Advertisment

ஆன்லைன் மூலம் ஆங்கிலம் கற்று தரும் Jayaவின் பயணம்

Communication Skills, வேலைக்காக நேர்முகத் தேர்வு செல்வதற்கு தேவையான குறிப்புகள், தடையில்லாமல் எப்படி ஆங்கிலத்தில் பேசுவது போன்ற பல பயனுள்ள விஷயங்களை பற்றி ஜெயா Instagramயில் பகிர்ந்து வருகிறார்.

author-image
Devayani
New Update
the expound jaya

Image of Jaya and her YouTube thumbnail

தடையில்லாமல் ஆங்கிலம் எப்படி பேச வேண்டும், வேலைக்கு செல்வதற்கு நம்மை எப்படி தயார் படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற பல விஷயங்கள் பற்றி இன்ஸ்டாகிராமில்(Theeexpound) மக்களுக்கு சொல்லி தருகிறார் ஜெயா. இதுவரை ஜெயா 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். அவரின் இந்தப் பயணம் எப்படி ஆரம்பித்தது என்பதை பற்றி SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

உங்களின் டிஜிட்டல் பயணம் எப்படி ஆரம்பித்தது?

"நான் இரண்டு YouTube சேனல்கள் வைத்திருக்கிறேன். இரண்டு இன்ஸ்டாகிராம் பக்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு YouTuber மற்றும் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பதிவிடுகிறேன். ஒரு பக்கத்தில் வேலைக்கு செல்ல தேவையான விஷயங்களைப் பற்றி பதிவிடுகிறேன். மற்றொரு பக்கம் entertainment பற்றியது. இது அனைத்துமே ஊரடங்கு காலத்தில் தான் ஆரம்பமானது.

ஊரடங்கின்போது அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தோம். திடீரென்று கல்லூரிகள் இல்லை வீட்டில் இருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். சும்மா இருப்பதற்கு பதிலாக ஏதாவது செய்யலாம் என்று தான் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்தேன். இப்பொழுது இன்ஸ்டாகிராமில் 1.25 லட்சத்திற்கும் மேல் ஃபாலோவர்ஸ்(followers) இருக்கிறார்கள். Theeexpound என்ற பக்கத்தில் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்(communication skills), இன்டர்வியூ எப்படி அட்டென்ட் செய்வது, ஆங்கிலம் எப்படி பேசுவது போன்ற விஷயங்களை பதிவிடுவேன். வேலையில் எப்படி சேர்வது, இன்டர்வியூக்கு எப்படி தயாராவது, வேலைக்கு சேர்ந்த பிறகு hike எப்படி வாங்குவது போன்ற பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். தடுமாறாமல் சரளமாக எப்படி ஆங்கிலம் பேசுவது போன்ற விஷயங்களையும் இந்த பக்கத்தில் பதிவிடுவேன்.

Advertisment

இதற்கு நேர் மாறாக மற்றொரு பக்கத்தில் anime பற்றியும், திரைப்படங்களின் ரிவ்யூ போன்ற கண்டென்டுகளை பதிவிடுகிறேன். 

theeexpound

இதை ஆரம்பித்தபோது நான் கம்யூனிகேஷன் பற்றிய வீடியோக்களை பதிவிடுவேன் என்று நினைக்கவில்லை. சும்மா போர் அடிக்குது என்பதற்காக இதை நான் ஆரம்பித்தேன். எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது நான் முதலில் பிளாக் ஹோல்(black hole) என்றால் என்ன என்று சயின்டிஃபிகாக தான் இந்த சேனலை ஆரம்பித்தேன். இதில் ஆரம்பித்து நான் எப்படி தற்போது இருக்கிற தலைப்பை தேர்ந்தெடுத்தேன் என்றால் நான் அந்த அளவிற்கு எக்ஸ்பிரிமெண்ட்(experiment) செய்திருக்கிறேன். 

நாம் இது நமக்கு தெரியும் என்று ஒன்றை ஆரம்பிப்போம், ஆனால் அது அப்படி அமைவதில்லை. சாதாரணமாக செய்யும் விஷயத்தில் தான் நமக்கு நிறைய தெரிய வரும். அப்பொழுது நாம் இதை முயற்சித்து பார்ப்போம் என்று ஒரு விஷயத்தைப் படித்து, தொடர்ந்து அதற்காக வேலை செய்ய வேண்டும். அதற்கு உண்டான பலன்கள் சில நாட்கள் கழித்து வரும்.

Advertisment

அதனால், நாம் எல்லோரும் ஏதாவது ஒன்றை ஆரம்பிக்கும் பொழுது பெரிதாக எதுவும் யோசிக்காமல் அதை ஆரம்பிக்க வேண்டும். அந்த ஃப்ளோவுடன் செல்லும்பொழுது நமக்கு சில விஷயங்கள் பிடித்திருக்கும் அது என்னவென்பதை கண்டுபிடித்து அதற்காக உழைக்க வேண்டும்"

நீங்கள் இப்பொழுது தான் படித்து முடித்துவிட்டு intern ஆக வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இன்ஸ்டாகிராமில் interview பற்றியும், வேலை செய்யும் இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் வீடியோக்கள் பதிவிடுகிறீர்கள். இதையெல்லாம் பற்றி எங்கு கற்றுக் கொள்கிறீர்கள்?

"நான் ஆரம்பிக்கும் பொழுது இதில் நமக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லையே இதில் எப்படி நாம் முன்னேற போகிறோம் என்று நினைத்தேன். ஆனால், போக போக நானே எனக்கு வழி வகுத்து கொண்டேன். எனக்கு இதில் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை, இதில் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது என்று நான் ஒரு சாக்கு சொல்லிவிட்டு வேறு விஷயங்களை நோக்கி சென்று இருக்கலாம். ஆனால், நான் என்ன செய்தேன் என்றால் இது நம்மால் கண்டிப்பாக முடியும் என்று எண்ணி தற்போது அந்த அறிவை எப்படி வளர்த்துக் கொள்ள முடியும் என்று யோசித்தேன். அப்படி பார்க்கும் பொழுது நம்மிடம் இணையதளம் இருக்கிறது, இன்ஸ்டாகிராம் இருக்கிறது, Google இருக்கிறது. இது எல்லாம் இருக்கும் பொழுது நாம் தான் வாய்ப்புகளை தேடி செல்ல வேண்டும். நமக்கு தான் எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது ஆனால் இதைப் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.

Advertisment

the expound

அதனால், இதை எல்லாம் தெரிந்த நிபுணர்களிடம் பேச ஆரம்பித்தேன். சாதாரணமாக அவர்களுக்கும் ஒரு மெசேஜ் அனுப்பி இந்த மாதிரி சூழ்நிலைகள் உங்களுக்கு நடந்திருக்கிறதா என்று கேட்பேன், முக்கியமாக நிறைய HR Instagram பக்கங்களை நான் பின் தொடர்ந்தேன். அவர்களிடம் பேசுவேன். அவர்களிடம் பேசும் பொழுது இந்த மாதிரி விஷயங்கள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பேன். இந்த மாதிரி கேட்பது மட்டும் இல்லாமல் கூகுளில் தேடிப் பார்த்து ஆராய்ச்சி செய்வேன். அதன் பிறகு தான் எனக்கும் ஒரு தைரியம் வந்தது. ஆரம்பத்தில் எனக்கே ஒரு மாதிரி தான் இருந்தது. நமக்கு இதில் எக்ஸ்பிரியன்ஸ் இல்லாததால் இதை மக்களுக்கு எப்படி சொல்ல போகிறோம் என்று நினைத்தேன். ஆனால் networking அப்படிங்கிற ஒரு விஷயம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இப்பொழுது கூட எனக்கு ஏதாவது தெரியவில்லை என்றால் நான் அவர்களிடம் கேட்டு விடுவேன்.

நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது இதை செய்ய ஆரம்பித்தேன். கல்லூரி படிக்கும் பொழுது முழு நேர வேலைக்கு செல்ல முடியாததால் internship மாதிரி ஏதாவது செல்லலாம் என்று நினைத்தேன். சில internship செய்த பிறகு அதன் மூலமாக எனக்கு சில எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்தது. அதை வைத்தும் நான் சில காண்டென்டுகளை பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்"

Advertisment

நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் பொழுது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, பயப்படாமல் ஆங்கிலம் எப்படி பேச வேண்டும் போன்ற விஷயங்களைப் பற்றி Thuglife Thalaivi என்ற podcastயில் ஜெயா பகிர்ந்து கொண்டார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: Tips to improve your communication skills - Jaya | Content Creator

Suggested Reading: திலகவதி - முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞரின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: பல தடைகளைத் தாண்டி சாதித்து வருகிறார் Muthamizh

Suggested Reading: சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத கைவினைப் பொருட்களை விற்று வரும் Srimathi

Suggested Reading: மக்கள் விரும்பும் கன்டென்டுகளை பதிவிடும் ஸ்ரீநிதி(style with Srinidhi)

communication skills Jaya The Expound
Advertisment