Advertisment

பெண்கள் பயணம் செல்லும் பொழுது இது இல்லாமல் செல்லக்கூடாது-Subha Maastha

பெண்கள் பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் ஒரு பெண் பணரீதியாக சொந்தமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும் சுபா அவரின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
Subha Maastha

Images are used from Subha Maastha's Instagram Handle

சுபா மாஸ்தா வீட்டில் உள்ள தடைகளை கடந்து பல இடங்களுக்கு ஒரு நாள் பயணமாக சென்று வருகிறார். SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் அவர் தனது பயணங்கள் பற்றியும் மற்றும் பல பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். முக்கியமாக பெண்கள் இதுபோன்று பயணம் செய்யும் பொழுது முக்கியமாக எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் பற்றியும் பணரீதியாக சுதந்திரமாக இருப்பது எவ்வளவு நல்லது என்பதை பற்றியும் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

எங்காவது பயணம் செல்லும் பொழுது முக்கியமாக என்னென்ன விஷயங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்?

கண்டிப்பாக ஒரு sports shoe எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் மழைக்காலங்களில் வெளியே செல்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக rain coat இல்லாமல் செல்லக்கூடாது. தண்ணீர் பாட்டிலும் மிகவும் முக்கியம். பயணம் செய்வதற்கு பணம் என்பது ரொம்ப முக்கியமானது. உங்கள் gpay, paytm-இல் லட்ச லட்சமாக பணம் இருந்தாலும் கையில் பணம் எடுத்துச் செல்வது மிகவும் முக்கியமான ஒன்று. நான் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். 

ஒருமுறை நான் 800 ரூபாய் தான் கையில் எடுத்துச் சென்றேன். அங்கு டவர் சுத்தமாக கிடைக்கவில்லை. ஆனால் நான் அங்கு சாப்பிட வேண்டும், பெட்ரோல் போட வேண்டும் இந்த மாதிரி வேலைகள் இருந்தது. என்னிடம் கையில் காசு இல்லாததால் நான் அங்கு சிறிது கஷ்டப்பட்டேன். அதனால் யாராக இருந்தாலும் பயணம் செய்யும்போது கையில் பணம் வைத்திருப்பது அவசியமாகிறது.

Advertisment

Subha Maastha

அதேபோல் ஒரு எக்ஸ்ட்ரா(extra) உடையையாவது எடுத்துச் செல்ல வேண்டும். ஏனென்றால், நாம் ஒரு சில இடங்களுக்கு செல்வோம் அங்கு தண்ணீர் இருக்குமா என்பது தெரியாது, மழை வருமா என்று தெரியாது, அதனால் அவசரத்திற்கு ஒரு டிரஸ் வைத்திருப்பது நல்லது. மற்றொரு முக்கியமான விஷயம் நாப்கின்கள். எப்பொழுது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் இதை எல்லாம் நான் மிகவும் முக்கியமான விஷயம் என்ன சொல்லுவேன். 

பணரீதியாக சுதந்திரமாக இருப்பது எவ்வளவு முக்கியம்?

Advertisment

எனது வீட்டில் நான் எனக்காக பணம் கொடுங்கள் என்று கேட்டு மூன்று வருடங்கள் ஆகிறது. நான் ஒரு iPhone வாங்கினேன். அதை மூன்று வருடங்களாக வீட்டில் அடம் பிடித்து வாங்கினேன். அதன் பிறகு தான் எனது டிஜிட்டல் பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு நான் அவர்களிடம் எதற்குமே பணம் கேட்டது கிடையாது. ஏனென்றால் நாம் ஏதாவது கேட்டால் அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதில் சொன்னால் தான் நமக்கு பணம் தருவார்கள். இப்பொழுது நமது கையில் பணம் இருந்தால் நமக்கு அவ்வளவு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது. நமக்கு பிடித்ததை நாம் செய்யலாம். அதனால் பணரீதியாக சுதந்திரமாக இருப்பது அவசியமான ஒரு விஷயம். 

Subha Maastha

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள், என்ன தொழில் செய்கிறீர்கள் என்பதெல்லாம் உங்களின் விருப்பம். ஆனால் சிறிதாக கொஞ்சம் பணமாவது நமக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கு மரியாதை கிடைக்கும். நமக்கு நமது மீது ஒரு நம்பிக்கை வரும். 

Advertisment

நான் சம்பாதித்த பணத்தில் ஒரு கேமரா வாங்கினேன். எனது வீட்டில் யாரிடமும் எதற்காக பணம் வாங்கவில்லை. எனக்கு தேவையான ஒரு விஷயத்தை நான் வாங்கிக் கொண்டேன். இதுவே என்னிடம் காசு இல்லை என்றால் இன்று வரை நான் அதை வாங்கி கொடுங்கள் என்று கெஞ்சி கொண்டிருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்று வரை நான் பதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் பணத்தில் நான் வாங்கி இருந்தால் இப்பொழுது வரை அதை குத்தி காமித்து இருப்பார்கள். என் பணத்தில் வாங்கினது தானே என்று சொல்லுவார்கள். அந்த பிரச்சினை இப்பொழுது எனக்கு இல்லாத காரணம் என்னவென்றால் நான் பணரீதியாக சுதந்திரமாக இருக்கிறேன் என்பதால் தான்.

சுபா தனது வாழ்க்கை பயணம் பற்றியும் மற்றும் பல பயனுள்ள தகவல்களையும் Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில்(podcast) பகிர்ந்து கொண்டார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: Tips for women to travel - Subha Maastha | Travel Vlogger | Influencer

Advertisment

Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)

Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி

Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)

Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content

financial independence Subha Maastha travel tips
Advertisment