அப்படி என்ன பிரச்சனை என்று யோசித்தால் ஒவ்வொரு விஷயங்கள் புதிதாக கிளம்பும். இது நடுத்தர மக்களுக்கு மட்டுமல்ல, என்னைப்போல் நினைத்தப்படி வாங்கி மாத கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் தோழிகளுக்கு இந்த கட்டுரை.
இந்த காலகட்டத்திலும் சரி முன்னரும் சரி, பெண்கள் கிட்ட தான் வீட்டின் நிதி இருக்கும். அந்த மாதத்தின் வீட்டின் நிதியை பார்த்துக்கொள்ள வேண்டும். கேட்டால், "பெண்கள் தான் சரியாக பார்த்துக்கொள்வார்" என்று கூறி விடுவர். அது என்ன பெண்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டுமா? ஆண்களும் பார்த்துக்கொள்ளலாமே. இதன் கேள்விக்கு இன்னொரு கட்டுரையில் பேசுவோம்.
அதில் ஏதும் துண்டு விழுந்தால் "நீ சரியாய் நிர்வாகிக்க வில்லை" என்று குற்றம் கூறி தேவையுள்ள பணத்தை தருவார்கள். இப்படியே போனால் எங்கிருந்து நாங்கள் சேமிக்கிறது என்று புலம்பும் தாய்மார்களே அதிகம். அதற்கான தீர்வாக பலரும் பின் பற்றும் ஒரு முறையை தான் இப்போது பார்க்க போகிறீர்கள்.
How to plan our monthly budget
உங்கள் மாத வருவாய் கணக்கிடுங்கள்:
வருட வருமானம் நான்கு லட்சம் என்பது பெரிதாக இருந்தாலும், மாதம் என்று கணக்கெடுத்தால் வெறும் இருபத்தைந்து ஆயிரம் தான். தனிமனிதருக்கு இது அதிகம் ஆனால் ஒரு குடும்பத்தை நடந்த இது பொதுமானது அல்ல. ஒரு சிலர் வீடுகள் வாடகைக்கு விடுவார்கள். அந்த வருமானம் . பெண்கள் சிலர் வேலைக்கு செல்வார்கள் அவர்களின் வருமானம் என ஒட்டுமொத்த மாதம் வருமானத்தை எழுதி வையுங்கள்.
உங்கள் செலவைக் கண்காணிக்கவும்:
உங்கள் செலவினங்களைக் கண்காணித்து வகைப்படுத்துவது, நீங்கள் எதற்காக அதிகப் பணத்தைச் செலவிடுகிறீர்கள் என்பதையும், எங்கு சேமிப்பது எளிதாக இருக்கும் என்பதையும் தீர்மானிக்க உதவும். உங்கள் தினசரி செலவுகளை பதிவு செய்யுங்கள். மளிகை சாமான்கள், வாடகை, entertainment போன்ற விஷயங்கள் எழுதி வையுங்கள். இது மாததிற்க்கு மாதம் மாறும். இதன் மூலம் எதை குறைக்கெல்லாம் என்று தெரிய வரும்.
இலக்குகள் மற்றும் திட்டம்
என்னதான் நமக்கு ஆசைகள் அதிகமாக இருந்தாலும், யதார்த்தம் என்பது வேற. இலக்குகள் வைக்கவும். எது சாத்தியமோ அது. இந்த வருடத்தில் வாங்கிய லோகனை அடைக்க வேண்டும். வருடத்தில் ஒரு நகை வாங்கி சேமிக்கவேணும் என்பது போல இலக்கை வைக்கவும். உங்களிடம் இருக்க வேண்டிய பொருட்களுக்கும் நீங்கள் வைத்திருக்க விரும்பும் பொருட்களுக்கும் இடையில், உங்கள் செலவுகளை குறைக்க நீங்கள் எதுவேண்டுமோ செய்யலாம் செய்யலாம். இந்த இலக்கை நோக்கி ஓட வேண்டும். இதை நாம் தினம் பார்க்கும் இடத்தில் ஒட்டி வைத்து தினமும் பார்த்தால், நமக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்.
50/30/20 வழிமுறை:
பயன்படுத்திவர் இது வேலை செய்கிறது என்று கூறினார்.
உங்கள் வருமானத்தில் உள்ள 50% நமக்கு தேவையுள்ளத்திற்கு பயன்படுத்த வேண்டும். உதாரணம்: வாடகை, மளிகை சாமான்கள், EB போன்றவை இதில் அடங்கும்.
வருமானத்தில் உள்ள 30% நமக்கு வேண்டும் என்பதற்கு பயன்படுத்த வேண்டும். உதாரணம்: ஆடைகள், சுற்றுலா, entertainment போன்றவை.
வருமானத்தில் மீதமுள்ள 20% நமது சேமிப்பு. அது பின்னாடி அவரச தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
Budget'ல் இருக்க உங்கள் செலவை சரிசெய்யவும். சிறு சேமிப்பு கூட நிறைய பணம் சேர்க்கலாம். ஒரு நேரத்தில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்வதன் மூலம் நீங்கள் எவ்வளவு கூடுதல் பணத்தைச் சேகரிக்கிறீர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். உங்கள் budget யை தவறாமல் மதிப்பாய்வு செய்யவும்.
என்னதான் பார்த்து பார்த்து செல்வது செய்தாலும் ஏதோ ஒரு விதத்தில் எங்கையோ பணம் பற்றாக்குறை ஏற்படும் . மேலே குறிப்பிட்டுள்ள வழியை பின்பற்றினால் உங்கள் budgetயை கைக்குள் வைக்கெல்லாம்.
Suggested Reading:
Suggested Reading:
இரவில் travel செய்பவரா நீங்கள் ? இதை கண்டிப்பாக படியுங்கள்!
Suggested Reading:
Hemoglobin அளவை அதிகரிக்கும் உணவுகள்!