Advertisment

Interview செல்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்-Jaya

வேலையில் சேர விரும்புபவர்கள் நேர்காணல் தேர்வுக்கு செல்லும்பொழுது என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை பற்றியும் தடையில்லாமல் ஆங்கிலம் பேசுவதற்கு சில குறிப்புகள் பற்றியும் ஜெயா பகிர்ந்து கொண்டார்.

author-image
Devayani
New Update
the expound

Image of Jaya and her YouTube Thumbnail

ஜெயா Instagram மூலம் ஆங்கிலம் எப்படி பேசுவது, communication skills எப்படி வளர்த்துக்கொள்வது, வேலையில் சேர நம்மை எப்படி மெருகேற்றிக் கொள்வது என பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். SheThePeople தமிழுக்கு அளித்த நேர்காணலில் இது பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

Interviewவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது?

முதலில் நம்முடைய பாடி லாங்குவேஜை(body language) ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். சிலரின் முகத்தை பார்க்கும் பொழுதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிந்துவிடும். நாளைக்கு நீங்கள் இன்டர்வியூக்கு செல்கிறீர்கள் என்றால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முன்பே நீங்கள் பதில்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் நீங்கள் அந்த பதிலை பலமுறை சொல்லி பார்த்திருக்க வேண்டும். உங்களின் கைபேசியை எடுத்து நீங்கள் சொல்லும் பதில்களை ரெக்கார்ட்(record) செய்ய வேண்டும். இப்பொழுது உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்கும் கேள்விக்கு நீங்கள் interviewவில் இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டு அதற்கான பதிலை சொல்லி பார்க்க வேண்டும். இப்படி ஓரளவிற்கு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முன்பே நீங்கள் பதில்களை வைத்திருக்க வேண்டும்.

the expound

Advertisment

Resumeவில் நிறைய பொய்கள் சொல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிந்தால் மட்டும் சொல்லுங்கள்.  இந்த ஒரு கேள்விக்கு மட்டும் ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதுபோன்று செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இப்பொழுது ஒரு இன்டர்வியூவில் ஒரு கேள்வி கேட்கிறார்கள் என்றால் நமக்கு அதைப் பற்றிய அறிவு எவ்வளவு இருக்கிறது, அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நமக்கு இருக்கிறதா என்று பார்ப்பதற்காக கேட்கிறார்கள். நீங்கள் முதலில் கேட்கும் கேள்விக்கு ஏதாவது சமாளித்து விடலாம். ஆனால், அவர்கள் என்ன பார்ப்பார்கள் என்றால் இந்த கேள்விக்கு நீங்கள் ஓரளவுக்கு பதில் சொல்லிவிட்டார்கள், அதனால் அந்த கேள்வியின் தொடர்ச்சியாக அதைப்பற்றிய வேறு கேள்விகளை கேட்பார்கள். அப்படி கேட்டால் மாட்டிக்கொள்ளுவோம். அதனால், ஒரு தலைப்பை எடுத்தால் கூட அதில் உள்ள அடிப்படையான விஷயங்கள் அனைத்தையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்கள் கேட்பதற்கு ஏதாவது உளறிவிட்டு வந்து விடலாம் என்று நினைக்க கூடாது.

நம் மனதில் நினைக்கும் ஆங்கிலம் நன்றாக இருக்கிறது, ஆனால் வெளியே யாரிடமாவது பேசும்பொழுது தடுமாறுகிறோம். இதை கடந்து வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

நம்மால் எழுதும் பொழுது ஒழுங்காக எழுத முடியும், ஆங்கில வார்த்தைகளை வைத்து வரிகள் எல்லாம் ஒழுங்காக எழுதுவோம். ஆனால் நாம் எழுதின வரிகளை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றால் அதை தொடர்ச்சியாக சொல்ல தடுமாறுகிறோம். இது ஒரு இயற்கையான விஷயம் தான்‌. இதை எப்படி கடந்து வர வேண்டும் என்றால் நமக்கு நாமே பேசி பார்க்க வேண்டும். ஆனால், நாம் யோசித்துக் கொண்டு மட்டும் இல்லாமல் நம்மை பார்த்துக் கொண்டு பேச வேண்டும். ஒரு கண்ணாடி அல்லது உங்கள் ஃபோனில் உள்ள கேமராவை ஆன் செய்து உங்கள் கண்களைப் பார்த்து பேச வேண்டும்.

Advertisment

the expound

மற்றவர்களிடம் பேசும்போது அவர்களின் முகத்தை அல்லது கண்களை பார்த்த தான் நாம் பேசுவோம். நீங்கள் கண்ணாடி முன்பு பேசும் பொழுது வேறு யாரையாவது நினைத்து அவர்களுடன் பேசுவது போல பேசி பழக வேண்டும். உதாரணத்திற்கு, மேனேஜரிடம் பேசுவதை போல நினைத்து பார்க்கலாம். இப்படி செய்தால் அடுத்த முறை அந்த நபரை சந்தித்து பேசும்போது உங்களுக்கு நம்பிக்கை தானாக வரும். ஒரு தடவை இதுபோல் பேசி பார்த்துவிட்டு தைரியம் வரவில்லை என்று நினைக்க கூடாது. தொடர்ந்து நீங்கள் இதை செய்தால் மட்டுமே உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  • Internship அல்லது வேலைகளை கண்டுபிடிப்பதற்கான வழிகள் என்ன?
  • பலமுறை இன்டர்வியூ அட்டென்ட் செய்த பிறகும் தேர்ச்சி பெறவில்லை என்றால் நம்மை எப்படி மெருகேற்றிக் கொள்வது?
  • E-mail அனுப்புவதற்கான சில குறிப்புகள்?
Advertisment

இது போன்ற பல கேள்விகளுக்கு ஜெயா Thuglife Thalaivi என்ற podcastயில் பதில் அளித்துள்ளார். அதனைக் கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: Tips to improve your communication skills - Jaya | Content Creator

Suggested Reading: திலகவதி - முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞரின் வாழ்க்கை பயணம்
Suggested Reading: பல தடைகளைத் தாண்டி சாதித்து வருகிறார் Muthamizh
Suggested Reading: சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத கைவினைப் பொருட்களை விற்று வரும் Srimathi
Suggested Reading: மக்கள் விரும்பும் கன்டென்டுகளை பதிவிடும் ஸ்ரீநிதி(style with Srinidhi)

interview communication skills Jaya
Advertisment