையாக இருக்கிறது. அதிலும் பெண்களின் கதாபாத்திரம் மிக அழகாகவும், தையிரமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
Suggested Reading:
உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க Tips!
Suggested Reading:
tired'அ.. எனக்கா.. அட ஆமாங்க..
Suggested Reading:
Budget'ல் துண்டா?? இனி No chance
Suggested Reading: