சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் Swati Jagdish (Mayas Amma)

Maya's Amma என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சுவாதி ஜெகதீஷ் பல பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அவரின் பயணத்தை பற்றியும் அவர் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் பற்றியும் இதில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
Devayani
27 Feb 2023 புதுப்பிக்கப்பட்டது May 24, 2023 20:10 IST
maya's amma

Images of Swati Jagdish

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கும், பிற விஷயங்களுக்கும் முக்கிய காரணமாக இருப்பது மக்களுக்கு அவர்களின் உடல் பற்றியும், எதிர் பாலினத்தவர்களின் உடல் அமைப்பு பற்றியும் புரிதலும், விழிப்புணர்வும் இல்லாதது தான். நம் சமூகம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு பெண்களை தான் குறை சொல்லுகிறது. ஆண்களை எதிர்த்து பெரும்பாலும் யாரும் எந்த கேள்வியும் கேட்பதில்லை. சொல்லப்போனால் பெண்களுக்கே அவர்களின் உடலைப் பற்றியும், உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வு கிடையாது.

Advertisment

இவ்வாறு இந்த சமூகம் இருக்கையில் தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் பலர் இதை பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதில் மிக முக்கியமான மற்றும் பிரபலமான ஒருவர்தான் சுவாதி ஜகதீஷ். இவரை சுவாதி ஜெகதீஷ் என்று கூறுவதை விட மாயாஸ் அம்மா(Mayas Amma) என்ற அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயர் மூலமாகவே பெரிதும் அறியப்படுகிறார். அவரின் மகளின் பெயர் மாயா என்பதால் இந்தப் பெயரை அவர் வைத்துள்ளார்.

2014இல் அவருக்கு குழந்தை பிறந்ததற்கு பிறகுதான் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும். அதை போலவே சுவாதிக்கும் நிறைய சந்தேகங்கள் இருந்தது. அவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழுக்களில் அவர் இணைந்துள்ளார். அது அவருக்கு ஆதரவாக இருந்தது மட்டுமின்றி வழிகாட்டியாகவும் திகழ்ந்தது.

Swati Jagdish

Advertisment

அவர்  கோயம்புத்தூரில் முதல் லேக்ட்டேசன் கவுன்சிலர் ஆவார். தாய்ப்பால் கொடுப்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது நிறைய பெண்கள் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளனர். இந்த கேள்விகள் பெண்களின் உடம்பை இந்த சமூகம் எப்படி ஒரு கவர்ச்சி பொருளாக பார்க்கிறது என்பதை தெரியப்படுத்தியது. இதன் மூலம் சுவாதி இந்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தினால் மட்டும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்து, அனைவரும் இதைப் பற்றி அறிந்து கொள்வது தான் நல்ல தீர்வு என்ற எண்ணம் வந்தது.

பிறகு 2015இல் சுவாதி மற்ற சில தாய்மார்களுடன் சேர்ந்து இளைஞர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கினர். அதன் பிறகு 2016இல் கோயம்புத்தூர் பேரண்டிங் நெட்வொர்க்(Coimbatore Parenting Network) என்ற ஆர்கனைசேசனை தொடங்கினர். இதில் குழந்தை பிறந்ததற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தம், தாய்ப்பால் கொடுக்கும் முறைகள் மற்றும் தாய்ப்பாலை எப்படி சேகரித்து வைப்பது போன்ற பல விஷயங்களை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கினர்.

அப்பொழுதே பேஸ்புக்கிலும் அவர் இதைப்பற்றி பதிவிட்டு கொண்டிருந்தார். பிறகு 2017இல் இன்ஸ்டாகிராமில் மக்கள் சமூகத்தில் பேச தயங்கும் விஷயங்களைப் பற்றி, ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விஷயங்களைப் பற்றி விழிப்புணர்வவை ஏற்படுத்த தொடங்கினார். அப்பொழுதுதான் மீண்டும் மற்றொரு கோர்ஸ் செய்து செக்ஸ் எடுகேட்டர் ஆனார்.

Advertisment

mayas amma

தற்போது அவர் லேக்ட்டேஷன் கவுன்சிலர், செக்ஸ் எடுகேட்டர் மற்றும் சமூகத்தில் உடம்பு மற்றும் பாலினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் இன்றி மன ஆரோக்கியம், உறவுகள், குழந்தை வளர்ப்பு போன்ற பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு அளித்து வருகிறார். 

இவர் பதிவிடும் செய்திகளும், வீடியோக்களும் பலருக்கு வர பிரசாதமாக உள்ளது. பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கிறது. ஏனென்றால் நம் சமூகத்தில் இதைப் பற்றி எல்லாம் பேசுவது தவறு என்று மூடி வைத்து இருப்பதால் பலருக்கு எது சரி, எது தவறு என்று விழிப்புணர்வு இல்லாமல் போகிறது. அப்படி இருப்பவர்களுக்கு இவர் பதிவிடும் விஷயங்கள் உதவியாக இருந்து வருகிறது.

Advertisment

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மக்களுக்கு இது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்துவது மட்டுமின்றி இவர் ஆன்லைன் கிளாஸ்கள்(Online class) மற்றும் வொர்க் ஷாப்(workshop) மூலம் மேலும் மக்களுக்கு பல விஷயங்களை கற்றுத் தருகிறார். மேலும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் அவர் YouTube சேனலும் வைத்திருக்கிறார். அவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழ் மற்றும் மலையாள YouTube சேனல் அந்த மொழி மக்களுக்கு புரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.Suggested Reading: Anupama's Vriksham பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!

Suggested Reading: உடலுறவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் டாக்டர் நிவேதிதா

Suggested Reading: யார் இந்த fitsio_max சுமையா நாஸ் (Sumaiya Naaz)?

Suggested Reading: தீபா அக்கா (Deepa cwc) சிரிப்புக்கு பின்னாடி இவ்வளவு சோகமா?

#lactation counsellor #sex educator #swati jagdish #mayas amma