Musicயை passion ஆக கொண்ட ரக்ஷனா 12 வயது இருக்கும் போதிலிருந்தே மியூசிக் மீது ஆர்வமாக இருந்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு மியூசிக் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருடம் அதை படித்தார். அதன் பிறகு கொரோனா ஊரடங்கு வந்ததால் அவரால் அதை தொடர முடியவில்லை. அதன் பிறகு corres-இல் BA English படித்தார். ஒரு வருடத்திற்கு முன்பு TB வந்ததால் மியூசிக் கல்லூரியில் படிப்பை தொடர முடியவில்லை. அதனால் தற்பொழுது உடம்பு சரியான பிறகு அதை மீண்டும் தொடரலாம் என்று இருக்கிறார். ரக்ஷனா SheThePeople தமிழுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"அந்த TB நேரங்களில் எப்பொழுதும் ரெஸ்ட் எடுப்பேன். 24 மணி நேரமும் ஓய்வெடுக்க வேண்டும், மாத்திரை போட வேண்டும், சாப்பிட வேண்டும், தூங்க வேண்டும். கடுமையான உடம்பு வலியும் இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியாது. அப்பொழுது நம்மால் என்ன செய்ய முடியும் யோசிக்கத்தான் முடியும். YouTube பார்க்கிற பொழுது நம்மளும் இது மாதிரி ஏதாவது பண்ணலாமே என்று தோன்றும். ஏனென்றால் போனில் என்னால் அதை தான் செய்ய முடியும். அதனால் உடம்பு சரியான பிறகு இதெல்லாம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது நான் கொஞ்சம் கொஞ்சமாக என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதி வைக்க ஆரம்பித்தேன். ஒரு 50 பக்கத்திற்கு எழுதி விட்டேன். ஆனால், என்னால் அதை செய்ய முடியவில்லை. உடல் முழுமையாக சரியான பிறகு இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று வைத்திருந்தேன். இப்பொழுதுதான் நான் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய ஆரம்பித்து கொண்டிருக்கிறேன். நான் எழுதி வைத்தது நிறைய இருக்கிறது இன்னும் அதில் பாதி கூட நான் பண்ணவில்லை. இன்னும் உடல்நிலை சரியாக வேண்டும். ஏதாவது ஒரு நாய் போனால் வேறு ஒன்று வந்து கொண்டே இருப்பதால் என்னால் கண்சிஸ்டெண்டாக(consistent) எதையும் செய்ய முடியவில்லை. இல்லையென்றால் இன்னமும் ரெகுலராக(regular) இதை செய்து கொண்டிருப்பேன்"
கன்டென்ட் கிரியேஷனில்(content creation) உள்ள கஷ்டங்கள்:
கன்டென்ட் கிரேஷனில் முதலில் நமக்கு ஐடியா கிடைத்தால் கூட அதை வீடியோவாக மாற்றுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதை எப்படி நகைச்சுவையாக மாற்றுவது என்பது ஒரு மிகப்பெரிய டாஸ்க்(task). நமக்கு கன்டென்டே இருந்தால் கூட அதை நாம் நகைச்சுவையாக காட்டினால் தான் மக்கள் அதைப் பார்த்து சிரிப்பார்கள், நல்லா இருக்கு என்று சொல்லுவார்கள். முதலில் அதுதான் கஷ்டம்.
அதன் பிறகு நடிப்பது, அதற்கான உடையை தேர்ந்தெடுப்பது, அதற்கேற்ற மாதிரி பேக்ரவுண்ட்(background) வைப்பது இது போன்ற விஷயங்கள் கொஞ்சம் கஷ்டம். அதன் பிறகு re-take எடுப்பது மிகவும் கஷ்டம். ஒரு சிறிய முக பாவனை வேறு மாதிரி இருந்தால் கூட நாம் சொல்ல வந்தது வேற மாதிரி ஆகிவிடும். அதற்காக அதை பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.
நல்ல quality-யாக இருக்க வேண்டும். வீடியோ quality ஆக நன்றாக இருக்க வேண்டும். நான் DSLR, iPhone பயன்படுத்துகிறேன். அதன் பிறகு கூட வீடியோக்களை எடிட்(edit) செய்வேன். Filter, Subtitle போட்டு எடிட் செய்த பிறகு பார்ப்பதற்கு இன்னும் நன்றாக இருக்கும். மற்ற influencers கூட இதுபோல்தான் எடிட் செய்வார்கள். YouTube-இல் நிறைய வீடியோக்கள் பார்த்திருக்கிறேன். என்ன செய்கிறார்கள், எப்படி எடிட் செய்ய வேண்டும், background எப்படி வைக்க வேண்டும், லைட்டிங்(lighting) எப்படி வைக்க வேண்டும் இது போன்ற நிறைய விஷயங்களை நான் பார்த்து கற்றுக் கொண்டேன். எனது அண்ணனும் எனக்கு உதவி செய்வார். லைட்டிங்(lighting) பற்றி கற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது இருப்பினும் அதை கற்றுக் கொண்டேன்.
இதுபோன்று ரக்ஷனா பகிர்ந்து கொண்ட பல பயனுள்ள தகவல்கள் Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில்(podcast) இடம்பெற்றுள்ளது. அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
Click here: Women should start supporting other women - Rakshana Anand | Content Creator
Suggested Reading: வாழ்க்கையின் நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது - Life Coach Priya
Suggested Reading: கண்டிப்பாக குழந்தை வளர்ப்பதினால் ஏற்படும் விளைவுகள்-Psychologist Aisha
Suggested Reading: Celebrity Designer Abarnaவின் வாழ்க்கை பயணம்
Suggested Reading: பெண்கள் பயணம் செல்லும் பொழுது இது இல்லாமல் செல்லக்கூடாது-Subha Maastha