கேட்டால், முதலில் யார் இந்த பெண்கள் கிரிக்கெட் பார்க்கிறார்கள்? பத்தில் இரண்டு பேர்? ஏன் நானே சில நேரங்களில் தான் பார்க்கின்றேன். இது எதனால் பார்க்கமாட்டிக்கிறோம் என்ற கேள்வி மனதில் ஓடி கொண்டிருந்தது. அப்போது என்னுடைய சக கிரிக்கெட் விமர்சகரிடம் பேசி கொண்டு இருந்த பொழுது அவர் ஒரு சில காரணங்கள் கூறினார். அது எனக்கும் ஆமாம் என்று தோன்றியது.
Why women cricket is not as famous as men cricket
ஆண்கள் கிரிக்கெட் ஆரம்பிக்கும் முன்னரே பெண்கள் கிரிக்கெட் ஆரம்பித்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஐந்து வருடத்திற்கு முன் இந்த பெண்கள் கிரிக்கெட் கண்டிப்பாக தேறாது கொஞ்ச நாளில் மறந்துபோய்விடும் என்று தான் அனைவரும் நம்பினோம். அந்த நேரத்தில் அது வலுவாகவில்லை. ஆனால் இன்று பெண்கள் கிரிக்கெட் அனைத்து விதத்திலும் வலுவாகி விட்டது முக்கியமாக பொருளாதார ரீதியாக.
முன்னர் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் பெரிதாக வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் அல்லது அதற்கான சந்தர்ப்பங்கள் அமையாமல் இருக்கும். ஆனால் இப்போது அப்படியில்லை இப்போது பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடு சென்று அங்கிருக்கும் premier league விளையாடுகிறார்கள். மேலும் இங்கிலாந்தில் நடக்கும் 100 பால் போட்டியிலும் பங்கேற்கின்றனர். சொல்லப்போனால், பெண்கள் கிரிக்கெட், ஆண்கள் கிரிக்கெட்க்கு ஈடாக போய்க்கொண்டிருக்கிறது.
இப்போதெல்லாம் ஆண்கள் கிரிக்கெட்க்கு ஈடாக பெண்கள் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. உதாரணம் ஆண்களுக்கு ஐந்து premier league நடந்தால், பெண்களுக்கும் நடக்கும். அந்த அளவிற்கு மாறியுள்ளது.
இதெல்லாம் கேட்க சிறிதாக இருந்தாலும் பெண்கள் கிரிக்கெட்டில் நடந்த மிக பெரிய வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். இந்த மாற்றங்கள் எல்லாம் வெளியில் தெரிந்து, நிறைய பெண்கள் கிரிக்கெட்க்குள் வருகிறார்கள். முன்னாடி எல்லாம் பெண்கள் கிரிக்கெட் என்றாலே இதற்கு sponser பண்ண வேண்டுமா? அவசியமா? என்று எல்லாம் யோசிப்பார்கள் காரணம் வீரர்கள் குறைவு அதை தாண்டி போட்டிகளும் குறைவு. ஆனால் இப்போது நிறைய பெண்கள் வருவதை கண்டு sponsership அதிகமாக வருகிறது. நிறைய போட்டிகள் நடக்கிறது. இப்போதெல்லாம் அந்த யோசணை குறைந்துவருகிறது. BCCI ஆண்களுக்கு போடும் contract இப்போது கிட்டத்தட்ட பெண்களுக்கும் அதே போட தொடங்கிவிட்டார்கள்.
எது செய்தால் ஒரு அணி வெற்றிபெறுமோ அது எல்லாம் இப்போது பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தரப்படுகிறது. பெண்கள் கிரிக்கெட் வளராமல் இருந்தற்கு அதில் இருந்த வீரர்களும் காரணம் தான். ஏனென்றால்,ஒரு மனிதர் விளையாட்டை பார்ப்பதற்கு காரணம் "entertainment" " (விறுவிறுப்பு என்பதன் context இங்கே) இருக்க வேண்டும் என்று தான். ஆனால் பெண்கள் கிரிக்கெட்டில் அது இருக்காது ஒரு மாறி மந்தமாக போகும். ஒரு போட்டி என்றால் 4,6 விக்கெட் இருந்தால் தான் விறுவிறு என்று போக வேண்டும் ஆனால் பெண்கள் கிரிக்கெட்டில் அது இருக்காது. போட்டின் score நூறு தொடுவதே அதிகம். கிரிக்கெட் பொறுத்தவரை T 20 போட்டி தான் விறுவிறுவென போகும், அதுவே பெண்கள் கிரிக்கெட்டில் மந்தமாக போகும். ஆனால் இப்போதெல்லாம் அது இல்லை. ரன் ரேட் எல்லாம் ஆண்களுக்கு ஈடாக இருக்கிறது.. முன்னாடி ameture fielding ஆனால் இப்போ அதெல்லாம் மாறிவிட்டது.
இதற்கு முக்கியான காரணம் "fitness". முன்னாடி வீரர்கள் இந்த fitnessக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார்கள். இப்போது நிறைய வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக போட்டியில் பந்தை பிடிப்பது, dive அடித்து பந்தை பிடிப்பது போன்று எல்லாம் easy ஆக செய்கின்றார்கள். வீரர்கள் நிறைய பேர் 6 packs வைக்கின்றார். என்னப்பா இதெல்லாம் முக்கியமா? என்று கேட்காதீர்கள், பெண்கள் கிரிக்கெட்டில் fielding தான் முக்கியமான drawbackகாக இருந்தது. fit ஆக மாறியபின் ameture fielding என்பது இப்போதில்லை. நிறையாக மேம்படுத்துள்ளது.
பெண்கள் கிரிக்கெட் முன்னாடி எல்லாம் மக்களால் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் இருக்காது. அதனாலே அதை யாரும் பெரிதாக பார்க்க முடியாது. ஆனால் இப்போதெல்லாம் நகர்புறத்தில் வைக்கிறார்கள்,இதன் மூலம் நிறைய பேரால் வந்து பார்க்க முடிகிறது.
Entertainment இருந்தால் தான் business ஆகும் அது நடந்தால் தான் sponsership நிறையாக வருகிறது. அதனால் விளையாட்டு எல்லாம் வெளியே தெரியும்.
இதெல்லாம் தான் பெண்கள் கிரிக்கெட் வெளியில் தெரியாமல் இருந்ததற்கு காரணமாக இருக்க வாய்ப்பாக இருக்கெல்லாம்.
இந்த improvement தொடர்ந்தால் கண்டிப்பாக அடுத்த ஒரு இரண்டு அல்லது ஐந்து வருடத்தில் எல்லோரும் பெண்கள் கிரிக்கெட்டை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்கள். அனைவர்க்கும் தெரிய வரும். இந்த மாற்றங்கள் முன்னாடியே வர வேண்டியது ஆனால் இந்த கொரோனா வந்தபிறகு downfall ஆகிவிட்டது. பெண்கள் வெளியில் வர பயந்தார்கள்.
அனைவருக்கும் இருக்கும் ஒரு யோசனை இதில் என்ன சம்பாதிக்க முடியும்? ஆண்களையே வேணாம் என்று தான் நினைக்கும் நிலைமையில் பெண்களுக்கு என்ன எதிர்காலம் இருக்க போகிறது என்ற எண்ணத்தை பாதி உடைத்து விட்டது இந்த கால பெண்கள் கிரிக்கெட். இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்களில் கண்டிப்பாக இதையும் ஒரு ambition ஆக எடுத்து பல பெண்கள் வரக்கூடிய நிலைமையும் வரும்.
Suggested Reading:
தாய் வேலைக்கு செல்வதினால், குழந்தைகளுக்கு ஏற்படும் Impact
Suggested Reading:
kitchenல் இதை செய்து பாருங்கள்! - useful tips & tricks
Suggested Reading:
PMS .. PMS .. PMS அட என்னப்பா அது ?
Suggested Reading:
Overthinkingயை control செய்வது எப்படி?