Advertisment

கண்டிப்பாக குழந்தை வளர்ப்பதினால் ஏற்படும் விளைவுகள்-Psychologist Aisha

மிகவும் கண்டிப்பாக குழந்தையை வளர்ப்பது பல விதங்களில் ஆபத்தாகும். இப்படி குழந்தை வளர்ப்பதினால் ஏற்படும் விளைவுகளை பற்றி Psychologist Aisha பகிர்ந்து கொண்டார். அதனை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
toxic parenting

Image is used for representational purpose only

இந்திய குடும்பங்களில் பல ஆண்டுகளாக குழந்தைகளை மிகவும் கண்டிப்பாக வளர்ப்பது தான் அவர்களை நல்ல பாதையில் கொண்டு போகும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது ஒரு குழந்தையை மன அளவில் எவ்வளவு பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள தவறுகின்றனர். இப்பொழுது சமூக வலைத்தளங்களின் மூலம் மிகவும் கண்டிப்பாக குழந்தைகளை வளர்ப்பதினால் ஏற்படும் ஆபத்துகளை பற்றிய விழிப்புணர்வு சிலரிடம் இருக்கிறது. இதைப் பற்றி சைக்காலஜிஸ்ட் ஆயிஷாவிடம் கேட்டபோதும் அவர் கண்டிப்பாக குழந்தை வளர்ப்பது பற்றிய சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

பெற்றோர்கள் அதிகமாக என்ன சொல்கிறார்கள் என்றால் எங்களை எல்லாம் அடித்து தான் வளர்த்தார்கள் நாங்கள் நன்றாக தானே இருக்கிறோம் என்று கூறுகின்றனர். அதாவது அவர்களுக்கு இது இரண்டுமே Win-Win situation தான். அவர்கள் அடித்து குழந்தைகள் நன்றாக வளர்ந்தால், அடித்ததால் தான் குழந்தைகள் நன்றாக வளர்ந்தார்கள் என்று கூறுவர். அதுவே குழந்தைகள் நல்ல விதமாக வளரவில்லை என்றால் கண்டிப்பாக இருந்ததால் தான் குழந்தைகள் இப்படி ஆகிவிட்டார்கள் என்று கூறுவர்.

Psychologist Aisha

என்னிடம் கன்சல்டேஷனுக்காக வருபவர்கள் சிறுவயதில் பெற்றோர்கள் அவர்களை அடித்தார்கள் என்று கூறினால் நான் முதலில் அவர்களிடம் உங்கள் பெற்றோர் உங்களை நியாயமான காரணத்திற்காக அடித்தார்களா என்று தான் கேட்பேன். சிலர் நான் இந்த தவறு செய்தேன் அதற்காக என்னை அடித்தார்கள் என்று சொல்லும் பொழுது அந்த அடியை அவர்கள் மனம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால், சில பெற்றோர்கள் அவர்களின் மனநிலையை பொறுத்து காரணம் இல்லாமல் குழந்தைகளை அடிக்கின்றனர். அப்படி இருக்கும்பொழுது குழந்தைகளுக்கு என்ன செய்தால் அவர்கள் அடிப்பார்கள் என்றே புரிந்து கொள்ள முடியாது. அப்பொழுது அந்த குழந்தைகள் அவர்களின் உணர்ச்சிகளை விட மற்றவர்களின் உணர்ச்சிகளுக்காக நடந்து கொள்வர். வேறு யாராவது கோபப்பட்டாலோ அல்லது வருதமாக இருந்தாலோ அவர்கள் பதற ஆரம்பித்து விடுவார்கள். இது போன்ற மனநிலை அவர்களை பெரிய அளவில் பாதிக்கிறது.

Advertisment

பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பாக இருந்தால் குழந்தைகள் பெற்றோர்களுக்கு தெரியாமல் நிறைய விஷயங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பெற்றோர்களுக்கு தெரிந்து செய்தால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் குழந்தைகளை காப்பாற்ற முடியும். பெற்றோர்களுக்கு தெரியாமல் செய்வதால் அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும். நிறைய குழந்தைகள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் எனது பெற்றோர்களிடம் மட்டும் சொல்லாதீர்கள் என்று கூறுங்கள். யாருன்னே தெரியாதவர்களிடம் இப்படி சொன்னால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள்.

child not listening to parent

பெற்றோர்களின் கடமை என்னவென்றால் அவர்கள் இறந்த பிறகும் இந்த உலகத்தில் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும். நீங்கள் இருந்தால்தான் அவர்கள் நன்றாக இருப்பார்கள் என்றால் அங்கேயே நீங்கள் தோற்று விட்டீர்கள். குழந்தைகளுக்கு சுயமாக சிந்திக்க சொல்லி தர வேண்டும். எது சரி, எது தவறு என்று அவர்களுக்கு யோசிக்க கற்றுத் தர வேண்டும். சரி தவறு என்று சொல்வது நீங்கள் சொல்வதுதான் சரி என்று கிடையாது. உலகத்தில் நிறைய சரி இருக்கிறது. ஆனால், நான் சொல்வதை செய்தால் மட்டும்தான் நீ நல்ல பிள்ளை, இல்லை என்றால் கெட்ட பிள்ளை என்று சொன்னார்கள் என்றால் நாம் அதற்குள் அடங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பெற்றோர்களே சில சமயம் தவறாக கூட சொல்லி தரலாம். அதனால் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். சுயமாக சிந்தித்து செயல்படுங்கள். பெற்றோர்கள் பார்க்கவில்லை என்பதற்காக சில விஷயங்களை செய்யாதீர்கள். உங்களுக்கு அது தவறு என்று தெரியும். இப்படி உங்களுக்கு தவறு என்று தெரிந்த விஷயங்களை பெற்றோர்கள் பார்க்காமல் இருப்பதற்காக செய்யாதீர்கள்.

Advertisment

மிகவும் கண்டிப்பாக குழந்தைகளை வளர்ப்பதினால் ஏற்படும் விளைவுகளை Psychologist Aisha நமக்கு தெரிவித்தார். இது மட்டும் இன்றி Psychologist Aisha காதல் உறவில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்களை Thuglife Thalaivi என்ற பாட்கேஸ்டில்(podcast) பகிர்ந்து கொண்டார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை எழுதவும்.

Podcast Link: Wonder Human Aisha | Psychologist | First Media Psychologist

 

Advertisment

Suggested Reading: காதல் உறவில் இருக்கும் சிவப்பு கொடிகள் Psychologist Aisha

Suggested Reading: சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் Swati Jagdish (Mayas Amma)

Suggested Reading: Life Coach Priya Dhandapaniயின் வாழ்க்கை பயணம்

Advertisment

Suggested Reading: Anupama's Vriksham பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!

 

Psychologist Aisha parenting tips in tamil
Advertisment