பெண்கள் வீட்டு வேலை செய்யும்போது சிறிய காயங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன, பெரும்பாலானவை வீட்டிலேயே சிகிச்சையளிப்பது எளிது. ஆனால் அவற்றை விரைவாகவும் அமைதியாகவும் கையாளுவதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து, சரியான பொருட்களை வைத்திருக்க வேண்டும்.
Things to be in a first aid kit
அதை எப்படி உருவாக வேண்டும்?
அந்த kit யில் கண்டிப்பாக நாம் சிறு சிறு காயங்களை சரி செய்யும் அளவிற்கு,அந்த சமயத்தில் மருத்துவரின் உதவி இல்லாமல் சரி செய்யும்படி இருக்க வேண்டும். உங்கள் பொருட்களை உறுதியான, தெளிவான Plastic பெட்டியில் வைக்கவும். இதன் மூலம் உள்ளே என்ன இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்.
அந்த kitயில் இருக்க வேண்டும்?
ஒவ்வொரு kit க்கும் பொருட்கள் அதிகமாக இருக்கெல்லாம் அல்லது குறைவாக இருக்கெல்லாம் தவிர இந்த பொருட்கள் மாறவே மாறாது.
bandage, adhesive tape, thermometer, Antiseptic liquid, cotton, disposable gloves, Ice pack, Dolo மாத்திரை,சின்ன கத்திரிக்கோல்.
இதை எங்கே வைக்க வேண்டும்?
உங்கள் Kit கண்டுபிடிக்க எளிதாக இருக்க வேண்டும். ஆனால் இது குழந்தைகள் விரல்களிலிருந்து வெகு தொலைவில், உயரமான, குழந்தைப் பாதுகாப்பு அலமாரியில் வைக்கப்பட வேண்டும். உங்கள் சமையலறை அல்லது குளியலறை போன்ற வீட்டில் ஒரு மைய இடத்தில் ஒரு முழு அளவிலான கிட் வைக்கவும். நீங்கள் சாலையில் செல்லும்போது உங்கள் காரிலோ அல்லது handbagயிலோ ஒரு சிறிய kit வைக்கவும்.
எல்லாம் எப்போது restock செய்வது?
நீங்கள் அவற்றை அடிக்கடி பயன்படுத்தினால் பொருட்கள் தீர்ந்துவிடும், நீங்கள் மருந்துகள் எப்பொழுதாவது தான் உபயோகித்தால் அதை காலாவதியாகலாம். எனவே உங்கள் kit டில் உள்ள அனைத்தையும் பார்த்துவிட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது காலியான அல்லது காலாவதியான பொருட்களை மாற்றவும்.
உதாரணத்திற்கு ஒரு சம்பவம் இப்போது விரிவாக கூறப்பட்டுள்ளது
உங்கள் கைகளில் ஒரு சின்ன Cut அல்லது சுறாய்ப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?
வெட்டுக்களை சுத்தமாக வைத்திருக்கவும், தொற்று மற்றும் வடுக்கள் ஏற்படாமல் தடுக்கவும் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
முதலில் கைகளை நன்றாக கழுவுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரை போட்டு நன்றாக கழுவுங்கள். அடுத்து அடிபட்ட இடத்தில் ஒரு சுத்தமான துணியால் வைத்து நன்கு அழுத்தி சிறிது நேரம் வைக்கவும். இரத்தம் நின்ற பிறகு மீண்டும் ஒரு முறை தண்ணீரால் அடிபட்ட இடத்தை சுத்தமாக துடைக்கவும். சோப்பு உபயோகிக்க வேண்டாம். ஏனென்றால், அந்த இடத்தில் எரிச்சல் வந்துவிடும். ஒரு நல்ல சுத்தமான துணியால் துடைத்த பிறகு Bandage போட்டுக்கொள்ளவும். இது காயம் ஆன இடத்தில் மேலும் மோசமாக மாறாமல் இது பார்த்துக்கொள்ளும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
நமது காயம் ஆழமாக இருந்தால், நமக்கு விலங்கு மூலமாக அடிபட்டு இருந்தால், நாம் துணி வைத்து அழுத்தியும் இரத்தம் அடங்க வில்லை என்றால், வெட்டு உங்கள் முகத்தில் அல்லது மூட்டுக்கு அருகில், உங்கள் விரல்களில் உள்ளது என்றால், முக்கியமாக அடிபட்டு உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
Suggested Reading:
தாய் வேலைக்கு செல்வதினால், குழந்தைகளுக்கு ஏற்படும் Impact
Suggested Reading:
kitchenல் இதை செய்து பாருங்கள்! - useful tips & tricks
Suggested Reading:
PMS .. PMS .. PMS அட என்னப்பா அது ?
Suggested Reading:
Overthinkingயை control செய்வது எப்படி?