Advertisment

Thenmozhi Views-இன் ஊக்குவிக்கும் டிஜிட்டல் பயணம்

தனது வாழ்க்கையில் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட தேன்மொழி அவரின் டிஜிட்டல் பயணம் பற்றி SheThePeople தமிழுடன் பகிர்ந்து கொண்டார். அவரின் இந்த ஊக்குவிக்கும் பயணம் பற்றிய தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
Thenmozhi Views

Images are used from Thenmozhi Views Instagram Handle

ஆன்லைனில் ஆங்கிலம் கற்று தரும் தேன்மொழி தனது டிஜிட்டல் பயணத்தை பற்றி SheThePeople Tamil உடன் நடந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதைப்பற்றி கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

Thenmozhi Views-இன் ஊக்குவிக்கும் டிஜிட்டல் பயணம்

"2015இல் எனது குழந்தைகளுக்காக ஆடை வாங்க நிறைய வலைத்தளங்களை பார்த்து வைப்பேன். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அதை வாங்க மாட்டேன். ஏனென்றால், அப்பொழுது எல்லாம் பெரும்பாலான தளங்களில் ஆடைகளின் விலை அதிகமாக இருந்தது. ஒருநாள் முகப்புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது My Factory என்ற ஒரு பக்கத்தை பார்த்தேன். அதில் குழந்தைகளுக்கான நிறைய ஆடைகள் இருந்தது. ஆடைகள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது, விலையும் கம்மியாக இருந்தது. அதனால் அவர்களிடமிருந்து வாங்கலாம் என முடிவெடுத்து, முதலில் நான்கு முதல் ஐந்து ஆடைகளை வாங்கினேன். அந்த ஆடைகளுடைய quality மிகவும் நன்றாக இருந்தது. சரியான விலையில் நல்ல உடைகள் கிடைத்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அதன் பிறகு இரண்டு வருடங்களாக அவர்களிடம் இருந்துதான் ஆடைகளை வாங்கினேன். 

அப்பொழுது எனது குழந்தைகள் அணிந்திருக்கும் ஆடைகளை பார்த்து என்னுடன் வேலை செய்தவர்கள் எல்லாம் இந்த உடை நன்றாக இருக்கிறது, இது எங்கே இருந்து வாங்கினாய் என்று கேட்பார்கள். அப்பொழுது நான் இதை ஆன்லைனில் வாங்கினேன் என்று கூறினேன். அவர்களும் நல்லா இருக்கே விலை என்ன என்று கேட்டார்கள். மற்ற தளங்களில்‌ உள்ள விலையை விட இங்கு வாங்கின உடைகள் விலை கம்மியாக இருந்தது. நான் அதனுடைய விலையை சொன்ன பிறகு அவர்களும் என்ன அவ்வளவு தானா! கடைகளுக்கு சென்றால் 499, 599 என்று விற்கிறார்கள், இது பரவாயில்லையே என்று கூறினார்கள். அப்பொழுது தான் எனக்கு ஒரு spark வந்தது. நம்மிடம் நிறைய பேர் இதைப் பற்றி கேட்கும் பொழுது நாம் ஏன் இதை ஒரு தொழிலாக செய்யக்கூடாது என்று. அதுவரைக்கும் எனக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற எல்லாம் வந்ததில்லை. நான் ஒரு IT கம்பெனியில் HRஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு தொழிலில் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் அப்பொழுதுதான் வந்தது.

Advertisment

Thenmozhi Views

அப்பொழுது தான் நான் ஒரு முகநூல் பக்கமும், WhatsApp குரூப்பும் Honeypot clothing என்ற பெயரில் ஆரம்பித்தேன். என்னுடைய முதல் முதலீடு ஐந்தாயிரம் ரூபாய். 2017இல் இதை நான் ஆரம்பித்தேன். My Factory பக்கத்தின் ஓனரான ஜெனிபரை தொடர்பு கொண்டு எனக்கு இந்த தொழிலில் ஆர்வம் இருக்கிறது என்று கூறினேன். அவரும் என்னுடன் நிறைய பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் சேர்ந்து வளர ஆரம்பித்தோம். ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஊக்குவித்து உதவினார். அவர் என்னை தாராளமாக இதை செய்யுங்கள் என்று சொல்லியது மட்டுமில்லாமல், அவர் எங்கிருந்து ஆடைகளை வாங்குவார் என்ற விவரங்களையும் எனக்கு சொல்லி வழி நடத்தினார். அப்படிதான் இந்த டிஜிட்டல் பயணம் ஆரம்பித்தது. 

இந்த மார்க்கெட் பற்றி நான் புரிந்து கொண்டேன். கஸ்டமர்(customer) பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தேன். குழந்தைகளுக்கான ஆடை, பெண்களுக்கான ஆடை என அனைத்தையும் என்னால் கொண்டு வர முடிந்தது. அப்படியே எனது முகநூல் பக்கமும், WhatsApp குரூப்பில் வளர ஆரம்பித்தது. இது கூடவே என்னுடைய HR வேலையும் போய்க் கொண்டிருந்தது.

Advertisment

இதில் covid-இன் பொழுது தான் ட்விஸ்ட் வந்தது. ஊரடங்கு என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்பொழுது நான் வேலையை விட வேண்டிய கட்டாயம் வந்தது. அதனால் நான் HR வேலையை விட்டு வெளியே வந்தேன். ஊரடங்கினால் தொழிலை ஒழுங்காக தொடர முடியவில்லை. ஏனென்றால், பர்சேஸிற்கு(purchase) செல்ல முடியவில்லை, எங்கேயும் செல்ல முடியவில்லை, மக்களுக்கு பொருட்களை அனுப்பி வைக்க முடியவில்லை, கொரியர்களும்(courier) மூடப்பட்டது. மக்கள் அன்றாட தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆடைகள் மீது யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் HoneyPot clothing-யை நான் hold-இல் வைத்திருந்தேன்.

நான் HRஆக வேலை செய்த பொழுது நான் புதிதாக வேலைக்கு சேர்ப்பவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் personality development பற்றிய பயிற்சிகளை அளித்தேன். நான் ஊரடங்கில் வீட்டில் இருந்த பொழுது இது எனக்கு உதவியாக இருந்தது. குழந்தைகள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்தார்கள். அப்பொழுது எனது தோழிகள் என்னிடம் வந்து என் குழந்தைக்கு கொஞ்சம் ஆங்கிலம் கற்று தர முடியுமா? என்று கேட்க ஆரம்பித்தனர். குழந்தைகளுக்கு பள்ளிக்கு சென்று ஆங்கிலம் பேசும் வாய்ப்பே இப்பொழுது இல்லை, அதனால் உன்னால் கற்று தர முடியுமா? என்று கேட்டார்கள். நானும் சரி வீட்டில் இருக்கிறோம், HoneyPot clothing தற்பொழுது hold-இல் உள்ளது, HR வேலையையும் விட்டு விட்டோம். நம்மளும் பணம் சம்பாதிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்த வாய்ப்பை நான் எடுத்துக் கொண்டேன். 

Thenmozhi Views

Advertisment

குழந்தைகளுக்கு ஆன்லைனில் ஆங்கிலம் கற்று தர ஆரம்பித்தேன். அது வாய் வழியாக மற்றவர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. அதனால் நிறைய பேர் இந்த ஆங்கில வகுப்பில் சேர தொடங்கினார்கள். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்களும் இதில் ஆர்வம் காட்டினர். இல்லத்தரசிகளும் வீட்டில் இருப்பதால் அவர்களும் இதில் பங்கேற்க ஆரம்பித்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும் என்பதற்காக அவர்களும் வகுப்புகளுக்கு வர ஆரம்பித்தனர்.

அப்பொழுதுதான் டிஜிட்டல் மீடியாவை பயன்படுத்தி அதில் வீடியோக்கள் பதிவிடலாம் என்ற எண்ணம் வந்தது. அதனால் இன்ஸ்டாகிராம் மற்றும் YouTube-இல் சின்ன சின்ன வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்தேன். 2020 ஆரம்பத்தில் நான் ஆரம்பித்த பொழுது இது நிறைய மக்களை சென்றடைந்தது‌. 

YouTube-ஐ விட இன்ஸ்டாகிராமில் நிறைய ரீச் இருந்தது. நான் ஆரம்பித்த பொழுது Waterfalls என்ற பெயரில் ஆரம்பித்தேன். அதன் பிறகு தான் அதை Thenmozhi Views என்று மாற்றினேன். இதனால், எனது பெயரும் எனது பிராண்டின்  பெயரும் ஒன்றாக இருப்பது மட்டும் இல்லாமல் எனது முகம் தான் ஃபேஸ் வேல்யூ(face value) மற்றும் பிராண்ட் வேல்யூவாக இருக்கிறது. இப்படித்தான் டிஜிட்டலில் நான் வளர்ந்து வந்தேன்.

Advertisment

மேலும் தேன்மொழி Thuglife Thalaivi என்ற podcast-இல் இது போன்ற நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: Tips to speak English fluently - Thenmozhi | Digital creator | Thenmozhi Views

Suggested Reading: ஆன்லைன் மூலம் ஆங்கிலம் கற்று தரும் Jayaவின் பயணம்

Suggested Reading: Interview செல்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்-Jaya

Advertisment

Suggested Reading: சுய சம்பாத்தியம் மிகவும் அவசியமானது

Suggested Reading: Working Women - க்கு கண்டிப்பாக உரிமை இருக்கிறது!

 

Thenmozhi Views
Advertisment