Advertisment

முழங்கைகளில் உள்ள கருமையை(dark elbow) போக்க எளிய வழிகள்

முழங்கைகளில் கருமை ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதை எப்படி தடுப்பது போன்ற விஷயங்கள் பற்றிய தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
dark elbow

Images are used for representational purpose only

கூடுதல் மெலனின் உருவாக்க தூண்டும் நிலையாலும் அல்லது ஒரு சில பொருட்களாலும் உங்கள் தோலில் ஒரு சில இடங்களில் கரும்புள்ளிகள் அல்லது திட்டுக்கள் ஏற்படலாம். மெலனின் சருமத்திற்கு நிறத்தை அளிக்கிறது. கருமையான முழங்கைகளுக்கு சிகிச்சையோ அல்லது குணப்படுத்தும் பொருளோ இல்லை. ஆனால், சில வீட்டு வைத்தியங்கள் உங்கள் முழங்கைகளின் நிறத்தை தற்காலிகமாக மாற்றலாம்.

Advertisment

கருமையான முழங்கைகள் ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்கள்

  • சில மருந்துகள் குறிப்பாக birth control pill
  • காயத்தின் வடு
  • தடிப்பு தோல்
  • சில தோல்நிலைகள்
  • தோல் பராமரிப்பு
  • பொருட்கள்(product)
  • கர்ப்பம் அல்லது பிற நிலைமைகளில் இருந்து ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள்
  • Dead cells உருவாக்கம்
  • சூரிய ஒளி

sunscreen

Advertisment

பாதுகாப்பு:

  1. சரியான சரும பராமரிப்பு முழங்கை கருமையை குறைக்கும்
  2. சன் ஸ்க்ரீன்(sunscreen) பயன்படுத்தவும்
  3. காயங்கள் ஒழுங்காக ஆறுவதை கவனித்து கொள்ளவும்
  4. தோலில் கடுமையாக செயல்படக்கூடிய பொருட்களை தவிர்க்கவும்

வழக்கமான சிகிச்சையை பயன்படுத்தி தடுப்பு தோல், அலர்ஜி போன்ற தோல்நிலைகளை சரிப்படுத்த முடியும். ஒரு நபர் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்

Advertisment
  1. முழங்கைகளை சுத்தமாக்கவும், ஈரமாகவும்(hydrated) வைத்திருக்கவும்
  2. முழங்கைகளை ஒழுங்காக exfoliate செய்வது
  3. சூரிய ஒளியில் செல்வதற்கு முன் சன் பிளாக்(sunscreen) பயன்படுத்தி வெளியில் செல்லவும். மீண்டும் தேவைப்படும் பொழுது அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும்.

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது:

கற்றாழை:

Advertisment

ஆராய்ச்சிகள் கற்றாழை தோலை வெண்மையாக்க உதவுகிறது என்கிறது. அதனால் கற்றாழை பயன்படுத்துவது உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

பேக்கிங் சோடா(Baking Soda):

பேக்கிங் சோடாவில் exfoliating மற்றும் skin lightening பண்புகள் இருக்கிறதால் அது கருமையான முழங்கைகளை சரி செய்ய உதவும். ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலக்கவும். தேவையான அளவு எடுத்து நேரடியாக முழங்கைகளில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து அதனை கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்யலாம். முகத்தில் பேக்கிங் சோடா பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

Advertisment

சிட்ரஸ் ஃப்ரூட்(citrus fruit):

எலுமிச்சை போன்ற பொருட்களில் சிட்ரஸ் நிறைந்துள்ளது. அதனால் எலுமிச்சை சாற்றை முழங்கைகளில் தடவுவது நல்ல ரிசல்ட்டை தரலாம்.

மஞ்சள்:

Advertisment

மஞ்சள் பலவித தோல் பிரச்சினைகளை தீர்க்கக்கூடும். மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து அதை நேரடியாக முழங்கையில் தடவவும். பிறகு பத்து நிமிடங்கள் கழித்து அதை கழுவவும்.

turmeric

ஸ்கின் கேர்(skin care):

Advertisment

Cleanse and moisturizer:

தினமும் உங்கள் முழங்கைகளை கழுவ மறந்து விடாதீர்கள். பிறகு அதில் moisturizer போடவும். Exfoliate மூலம் தோலில் உள்ள டெட் செல்லை(dead cell) அகற்றுவது முக்கியமாகும். அதனால் வாரத்திற்கு இரண்டு முறையாவது எக்ஸ்போர்ட்(exfoliate) செய்ய வேண்டும். மென்மையான எக்ஸ்போலேட்டரை பயன்படுத்தி சர்குலர் மோஷனில்(circular motion) அதை பயன்படுத்தவும். மிகவும் கடுமையாக தேய்த்தால் அது உங்கள் தோலை பாதிக்கும். எனவே, நிதானமாக அதை செய்ய வேண்டும்.

சன் ஸ்கிரீன்(Sunscreen):

தினமும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம். வெளியில் செல்வதற்கு முன்பு கைகளிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம் ஆகிறது. சன் ஸ்கிரீன் பயன்படுத்தும் பொழுது அதை கைகளுக்கும், முழங்கைகளுக்கும் சேர்த்தே பயன்படுத்துங்கள்.

 

Suggested Reading: கருவளையம் (dark circle) வருவதற்கான ஏழு அடிப்படை காரணங்கள்

Suggested Reading: முடி உதிர்வதை தடுக்க சமையலறையில் இருக்கும் ஐந்து பொருட்கள்

Suggested Reading: மாதவிடாய் வலியை (period cramps) போக்கும் 6 சாறுக்கள்

Suggested Reading: Menopause சமயத்தில் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்

dark elbow
Advertisment