பல ஆண்டுகளாக இல்லத்தரசியாக இருந்த Priya Dhandapani தனது வாழ்க்கையின் நோக்கத்தை கண்டறிந்து தற்பொழுது ஒரு லைஃப் கோச்சாக(life coach) மாறியிருக்கிறார். SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் அவர் மக்களுக்காக நிறைய பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவற்றுள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது வாழ்க்கையின் அர்த்தத்தை/ திறமையை எப்படி கண்டுபிடிப்பது?
சில சமயம் நமது திறமை என்ன என்பது நமக்கு தெரியாது. சிலர் சிறு வயதிலிருந்து ஒரே விஷயத்தை செய்வது மூலம் அவர்களின் திறமையை கண்டுபிடித்து இருப்பர். ஆனால், சிலபேருக்கு அதை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கக்கூடும். அவர்கள் "நான் எல்லாமே செய்கிறேன், நான் எல்லாமே நன்றாக செய்கிறேன், ஆனால் எதில் நான் சிறந்தவர் என்று என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறுகின்றனர். அந்த மாதிரி சமயத்தில் நீங்கள் life coach இடம் உதவி பெற்றுக் கொள்ளலாம்.
இல்லை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு எது செய்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அது எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம், "இதை செய்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கு, இந்த வேலை என்னை மகிழ்ச்சி படுத்துகிறது, உதாரணத்திற்கு இப்பொழுது நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்த வேலைக்கு செல்லும் போது காலையில் நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். சில சமயம் பணரீதியாகவும், வாழ்க்கையின் பல சூழ்நிலைகளாகவும் நமக்கு பிடித்ததை நாம் செய்ய முடியாமல் போகிறது. ஆனால், உங்கள் திறமையை கண்டுபிடிக்கும் போது நீங்கள் எதை செய்யும் பொழுது அதிக உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பதை பார்க்க வேண்டும்.
உங்களுக்கு எது வேண்டாமானாலும் பிடித்திருக்கலாம், சமைப்பது, வரைவது போன்ற எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதை எப்படி பணமாக மாற்ற முடியும் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் வாழ்வதற்கான பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால், உங்களுக்கு உங்கள் திறமையின் மூலம் பணம் சம்பாதிக்க வழிகள் தெரியவில்லை என்றால் Life Coach உங்களுக்கான வழியை காட்டுவார்கள்.
கவனம் சிதறாமல் எப்படி ப்ரொடக்டிவாக(productive) இருப்பது?
நாம் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நான் புத்தகம் படிப்பேன், இந்த நேரத்தில் எனது வேலையை முடிப்பேன், இந்த நேரத்தில் சமைத்து முடிப்பேன் என்பதையெல்லாம் ஒரு நாள் முன்பே திட்டமிட வேண்டும். நாம் productive ஆக இருக்க வேண்டும் என்று நினைப்போமே தவிர அதற்காக ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டோம். Habit tracker, to-do list மூலம் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை தீர்மானித்து விட்டு அதை செய்து முடித்தீர்களா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
இது பார்ப்பதற்கு எளிதாக தான் இருக்கும். ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை செய்கிறோம் என்று கேட்டால் பாதிப்பேர் அதை செய்திருக்க மாட்டோம். நமக்கு எல்லாமே தெரியும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அதை நாம் செய்கிறோமா? அதற்கான முயற்சி எடுக்கிறோமா? கிடையாது. நிறைய நேரம் நாம் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுகிறோம். அதன் பிறகு மற்ற விஷயங்களை செய்வதற்கு நேரம் இல்லை என்று சொல்கிறோம். அதனால், உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதை திட்டமிட்டு செய்ய வேண்டும்.
அனைவருக்கும் கடவுள் 24 மணி நேரம்தான் தந்திருக்கிறார். பலர் அதை பயன்படுத்தி பெரிய ஆளாக வளர்ந்துள்ளனர். ஆனால், நாம் அந்த 24 மணி நேரமே போதவில்லை என்று சொல்கிறோம். Productivity நமது மைண்ட் செட்டில்(mind set) இருந்து ஆரம்பிக்கிறது. நான் இந்த விஷயங்களை எல்லாம் செய்து முடிப்பேன் என்று நேர்மறையான எண்ணத்துடன் அதை செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒரே நாளில் நீங்கள் நினைப்பதை எல்லாம் செய்து விட முடியாது. அதனால் சின்ன சின்ன முன்னேற்றங்கள் செய்ய வேண்டும்.
பிரியா தண்டபாணி இது போன்ற பல பயனுள்ள தகவல்களை Thuglife Thalaivi என்ற பாட்கேஸ்டில்(podcast) பகிர்ந்துள்ளார். மேலும், அவர் வாழ்க்கை பயணத்தை பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார். அதனைக் கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
Click Here: Journey of Homemaker to Life Coach - Priya Dhandapani | Life Coach | Author | Mentor
Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: உங்கள் வாழ்க்கை துணையை கவனமாக தேர்ந்தெடுங்கள் - Shrutika Arjun
Suggested Reading: பெண்கள் பெண்களை ஆதரிப்பதால் ஏற்படும் நன்மைகள்
Suggested Reading: மற்றவர்கள் செய்வதற்காக இந்த நான்கு விஷயங்களை செய்யாதீர்கள்