what is shiny object syndrome?
ஒரு விஷயம் இருந்து வேற ஒரு புது விஷயத்திற்கு மனம் concentration பொய் கொண்டே இருக்கும். இதற்கு பெயர் உண்டு "shiny Object Syndrome". இதன் பொருள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதை விட, புதிய யோசனையாகவோ, போக்காகவோ அல்லது குறிக்கோளாகவோ, புதிதாக ஒன்றைத் துரத்துவது ஒருவரின் வழக்கமாக இருக்கும்.
இன்னும் எளிதில் புரியும் படி கூற வேண்டும் என்றால் இந்த syndrome வைத்திருக்கும் நபர்கள் ஒரு பத்து மாத குழந்தை போல, சத்தம், வெளிச்சம் பார்த்தால் எப்படி மாறி மாறி பார்க்குமோ அது போல் உணர்வர். ஒரு விஷயத்தை நோக்கி பொய் கொண்டு இருக்கும் பொது ,புதிதாக ஒரு விஷயம் அவனை ஈர்த்தால் பழையது மேல் ஆர்வம் குறைந்து விடும். இது Loop போல் சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த syndromeயின் முக்கியமான பிரச்சனை "distraction" கவனச்சிதறல் தான்.
உங்களுக்கு இந்த "shiny Object syndrome" இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது?
உங்களுக்கு நிறைய ideas இருக்கும் ஆனால் அதை எதையுமே நீங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல மாட்டீர்கள். புது புது குறிக்கோளை நோக்கி செல்வீர்கள். பழைய குறிக்கோளை கடைசி வரை முடிக்காமல் தாவிக்கொண்டே இருப்பீர்கள். குறிக்கோளில் மட்டும்மல்ல எந்த ஒரு விஷயத்திலும் இவ்வாறு தான் நடந்துக் கொள்வீர்கள்.
இதை எப்படி தடுப்பது ?
ஆய்வின் படி ஒரு சில விஷயங்கள் பின் பற்றினால் இந்த syndrome வருவதை தவிர்க்கெல்லாம் என்பதை குறிப்பிட்டோம்.
ஓடி கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் அந்த அந்த நேரத்தில் இருக்கும் Trendயை பின்பற்ற வேண்டியது என்பது மிகவும் அவசியம். Shiny object Syndrome என்பதை எல்லா புதியன இருக்கும் விஷயங்களை தவிர்பதல்ல. இப்போது புதிதாக ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டு நமது நேரத்தை வீண் அடிக்காமல் பழையதை இறுதி வரை முடிக்க நினைப்பது நல்லது. இன்னோருத்தர் அதை பின்பற்றுவதினால் நீங்களும் அதை செய்ய வேண்டும் என்பது இல்லை. உங்களின் தேவையை புரிந்துக் கொண்டு செயல் பட வேண்டும்.
Hype தாண்டி ??
ஒரு புதிதாக இருக்கும் விஷயத்தை நீங்கள் கண்டு உற்சாகம் அடைவீர்கள். சரி அதை தாண்டி அந்த விஷயத்தில் என்ன இருக்கிறது என்று நீங்கள் பார்க்கவேண்டும். அதுவும் உங்களுக்கு ஆர்வமுடையதாக இருந்தால் அது அத்தியாவசிய தேவையாக இருக்கிறதா என்று பார்த்து அதன் பின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இந்த இடத்திலையே தெரிந்து விடும் அது வேணுமா வேண்டாமா என்று.அது உங்கள் வாழ்க்கைக்கு தேவையா என்றும் புரிந்துகொள்ள இந்த Phase உதவுகிறது.
கவனச்சிதறல் கட்டுப்படுதல்
முன்னர் கூறிய படி இது முழுக்க முழுக்க கவன சிதறல் மட்டுமே காரணம். அதை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பார்க்க வேண்டும். இந்த உலகம் இதை வாங்குங்கள் இதை செய்யுங்கள் என்று நிறைய விஷயங்களை நம்முன் வைக்கும். அப்போது நாம் அதை கண்டு வியப்படையாமல், அது உங்களுக்கு தேவையா முக்கியமா என்று பார்க்க வேண்டும். அப்படி தேவையில்லை என்றால், நீங்கள் தயங்காமல் வேண்டாம் என்று சொல்ல பழக வேண்டும். உங்களது குறிக்கோளை நீங்கள் தவற விடாமல் வைத்திருக்க வேண்டும்.
காத்திருப்பு
நம் ஒரு விஷயத்தை பின்பற்றி அது நம் வாழ்வாக கருத பட கிட்டத்தட்ட 21 நாட்களில் இருந்து மூன்று மாதம் தேவை. அது வரை பொறுமையாக காத்திருங்கள். இந்த விஷயம் உங்களுக்கு எளிதில் adapt ஆகிக்கொள்ளும். அதனால் ஒரு புதிய விஷயத்தை கண்டு மனம் மாறினால், ஒரு மூன்று மாதம் வரை பொறுமையாக இருங்கள். அதையும் தாண்டி அது உங்களை ஈரத்தால் கூட உங்கள் மனதில் second thoughts வந்துவிடும். அதை எடுக்க உங்களுக்கே ஒரு யோசனை வரும்.
இதை எல்லாம் தாண்டி நீங்கள் இப்படி மாறிகொண்டே இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு தொகை செலவாகிக்கொண்டே இருக்கும். அது உங்கள் வாழ்வின் நிதி அதாவது economically நீங்கள் வலுவிழந்து போவீர்கள். மேலும் "மின்னுவதெல்லாம் பொன்னல்ல "என்ற பழமொழிக்கேற்ப உங்களை ஈர்க்கும் அனைத்தும் உங்களுக்கு தேவையானது அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாய்ப்புகளுக்கும் ஈர்ப்புகளுக்கும் வித்தியாசத்தை அறிய வேண்டும்.
Suggested Reading:
BPயை control செய்ய Simple Tips!!
Suggested Reading:
Morning சீக்கிரம் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்!!
Suggested Reading:
உங்கள் வீட்டில் இந்த First Aid Kit அவசியம்!!!!
Suggested Reading: