Advertisment

tired'அ.. எனக்கா.. அட ஆமாங்க..

நான் எப்போவுமே tired ஆவே இருக்கேன். அதெல்லாம் ஏதுமில்லை வயசாகுது அதான். இது தான் பொதுவான உரையாடலாக இருக்கும். ஆனால் உண்மையிலே அது மட்டுமமே காரணமாக இருக்காது என்று ஆராய்ச்சி செய்த பிறகே தெரிய வந்தது.

author-image
Nandhini
New Update
nithya menon

Image is used for Representation purposes only.

என்ன செய்தாலும் உங்களுக்கு சோர்வாகவே இருக்கிறது என்று தோன்றினால், உங்கள் உடல், உங்களுக்கு "பின்னாடி பெரிதாக வரக்கூடியதை இப்போதே சரி செய்"என்று signal கூடுகிறது. அதனால் தொடர்ந்து உங்களுக்கு சோர்வாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

Advertisment

Why Am I Tired Always?

தூக்கமின்மை | Sleeplessness 

அனைவரும் கூறும் தீர்வு தூங்கினால் சரி ஆகி விடும். ஆனால் தூங்காமல் இருப்பதினால் தான் இந்த சோர்வு என்று ஒரு பக்கம். இது மாநாடு படத்தில் வரும் loop hole மாதிரி ஒரே விஷயம் தான். நாம் தூங்கும் பொது முக்கியமான வளர்ச்சி harmone மற்றும் செல்களை சரிசெய்தல் மற்றும் மீண்டும் உருவாக்குதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதினால், தூங்கி எழுந்த பின் அனைவரும் Refresh ஆக மற்றும் energy ஆக இருப்பார்கள்.

Advertisment

ஆய்வின் படி ஒரு நாளுக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அது குறைந்து தூங்கினால் உடலில் பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் நீங்கள் சோர்வாக இருக்க தூக்கமின்மையும்  ஒரு காரணமாக இருக்கெல்லாம்.

மருத்துவ ரீதியாக | Medical Conditions

நீங்கள் தினமும் நன்கு குறிப்பிட்ட நேரங்களில் தூங்கியும், சோர்வாக இருக்கிறீர்கள் என்றால் உடலில் ஏதேனும் Deficiencies குறைபாடுகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  Iron , vitamin B, vitamin  c போன்ற குறைபாடுகள் இருந்தால் உடல் சோர்வடையும். அதற்கு ஏற்ற மருந்தோ அல்லது காய்கறிகளோ உட்கொண்டால் கால போக்கில் அது குறையும்.

Advertisment

இன்னும் சோர்வடைய  cancer, kidney disorders, diabetes போன்ற நோய்கள் இருந்தாலும் நமக்கு தூக்கம் வராது .(இது அனைவருக்கும் அல்ல ஒரு சிலர் உடல் வாகுக்கு ஏற்ப). மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது நல்லது.

Stress மற்றும் Depression

நாம் ஏதும் மன அழுத்தத்தில் இருந்தால் நமக்கு தூக்கம் வராது. நாம் முக்காவாசி சமயங்கள் இரவு நேரத்தில் தான் அதிக சிந்தனைகளில் ஈடு படுவோம். அதனால் நம் உடலுக்கு தேவையான ஒய்வு கிடைப்பதில்லை. அதனால் உங்கள் மன அழுத்தம் இருந்தால் தயவு செய்து அதற்கான சிகிச்சையாளரை பார்த்து சிகிக்சை பெறுங்கள்.

Advertisment

junk

சாப்பாடு | Food Intake

இந்த சாப்பாடு என்பது மிகவும் முக்கியமான பங்கு அளிக்கிறது. நம் உடல் தேவையுள்ள வேலை செய்ய வேண்டும் என்றால் தகுந்த சத்துக்கள் நிறைய உணவுகளை உட்கொள்ள வேண்டும். தேவையற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நம் உடலை கெடுகின்றது. 

Advertisment

காபி மற்றும் தேனீர் | Caffine 

நீங்கள் அதிகம் காபி மற்றும் தேனீர் குடிப்பதினால், அதில் இருக்கும் caffeine உங்களை அந்த நேரத்தில் brisk ஆக வைத்தாலும் அடுத்த நாள் உங்களை சோர்வாகும். காலையில் சோர்வாக உணர்வதால் மக்கள் அதிக அளவு caffenine உட்கொள்ள வழிவகுக்கிறது, இது அவர்களின் Sleep cycle பாதிக்கிறது. நீங்கள் தற்போது தூக்க பிரச்சனைகளை அனுபவித்து, caffine கலந்த பானங்களை அடிக்கடி அருந்தினால், குறைக்க முயற்சிக்கவும்.

தண்ணீர் | Water Intake 

Advertisment

இதுவும் ஒரு முக்கியமான பங்கு அளிக்கிறது. நாம் நம் உடல் அமைப்பிற்கு ஏற்ற படி ஒருத்தர் ஏறக்குறை நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் உடலின் செயல்பாடிற்கு அது தேவை. அதை நாம் எடுத்துக்கொள்ளாத பொது உடல் சோர்வாகும். தாகம், சோர்வு, தலைசுற்றல் மற்றும் தலைவலி ஆகியவை நீரிழப்புக்கான பொதுவான அறிகுறிகளாகும்.

அதிக உடல் எடை | Obesity

உடல் பருமன் type 2 diabetes , இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற பல நாள்பட்ட நோய்களின் அதிக ஆபத்தோடு தொடர்புடையது, ஆனால் இது நாள்பட்ட சோர்வு அபாயத்தையும் அதிகரிக்கலாம்.

Advertisment

அதனால் உடலெடையை Maintain பண்ண வேண்டும். தூக்கம் ஆதரிக்கலாம், அதே நேரத்தில் உயர்தர தூக்கம் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் சோர்வைக் குறைக்கவும் உதவும்.

cigar

இதை தாண்டி நாம் மது, புகை போன்ற விஷயங்கள் மேற்கொண்டாலும் தூக்கமின்மை காரணமாகும். அதனால் அதையெல்லாம் தவிர்க்கவும்.

இந்த எந்திர வாழ்க்கையில் ஓடி கொண்டே இருப்பது தான் நம் வேலையை தக்க வைக்க முடியும். புரிகிறது. அதே சமயத்தில் நாம் நன்கு தூங்க வேண்டும். உடல் சோர்வு இல்லாமல் இருந்தால் தான் ஓட முடியும்.

 

Suggested Reading: 

Why Am I Tired Always?
Advertisment