Advertisment

இந்த மூன்று விஷயங்களை மக்கள் நம்ப கூடாது - Dietitian Dharshini

Thuglife Thalaivi என்ற podcastஇல் Dietitian Dharshini உடல் ஆரோக்கியம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
dietition dharshini

Images of Dharshini are used from her Instagram Handle(dietitian_dharshini)

Dietitian Dharshini சமூக வலைத்தளத்தில் ஆரோக்கியமான உணவு, டயட்(diet) போன்ற விஷயங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை எது?

முக்கியமாக PCOS. கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் நிறைய பார்ப்பது PCOS, கடந்த ஒரு வருடமாக அதிகமான infertility பிரச்சினையை பார்க்கிறோம். இது இரண்டுமே ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டது என்று நான் சொல்லுவேன். PCOS வரும் பொழுது நமது reproductive system பாதிக்கப்படுகிறது. அதற்கு கூடுதல் எடையை மட்டும் நான் சொல்ல மாட்டேன், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் காரணமாகும். சில சமயம் சரியான எடையில் இருப்பார்களுக்கும் PCOS இருக்கிறது.

PCOS வந்தாலே அவர்களுக்கு கொலஸ்ட்ரால்(cholesterol), டயாபடீஸ்(diabetics) போன்ற பிரச்சினைகள் வரும். நிறைய பேருக்கு விழிப்புணர்வு மூலமாக இப்பொழுது இது தெரிகிறது. இந்த விழிப்புணர்வினால் அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை வைத்து PCOS இருக்க கூடும் என்று கண்டுபிடித்து விடுகின்றனர். மேலும், சிலர் அதை சரி செய்வதற்கான முயற்சியை எடுக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், அடுத்த நிலைக்கு அவர்கள் போவதில்லை. "நான் டயட்டுக்காக இவ்வளவு செலவழிக்க வேண்டுமா, என்னால் அதை எவ்வளவு நாட்களுக்கு செய்ய முடியும் என்று தெரியவில்லை" என்று கூறினார். 

Advertisment

மற்றொன்று தப்பான வழிகாட்டுதல். டயட்(diet) என்ற பெயரில் பலர் நிறைய விஷயங்களை தவறாக புரிந்து கொள்கின்றனர். இப்படி அவர்கள் ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது அவர்கள் உடல் எடையை குறைத்தாலும் அது ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். சிலர் அவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தாலும் கூட அதற்கான உடற்பயிற்சி செய்வது, சரியான உணவை சாப்பிடுவதை போன்ற விஷயங்களை செய்ய தவறுகின்றனர். இது எல்லாமே நமது வாழ்க்கை முறையை சார்ந்து தான் இருக்கிறது. நமது வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே diabetics, cholesterol, PCOS போன்ற பிரச்சனைகள் வராது.

dietition dharshini

மக்கள் நம்பும் மூன்று கட்டு கதைகள் பற்றிய உண்மைகளை சொல்லுங்கள்

Advertisment

1. நிறைய இருக்கிறது முதலில் ஞாபகத்திற்கு வருவது green tea பருகினால் உடல் எடை குறையும் என்பது. இதையெல்லாம் யாரும் நம்ப மாட்டார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், என்னிடம் வரும் மக்களே காலையில் நான் green tea குடிக்கிறேன், ஆனாலும் எனக்கு உடல் எடை குறையவில்லை என்று கூறுகிறார்கள். சூடாக சீரகத் தண்ணீர் போன்ற விஷயங்களை குடித்தால் கூட உங்களது மெட்டபாலிசம்(metabolism) அதிகரிக்கும். இப்பொழுது நாம் ஒரு புது ஆடை அணிகிறோம் என்றால் ஒரு வாரத்திற்கு மேல் அந்த எக்சைட்மென்ட் இருக்காது. அதே போல் தான் நமது உடம்பும் செய்யும். ஆனால், நாம் அதை புரிந்து கொள்வது கிடையாது. 

2. மற்றொரு விஷயம் என்னவென்றால் உடல் பயிற்சி செய்தால் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டு கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது அப்படி கிடையாது. நாம் உடல் பயிற்சி செய்யும் அளவிற்கு உணவிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் பயிற்சி மட்டும் செய்து டயட்டில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும் அது நல்ல பலன்களை தராது.

3. மூன்றாவதாக புரோட்டின் பவுடர்ஸ்(protien). இந்த காலத்தில் அனைவரும் புரோட்டின் பவுடர் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். புரோட்டின் எப்படி வேலை செய்யும் என்றால் நீங்கள் அதற்கு தேவையான உடற்பயிற்சி அல்லது வேலையை தரவில்லை என்றால் அது வெளியேறிவிடும். நிறைய புரோட்டின் எடுத்துக் கொள்வதும், zero carb protein diet என்பதும் தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஓட்ஸ்(oats) சாப்பிடுவது நல்லது என்று கூறுவார்கள். ஆனால் எத்தனை பேர் அதை விரும்பி உண்ணுகிறோம். நான் அதை பரிந்துரை செய்ய மாட்டேன். எப்பொழுதாவது நீங்கள் அதை உண்ணலாம். ஆனால், அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Advertisment

இந்த மூன்று கட்டு கதைகளையும் தான் மக்கள் நம்புகிறார்கள், அதை ஏன் நம்ப கூடாது என்ற காரணத்தையும் நான் கூறிவிட்டேன்.

Dietitian Dharshini அவருடைய வாழ்க்கை பயணம் பற்றி மட்டுமின்றி இது போன்ற பல பயனுள்ள தகவல்களை Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில்(podcast) பகிர்ந்துள்ளார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: "Health should be personalized" - Dharshini | Nutritionist | Dietitian

Advertisment

 

Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)

Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி

Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)

Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content

Dietitian Dharshini PCOS
Advertisment