ஆனால் உண்மையில் வேலைக்கு செல்வதினால் அந்த குழந்தைக்கு என்னதான் நடக்கிறது?
How working women impact their children?
ஒரு பெண் வேலைக்கு செல்வதினால், அவளுக்கான சுய சம்பாத்தியம் என்ற ஒரு விஷயத்தை உருவாக்கிறாள். அதனால் அவள் குழந்தைக்கு தகுந்த நேரம் செலவழிக்க முடியாமல், அந்த குழந்தை "அம்மா" என்ற பாசம் இல்லாமல் ஏக்கம் கொண்டு இருக்கும் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை தாண்டி அந்த குழந்தை என்ன கற்றுக்கொள்ளும் என்று பார்க்கெல்லாம்.
வலுவான வேலை நெறிமுறையை வளர்க்கிறார்கள்:
குழந்தைகளுக்கு ஒரு பழக்கம் இருக்கும். நாம் என்ன செய்தாலும் அதை அப்படியே செய்யும் பழக்கம். நாம் வேலைக்கு சென்றும், வீட்டு வேலையும் பார்த்து, அனைத்து வேலைகளும் செய்யும் பொது நம்மிடம் இருந்து கற்றுக்கொள்வது "எதுவும் எளிதில் கிடைக்காது" என்று. மேலும் எப்படி அனைத்தையும் அழகாக எந்த ஒரு கலக்கமின்றி கையாளுவது என்று கற்றுக்கொள்கிறார்கள்.
Adapting திறன்:
அடுத்த நிமிடம் நிச்சயமில்லா வாழ்க்கையில் எது வேணாலும் நடக்கேல்லாம். அந்த தாய்க்கு அன்று முக்கியமான ஒரு meeting இருக்கும் அதே சமயத்தில் வீட்டில் யாருக்காச்சும் உடம்பு முடியாமல் இருக்கும் அப்போது எப்படி அதை கையாளுவாள் என்று அந்த குழந்தை பார்க்கும். இதன் மூலம் அந்த குழந்தை, சிறுவயதிலிருந்தே adapt செய்ய கற்றுக்கொள்கிறது. இந்த திறன், அவர்கள் பெரியவர்களாக வளரும்போது, அவர்கள் பணி மாறுதல் சூழ்நிலைகளில் எப்படி கையாள வேண்டும் என்று கூறுகிறது.
Time Management:
காலை எழுந்தவுடன் வீடு வேலை, சமையல், பெரியவர்களை பார்த்துக்கொள்வது, குழந்தை எழுந்தவுடன் அவர்களை குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, மத்தியானம் சமையல்'கு தயார் செய்து விட்டு, அலுவலம் சென்று அங்கிருக்கும் வேலை பார்த்து, மீண்டும் வீட்டிற்கு வந்து குழந்தையுடன் நேரம் செலவழித்து, மீண்டும் வேலை செய்வதை, தொடர்ந்து பார்ப்பதினால் அந்த குழந்தைக்கு எப்படி Time Management செய்வது என்று தெரிந்துகொள்கிறது.
பணிபுரியும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல் முறையால் மட்டுமே தனது தொழில் சாத்தியம் என்பதை அறிவார். அது ஒரு கூட்டாளியாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பராமரிப்பாளர்களாக இருந்தாலும், வேலை மற்றும் வீடு இரண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்றால், அவர் அவர்களுடன் ஒரு குழுவாக பணியாற்ற வேண்டும். ஒருவரையொருவர் அனுசரித்து, உதவி செய்து, ஆதரவளிக்கும் நபர்களைப் பார்ப்பது சிறுவயதிலிருந்தே Team Workயின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
பொறுப்பு மிக்கவராக வளர்வார் :
ஒரு வீட்டில் தாய் மற்றும் தந்தை இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால், அந்த குழந்தைகள் மிகவும் பொறுப்பு நிறைந்தவராக இருப்பார். ஏனென்றால், அந்த தாய் வேலை, வீடு என்று இரண்டையும் சமாக பார்த்துக்கொள்வதினால், சிறு வயதிலிருந்தே ஒரு சில பழக்க வழக்கங்கள் குழந்தை தமாகவே பார்த்துக்கொள்வது போல் இருக்கும். இதனால் எந்த ஒரு வேலை பாதிக்காத மாறி இருக்கும்.
இதெல்லாம் தாண்டி அந்த தாய் ஒரு பொறுப்பான அன்பான பிள்ளையையும், பெண்பிள்ளையையும் வளர்க்கிறார். எனவே என்னடா இது குழந்தையை விட்டு வேளைக்கு செல்கிறோமே என்று வருத்தப்படாதீர்கள், நீங்களே அறியாமல், ஒரு வழிமுறையை உங்களுக்கு குழந்தைக்கு வகுக்கிறீர்கள்.
Suggested Reading:
kitchenல் இதை செய்து பாருங்கள்! - useful tips & tricks
Suggested Reading:
PMS .. PMS .. PMS அட என்னப்பா அது ?
Suggested Reading:
Overthinkingயை control செய்வது எப்படி?
Suggested Reading:
நம் வாழ்வை மேன்படுத்த உதவும் useful skills